Uttar Pradesh Pension Hike: தமிழகம் உட்பட நாடு முழுவதும் உள்ள பல மாநில அரசுகள் மக்களுக்கான பல நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன. இவற்றில் குறிப்பாக முதியவர்கள் மற்றும் பெண்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகின்றன. அவர்களுக்கு நிதி உதவி வழங்கும் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.
அந்த வகையில், உத்தரப் பிரதேசத்தில் முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் ஆதரவற்ற பெண்களுக்கான ஓய்வூதியம் தொடர்பாக ஒரு முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. உத்தரப் பிரதேச அரசு மாத ஓய்வூதியத் தொகையை உயர்த்தத் திட்டமிட்டுள்ளது.
தற்போது முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் ஆதரவற்ற பெண்களுக்கு மாதம் ₹1,000 ஓய்வூதியம் வழங்கப்பட்டு வருகிறது. இதை ₹1,500 ஆக உயர்த்தத் திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம் முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் ஆதரவற்ற பெண்கள் கூடுதலாக ₹500 பலனைப் பெற முடியும்.
உத்தரப் பிரதேச அரசு ஓய்வூதியத்தை ₹1,000-லிருந்து ₹1,500-ஆக உயர்த்தத் தயாராகி வருகிறது. இதன் விளைவாக, முன்பு ₹12,000-ஆக இருந்த ஆண்டு ஓய்வூதியம் ₹18,000-ஆக உயரும். இந்த உயர்வு, தகுதியுள்ள பயனாளிகளுக்கு முன்பை விட அதிக நிதி உதவியை வழங்கும்.
இருப்பினும், இந்தத் திட்டம் இன்னும் முழுமையாகச் செயல்படுத்தப்படவில்லை. தற்போது இதற்கு முதற்கட்ட ஒப்புதல் மட்டுமே கிடைத்துள்ளது. அமைச்சரவையின் ஒப்புதல் மற்றும் அதிகாரப்பூர்வ அரசாணை வெளியான பின்னரே இது நடைமுறைக்கு வரும்.
உத்தர பிரதேச ஓய்வூதியத் திட்டத்தின் பயனாளிகள் இந்த ஓய்வூதியத்தைப் பெற விரும்பினால், வீட்டிலிருந்தபடியே அதற்கு விண்ணப்பிக்கலாம். அதற்கான விவரங்களை இங்கே காணலாம்.
இந்த திட்டத்தின் பயனை பெற விரும்பும் நபர்கள், வீட்டிலிருந்தபடியே இதற்கு விண்ணப்பிக்கலாம். ஓய்வூதியப் பலன்களைப் பெற, மாநில அரசின் 'ஒருங்கிணைந்த சமூக ஓய்வூதிய இணையதளத்தை' (Integrated Social Pension Portal) பயனாளிகள் பயன்படுத்தலாம். அதற்கான செயல்முறை இதோ:
ஓய்வூதியத்திற்கு மக்கள் ஆஃப்லைனிலும் (நேரடியாகவும்) விண்ணப்பிக்கலாம். ஆன்லைனில் விண்ணப்பிக்கும்போது ஏதேனும் சிக்கல்களை எதிர்கொண்டால், நீங்கள் ஆஃப்லைனில் (நேரடியாகச் சென்று) விண்ணப்பிக்க பரிந்துரைக்கப்படுகின்றது. இதற்கு, உங்கள் அருகிலுள்ள 'ஜன் சேவா கேந்திரா'விற்கு (பொதுச் சேவை மையம்) சென்று விண்ணப்பத்தைச் சமர்ப்பித்துச் செயல்முறைப்படுத்தலாம்.
உத்தர பிரதேச அரசு ஓய்வூதியத் தொகையை அதிகரிப்பதற்கான நடவடிகைகளை எடுத்து வரும் இவ்வேளையில், பிற மாநில அரசுகளும் ஓய்வூதிய அதிகரிப்பை மேற்கொள்ளக்கூடும் என்ற எதிர்பார்ப்பில் மக்கள் காத்திருக்கிறார்கள்.