Sevvai Peyarchi Palangal: இன்னும் 3 நாட்களில் செவ்வாய் பெயர்ச்சி நடக்கவுள்ளது. இதனால் எந்தெந்த ராசிகளுக்கு நன்மை நடக்கும்? யார் சவால்களை எதிர்கொள்வார்கள்? 12 ராசிகளுக்குமான ராசிபலன் இதோ!!
Mars Transit: நவம்பர் 12-ஆம் தேதியன்று, செவ்வாய் சிம்ம ராசிக்குள் பெயர்ச்சி ஆவார். ஜோதிட சாஸ்டிரப்படி, செவ்வாய் தைரியம், ஆற்றல், தன்னம்பிக்கை, உறுதிப்பாடு, நிலம், சொத்து மற்றும் செயல்புரியும் திறன் ஆகியவற்றின் காரணியாகக் கருதப்படுகிறார். சிம்ம ராசிக்கு சூரியன் அதிபதியாக உள்ளார். சூரியனின் ராசியில் செவ்வாய் நுழைவது, லட்சியங்கள், தலைமைத்துவப் பண்புகள் மற்றும் அங்கீகாரம் பெறுவதற்கான விருப்பத்தை அதிகரிக்கக்கூடும். மேஷம் முதல் மீனம் வரை செவ்வாய் பெயர்ச்சியால் அனைத்து 12 ராசிகளிலும் ஏற்படக்கூடிய மாற்றங்களை பற்றி இந்த பதிவில் காணலாம்.
1/13
மேஷம்
செவ்வாய் பெயர்ச்சி மேஷ ராசிக்காரர்களுக்கு அனுகூலமான நன்மைகளை அளிக்கும். வேலை தேடிக்கொண்டிருக்கும் மேஷ ராசிக்காரர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். இந்தக் காலகட்டத்தில் கல்வி, படைப்பாற்றல், காதல் உறவுகள் மற்றும் தனிப்பட்ட திட்டங்கள் தொடர்பான விஷயங்களில் உங்கள் தன்னம்பிக்கை அதிகரிக்கலாம். மாணவர்கள் தங்கள் செயல்பாட்டை மேம்படுத்த அதிக ஊக்கத்துடன் செயல்படுவார்கள். வாழ்வில் மகிழ்ச்சியும், அமைதியும் இருக்கும்.
2/13
ரிஷபம்
செவ்வாய் பெயர்ச்சி ரிஷப ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களை அளிக்கும். வீடு, குடும்பம், சொத்து மற்றும் வாகனங்கள் தொடர்பான விஷயங்களுக்கு முக்கியத்துவம் கூடும். சிலர் வீட்டைப் புதுப்பிப்பது அல்லது சொத்து வாங்குவது குறித்து பரிசீலிக்கலாம். பணிச்சுமை காரணமாக, குடும்பத்திற்குத் தேவையான நேரத்தை ஒதுக்குவதில் சிரமம் ஏற்படலாம். தாயாரின் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள்.
3/13
மிதுனம்
செவ்வாய் பெயர்ச்சி மிதுன ராசிக்காரர்களின் தைரியம், தன்னம்பிக்கை மற்றும் தகவல் தொடர்புத் திறனை மேம்படுத்தும். உங்கள் இலக்குகளை அடைய புதிய முயற்சிகளை மேற்கொள்ளலாம். பணியிடத்தில் இருப்பவர்களுக்கு முக்கியமான பொறுப்புகள் வழங்கப்படலாம். தொழில் செய்பவர்கள் விளம்பர நடவடிக்கைகள் மற்றும் புதிய தொழில்முறைத் தொடர்புகள் மூலம் பயனடையலாம்.
4/13
கடகம்
செவ்வாய் பெயர்ச்சி கடக ராசிக்காரர்களுக்கு அனுகூலமான நன்மைகளை அளிக்கும். குழந்தைகளால் மகிழ்ச்சி உண்டாகும். இந்த காலத்தில் உங்கள் நிதி நிலையை மேம்படுத்தவும், வருமானத்திற்கான புதிய வழிகளைக் கண்டறியவும் நீங்கள் கவனம் செலுத்தலாம். சிலர் பழைய கடன்களை அடைப்பதற்கான முயற்சிகளில் ஈடுபடலாம். வீடு, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். செலவுகள் அதிகரிக்கக்கூடும் என்பதால், உங்கள் வரவு-செலவுத் திட்டத்தை கவனமாகத் திட்டமிடுவது நல்லது. குடும்பத்தினருடன் பேசும்போது வார்த்தைகளைக் கவனமாகக் கையாளவும்.
5/13
சிம்மம்
செவ்வாய் பெயர்ச்சி சிம்ம ராசிக்காரர்களுக்கு பல வெற்றிகளை தேடித்தரும். உங்கள் தன்னம்பிக்கை, பெரிய லட்சியங்கள் மற்றும் உற்சாகம் அதிகரிக்கும். பணியில் வெற்றி பெற வேண்டும் என்ற உந்துதல் தீவிரமடையும். பணியிடத்தில் இருப்பவர்கள் தங்கள் செயல்பாட்டுத் திறனை வெளிப்படுத்த வாய்ப்புகளைப் பெறுவார்கள். வாழ்வில் மகிழ்ச்சி நிலவும்.
6/13
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு செவ்வாய் பெயர்ச்சி லாபகரமானதாக இருக்கும். பயணம் மற்றும் தனிப்பட்ட விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டியிருக்கும். வெளிநாட்டில் பணிபுரிய, படிக்க அல்லது தொழில் செய்யத் திட்டமிடுபவர்கள் அதிக முனைப்புடன் செயல்படுவார்கள். குழந்தைகளால் மகிழ்ச்சி உண்டாகும். வாழ்வில் மகிழ்ச்சியும், அமைதியும் இருக்கும்.
