• हिन्दी
  • English
  • मराठी
  • বাংলা
  • தமிழ்
  • മലയാളം
  • ગુજરાતી
  • తెలుగు
  • ಕನ್ನಡ
  • ଓଡ଼ିଶା
  • Z Bharat
  • PHH
  • Business
  • WION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /Photos
  • /ரூ.36 லட்சம் கல்வி உதவித்தொகை! விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு.. யாரெல்லாம் பெறலாம்?

ரூ.36 லட்சம் கல்வி உதவித்தொகை! விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு.. யாரெல்லாம் பெறலாம்?

Written ByUmabarkavi K
Published: Oct 14, 2026, 08:30 AM IST|Updated: Oct 14, 2026, 08:51 AM IST
joinshare
TN Govt Announcement: சிறுபான்மையின முஸ்லீம் மாணவ, மாணவிகள் வெளிநாட்டில் முதுகலைப் படிப்பு பயில்வதற்கு கல்வி உதவித் தொகை கோரி விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

TN Govt Announcement: ரூ.36 லட்சம் கல்வி உதவித்தொகை பெற நவம்பர் 9ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. 
 

TN Govt Education Aid1/5

வெளிநாட்டில் கல்வி கற்க உதவித்தொகை அறிவிப்பு

தமிழ்நாடு அரசு 2026-2027 ஆம் ஆண்டில் முஸ்லீம் சிறுபான்மையின மாணவ /மாணவியர்கள் உயர்தர உலகளாவிய கல்வி வாய்ப்புகளை வழங்க ஏதுவாக வெளிநாடு சென்று படிக்கும் 10 முஸ்லீம் மாணவர்களுக்கு, ஒரு மாணவருக்கு அதிகபட்சமாக ரூ.36.00 இலட்சம் வீதம் கல்வி உதவித்தொகை வழங்கப்படவுள்ளது.
TN Govt Education Aid2/5

உதவித்தொகை பெற விண்ணப்பிப்பது எப்படி?

மேலும், வெளிநாடு சென்ற பின் அளிக்கப்படும் விண்ணப்பங்கள் மற்றும் ஏற்கெனவே கல்லூரியில் சேர்ந்தவர்களின் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்படமாட்டாது. இத்திட்டத்தில் விண்ணப்பிக்க www.bcmbcmw.tn.gov.in/welfschemes minorities.htm என்ற இணையதளத்தில் விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து உரிய ஆவணங்களுடன் ஆணையர், சிறுபான்மையினர் நலத்துறை, கலசமஹால் பாரம்பரிய கட்டடம், முதல் தளம், சேப்பாக்கம், சென்னை-600 005. என்ற முகவரிக்கு சமர்ப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
TN Govt Education Aid3/5

கல்வி உதவித் தொகை பெற விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு

இத்திட்டத்தின் கீழ் 2026-2027 ஆம் ஆண்டில் வெளிநாட்டில் முதுகலைப் படிப்பு பயில உள்ள சிறுபான்மையின முஸ்லீம் மாணவ மாணவியர்கள் கல்வி உதவித் தொகை பெற 15.10.2026 வரை விண்ணப்பிக்க கால அவகாசம் வழங்கப்பட்டிருந்தது. தற்போது.இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் 09.11.2026 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
TN Govt Education Aid4/5

ரூ.36 லட்சம் கல்வி உதவித்தொகை பெற யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கும் மாணவ / மாணவியர்கள் 2026-2027 ஆம் கல்வியாண்டில் முதுகலை பட்டப்படிப்பு படிக்க உலகளாவிய QS (குவாக்கரெல்லி சைமண்டஸ்) தரவரிசையில் முதல் 250 இடங்களுக்குள் உள்ள பல்கலைக்கழகங்கள் / கல்வி நிறுவனங்களிடமிருந்து நிபந்தனையற்ற சேர்க்கை கடிதம் ( Unconditional Offer letter) பெற்றிருக்க வேண்டும். பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூ.8 லட்சத்துக்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.
TN Govt Education Aid5/5

எந்தெந்த படிப்புகளுக்கு உதவித்தொகை

பட்டப் படிப்பில் 60 சதவீதம் அல்லது அதற்கு இணையாக தேர்ச்சி சதவீதம் பெற்றிருக்க வேண்டும். மருத்துவம், பொறியியல், மேலாண்மை, அறிவியல், வணிகவியல் & நிதி, மனிதநேயம் & கலை, வேளாண்மை அறிவியல், சுகாதாரம் பயன்பாட்டு அறிவியல், சர்வதேச வணிகம், பொருளாதாரம், நிதி கணக்கியல், மனித நேய படிப்புகள் (Humanities), சமூக அறிவியல், நுண்கலைகள் மற்றும் சட்டம் போன்ற பாடப்பிரிவுகளை தேர்ந்து எடுத்து முதுகலைப் பட்டப்படிப்புக்கான சேர்க்கை பெறுபவராக இருத்தல் வேண்டும்.
TAGS:
TN Govt Schemes

Trending

  • News
  • Photos
  • Videos
திருச்சி : தீபாவளி இனிப்பு தயாரிப்பு - தமிழ்நாடு அரசு கொடுத்த முக்கிய எச்சரிக்கை

திருச்சி : தீபாவளி இனிப்பு தயாரிப்பு - தமிழ்நாடு அரசு கொடுத்த முக்கிய எச்சரிக்கை

2

ஓய்வூதியதாரர்களுக்கு கிடைக்கும் அகவிலை நிவாரணம் எப்படி கணக்கிடப்படுகிறது? இது யாருக்கெல்லாம் கிடைக்கும்?

3

15,000 சிறப்பு பேருந்துகள்.. எங்கெல்லாம்? தீபவாளி, ஆயுதபூஜைக்கு ஊருக்கு செல்பர்களுக்கு குட் நியூஸ்!

4

மூத்த குடிமக்கள், பெண்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு அதிகரிக்கும் மாத ஓய்வூதியம்: UP மாநில அரசு மாஸ்டர் பிளான்

5

தமிழக அரசுப் பள்ளிகளில் 'திறன் ப்ளஸ்' மெகா திட்டம்: 2 முதல் 9 ஆம் வகுப்பு வரை அடிப்படைத் தேர்வு கட்டாயம்

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.