• हिन्दी
  • English
  • मराठी
  • বাংলা
  • தமிழ்
  • മലയാളം
  • ગુજરાતી
  • తెలుగు
  • ಕನ್ನಡ
  • ଓଡ଼ିଶା
  • Z Bharat
  • PHH
  • Business
  • WION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee Tamil News
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /Photos
  • /சுக்கிரன் உதயம் 2026: இந்த மூன்று ராசிக்காரர்களுக்கு வாழ்க்கையே மாறுது

சுக்கிரன் உதயம் 2026: இந்த மூன்று ராசிக்காரர்களுக்கு வாழ்க்கையே மாறுது

Written BySudharsan G
Published: Oct 12, 2026, 01:55 PM IST|Updated: Oct 12, 2026, 02:00 PM IST
joinshare
Shukra Uday 2026: சுக்கிர பகவான் வரும் அக்டோபர் மாதம் 28ஆம் தேதி உதயமாகிறார். இதனால், இந்த மூன்று ராசிக்காரர்களுக்கு பணி சார்ந்தும், பொருளாதாரம் சார்ந்தும் அதிக பலன்கள் கிடைக்கும். இதுகுறித்து இங்கு விரிவாக காணலாம்.

அக்டோபர் 28ஆம் தேதி அன்று காலை 7.35 மணிக்கு உதயமாகிறார். முன்னதாக, அக்டோபர் 14ஆம் தேதி அன்று நள்ளிரவு 1.20 மணிக்கு சுக்கிரன் அஸ்தமனமாகிறார். இதனால், சுமார் 14 நாட்களுக்கு சுக்கிரன் அஸ்தமன நிலையில் இருப்பார்.

Shukra Uday 20261/6

சுக்கிர பகவான் உதயம்

வேத பஞ்சாங்கத்தின்படி, செல்வச் செழிப்பாக வாழவும்; ஆடம்பரமாக வாழவும் ஒருவரின் ஜாதகத்தில் சுக்கிர பகவான் உச்சத்தில் இருக்க வேண்டும். அந்த வகையில், வரும் அக்டோபர் 28ஆம் தேதி சுக்கிர பகவான் உதயமாக உள்ளார். சுக்கிரன் உதயமாவதன் மூலம் வாழ்க்கையில் சுகபோகங்கள், பொருளாதார நிலை மற்றும் காதல் விவகாரங்களில் சாதகமான மாற்றங்கள் ஏற்படுக்கூடும்.
Shukra Uday 20262/6

சுக்கிர பகவான் உதயத்தால் 3 ராசிகளுக்கு பலன்

பஞ்சாங்க கணிப்பின்படி, சுக்கிர பகவான் அக்டோபர் 14 அன்று நள்ளிரவு 1.20 மணிக்கு அஸ்தமனமாகி, பின்னர் அக்டோபர் 28ஆம் தேதி அன்று காலை 7.35 மணிக்கு உதயமாகிறார். இதனால் சுக்கிரன் 14 நாட்கள் அஸ்தமன நிலையில் இருப்பார். சுக்கிர பகவான் உதயத்தால் எந்தெந்த ராசிகள் பலன் பெறுகிறார்கள் என்பதை இங்கு காணலாம்.
Shukra Uday 20263/6

மேஷ ராசிக்காரர்களுக்கான பலன்கள்

மேஷ ராசிக்காரர்களுக்கு சுக்கிரனின் உதயம் தொழிலில் முன்னேறுவதற்கான புதிய சாத்தியங்கள் உருவாகும். பணியிடத்தில் கடின உழைப்புகளுக்கு பாராட்டுகள் வந்துசேரும். உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பும் ஆதரவும் கிடைக்கும். வருமானத்தை அதிகரிப்பதற்கான திட்டங்களைச் செயல்படுத்த இது முக்கியமான காலகட்டமாக இருக்கும்.
Shukra Uday 20264/6

துலாம் ராசிக்காரர்களுக்கான பலன்கள்

துலாம் ராசியின் அதிபதியே சுக்கிரன் என்பதால் இந்த உதயம் இவர்களுக்கு மிகவும் சிறப்பானதாகக் கருதப்படுகிறது. பணியிடத்தில் பதவி உயர்வு, புதிய பொறுப்புகள் அல்லது சிறந்த வேலை வாய்ப்புகள் கிடைக்க வாய்ப்புகள். தொழில், வணிகம் செய்பவர்களுக்குப் பதிவு வாடிக்கையாளர்களும், லாபகரமான ஒப்பந்தங்கள் வந்துசேரும். நிதி விவகாரங்களில் எடுக்கும் சரியான முடிவுகள் எதிர்காலத்தில் நல்ல பலன்களை கொடுக்கும்.
Shukra Uday 20265/6

கும்ப ராசிக்காரர்களுக்கான பலன்கள்

கும்ப ராசிக்காரர்களுக்கு தொழில் மற்றும் நிதி சார்ந்த விஷயங்களில் சாதகமான வாய்ப்புகள் வரக்கூடும். உத்தியோக்தில் இருப்பவர்களுக்கு புதிய பொறுப்புகள், பதவி உயர்வு அல்லது ஊதிய உயர்வு கிடைக்கலாம். கலை, படைப்பாற்றல், தொழில்நுட்பத் துறைகளில் உள்ளவர்களுக்குத் தங்களின் திறமையை வெளிப்படுத்த நல்ல களம் அமையும். வணிகத்தில் உள்ளவர்களுக்கு புதிய தொடர்புகள் மூலம் ஆதாயம் உண்டாகும். இருப்பினும், வீண் செலவுகள், முதலீடுகளில் சற்று கவனமாக இருக்க வேண்டும்.
Shukra Uday 20266/6

பொறுப்பு துறப்பு

இங்கு கொடுக்கப்பட்டிருக்கும் தகவல்கள் ஜோதிடக் கணிப்புகள், பொதுவான நம்பிக்கைகளின் அடிப்படையில் எழுதப்பட்டவை. இதனை Zee Tamil News உறுதிப்படுத்தவில்லை.
TAGS:
Rasipalan

Trending

  • News
  • Photos
  • Videos
புதன் பார்வை ஆரம்பம்.. இன்று முதல் 3 ராசிகளுக்கு பொற்காலம்.. ராஜவாழ்க்கை, வெற்றி!

புதன் பார்வை ஆரம்பம்.. இன்று முதல் 3 ராசிகளுக்கு பொற்காலம்.. ராஜவாழ்க்கை, வெற்றி!

2

தமிழகத்தில் 9 மாவட்டங்களில் மழை வெளுக்கும்.. உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி!

3

ஜந்தர் மந்தரில் இனி நோ போராட்டம்... 3 இடங்களில் மட்டுமே அனுமதி - காரணம் என்ன?

4

பல ஆண்டுகள் போராட்ட சின்னமாக இருந்த ஜந்தர் மந்தர் மூடல்.. டெல்லி போலிஸ் முடிவால் புதிய சர்ச்சை

5

டெல்லி மெட்ரோவில் அதிர்ச்சி சம்பவம்: சீட் தகராறில் உயிரிழந்த பயணி! 2 பேர் கைது

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.