7/13
துலாம்
செவ்வாய் பெயர்ச்சி துலாம் ராசிக்காரர்களுக்கு அனுகூலமான நன்மைகளை அளிக்கும். இந்த சஞ்சாரம் வருமானம், நட்பு மற்றும் நீண்டகால இலக்குகளுக்குச் சாதகமாக அமையும். குழந்தைகள் மூலம் நன்மை உண்டாகும். செல்வாக்கு மிக்க நபர்கள் அல்லது உயர் அதிகாரிகளிடமிருந்து உங்களுக்கு ஆதரவு கிடைக்கலாம். இதுவரை தடைபட்டிருந்த பணிகள் மீண்டும் முன்னேறத் தொடங்கும். தொழில் செய்பவர்களுக்குப் புதிய வாடிக்கையாளர்கள் கிடைக்க வாய்ப்புள்ளது.
8/13
விருச்சிகம்
உங்கள் ராசிக்கு அதிபதியான செவ்வாய், உங்கள் ராசிக்கு பத்தாம் வீட்டில் சஞ்சரிக்கிறார். இது உங்கள் தொழில் மற்றும் பணி வாழ்க்கையில் மிகுந்த செயல்பாட்டை ஏற்படுத்தும். அங்கீகாரம் பெறுவதில் நீங்கள் அதிக ஆர்வம் காட்டுவீர்கள். குடும்பத்தில் அமைதி இருக்கும். தொழில் விரிவாக்கத்திற்கான திட்டங்கள் உருவாகும். உங்கள் பணி உயர் அதிகாரிகளின் கவனத்திற்கு வரும். சக ஊழியர்களுடன் மோதல்களைத் தவிர்க்கவும்.
9/13
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்வதில் ஆர்வம் அதிகரிக்கும். உயர்கல்வி பயிலும் மாணவர்கள் தங்கள் இலக்குகளில் கூடுதல் கவனம் செலுத்த முடியும். வெளிநாட்டுப் பயணங்களைத் திட்டமிடுபவர்களுக்கு நல்ல பலன்கள் கிடைக்கலாம். வீடு, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். உங்கள் தந்தை, வழிகாட்டிகள் அல்லது பெரியவர்களுடன் கருத்து வேறுபாடுகளைத் தவிர்க்கவும்.
10/13
கும்ப ராசிக்காரர்களுக்கு செவ்வாய் பெயர்ச்சி லாபகரமானதாக இருக்கும். வணிகத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் புதிய கூட்டாண்மைகளை உருவாக்க வாய்ப்புள்ளது. பணியிடத்தில் இருப்பவர்கள் தங்கள் சக ஊழியர்களுடன் சுமூகமான உறவை வளர்த்துக்கொள்ள வேண்டியது அவசியம். இரு தரப்பினரும் பிடிவாதமான போக்கைக் கடைப்பிடித்தால், அது வாழ்க்கைத்துணையுடனோ அல்லது வணிகக் கூட்டாளியுடனோ கருத்து வேறுபாடுகளுக்கு வழிவகுக்கலாம்.
கும்ப ராசிக்காரர்களுக்கு செவ்வாய் பெயர்ச்சி லாபகரமானதாக இருக்கும். வணிகத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் புதிய கூட்டாண்மைகளை உருவாக்க வாய்ப்புள்ளது. பணியிடத்தில் இருப்பவர்கள் தங்கள் சக ஊழியர்களுடன் சுமூகமான உறவை வளர்த்துக்கொள்ள வேண்டியது அவசியம். இரு தரப்பினரும் பிடிவாதமான போக்கைக் கடைப்பிடித்தால், அது வாழ்க்கைத்துணையுடனோ அல்லது வணிகக் கூட்டாளியுடனோ கருத்து வேறுபாடுகளுக்கு வழிவகுக்கலாம்.
11/13
கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு செவ்வாய் பெயர்ச்சி லாபகரமானதாக இருக்கும். வணிகத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் புதிய கூட்டாண்மைகளை உருவாக்க வாய்ப்புள்ளது. பணியிடத்தில் இருப்பவர்கள் தங்கள் சக ஊழியர்களுடன் சுமூகமான உறவை வளர்த்துக்கொள்ள வேண்டியது அவசியம். இரு தரப்பினரும் பிடிவாதமான போக்கைக் கடைப்பிடித்தால், அது வாழ்க்கைத்துணையுடனோ அல்லது வணிகக் கூட்டாளியுடனோ கருத்து வேறுபாடுகளுக்கு வழிவகுக்கலாம்.
12/13
மீனம்
செவ்வாய் பெயர்ச்சியின் தாக்கத்தால் மீன ராசிக்காரர்களின் துணிச்சல் அதிகரிக்கும். சவால்களை முறியடிக்கவும், நிலுவையில் உள்ள பணிகளை முடிக்கவும் அதிக ஊக்கம் கிடைக்கும். போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்களுக்கு இந்த பெயர்ச்சி நல்ல உத்வேகத்தைத் தரும். ஏற்கனவே உள்ள கடன்களைக் குறைப்பதற்கான முயற்சிகளை இந்த வேளையில் மேற்கொள்ளலாம். பணியிடத்தில் மோதல்களையும், தேவையற்ற வாக்குவாதங்களையும் தவிர்ப்பது நல்லது.
13/13
பொறுப்புத் துறப்பு
இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.