• हिन्दी
  • English
  • मराठी
  • বাংলা
  • தமிழ்
  • മലയാളം
  • ગુજરાતી
  • తెలుగు
  • ಕನ್ನಡ
  • ଓଡ଼ିଶା
  • Z Bharat
  • PHH
  • Business
  • WION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee Tamil News
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /ஆன்மீகம்
  • /புதன் பார்வை ஆரம்பம்.. இன்று முதல் 3 ராசிகளுக்கு பொற்காலம்.. ராஜவாழ்க்கை, வெற்றி!

புதன் பார்வை ஆரம்பம்.. இன்று முதல் 3 ராசிகளுக்கு பொற்காலம்.. ராஜவாழ்க்கை, வெற்றி!

Budhan Nakshatra Peyarchi: புதன் நட்சத்திர பெயர்ச்சி இன்று நடந்துள்ளது. விசாக நட்சத்திரத்தில் புதன் பெயர்ச்சி அடைந்துள்ளார். இதனால், நவம்பர் மாதம் வரை சில ராசிகளுக்கு வெற்றி கிடைக்கும். நினைத்த காரியங்கள் நிறைவேறும். எனவே, அவை என்னென்ன ராசிகள் என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்ப்போம்.

Written ByUmabarkavi K
Published: Oct 12, 2026, 03:20 PM IST|Updated: Oct 12, 2026, 03:38 PM IST
joinshare
புதன் பார்வை ஆரம்பம்.. இன்று முதல் 3 ராசிகளுக்கு பொற்காலம்.. ராஜவாழ்க்கை, வெற்றி!

About the Author

Umabarkavi K

Umabarkavi K

I am Uma Barkavi as a journalist with 5 years of experience across various media platforms, including TV and digital media. Since 2021, she has covered Tamil Nadu, lifestyle, national, political, and astrology news. She focuses on delivering engaging digital news content in a reader-friendly and informative format.
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
தவெகவில் பிரபல நடிகை? அவரே கொடுத்த விளக்கம்!

தவெகவில் பிரபல நடிகை? அவரே கொடுத்த விளக்கம்!

2

Explained | "ஜனநாயகத்தை காப்போம்" டெல்லியில் தொடங்கிய March for Democracy போராட்டத்தின் முழு பின்னணி

3

புதன் பார்வை ஆரம்பம்.. இன்று முதல் 3 ராசிகளுக்கு பொற்காலம்.. ராஜவாழ்க்கை, வெற்றி!

4

தமிழகத்தில் 9 மாவட்டங்களில் மழை வெளுக்கும்.. உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி!

5

ஜந்தர் மந்தரில் இனி போராட அனுமதி இல்லை... மூன்று முக்கிய காரணங்கள் என்னென்ன?

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

Budhan Nakshatra Peyarchi: ஜோதிடத்தில் ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் தங்கள் ராசி, நட்சத்திரத்தை மாற்றி வருகின்றன. கிரகங்களின் பெயர்ச்சியின்போது 12 ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும்.  அந்த வகையில், புதன் பெயர்ச்சி இன்று நடந்துள்ளது. புதன் பகவான் இன்று (அக்டோபர் 12) விசாக நட்சத்திரத்தில் பெயர்ச்சி அடைந்துள்ளார். 

நவம்பர் 3ஆம் தேதி வரை விசாக நட்சத்திரத்தில் புதன் நிலைத்திருப்பார். விசாக நட்சத்திரத்தின் அதிபதியாக குரு இருக்கிறார். எனவே, குருவின் நட்சத்திரத்தில் புதன் அமர்வது 12 ராசிகளுக்கும் அற்புதமான பலன்களை கொடுக்கும். ஆனால், புதனின் நட்சத்திர பெயர்ச்சியால் நவம்பர் 3ஆம் தேதி வரை சில ராசிக்காரர்களுக்கு  நேர்மறையான ஆற்றலை உண்டாகும். எனவே, அவை என்னென்ன ராசிகள் என்பது குறித்து பார்ப்போம்.

மிதுனம் (Gemini Zodiac Sign)

புதன் நட்சத்திர பெயர்ச்சியால் மிதுன ராசிக்காரர்களுக்கு சாதகமாக அமையும். நினைத்த காரியங்கள் நிறைவேறம். வெற்றி வாய்ப்புகள் அதிகம் கிடைக்கும். பணியிடத்தில் புதிய பொறுப்புகள் கிடைக்க வாய்ப்புள்ளது. இல்லத்தில் நல்ல காரியம் நடைபெறும். ஆதாயம் தரும் வேலைகளில் ஈடுபாடு உண்டாகும். மனதில் நினைத்ததை செய்து முடிப்பீர்கள். தொழில் வளர்ச்சிக்கு நண்பர்கள் உதவி செய்வர். 

குழந்தைகளால் மகிழ்ச்சியான சூழல் ஏற்படும். புதிய முதலீடுகளில் கவனம் வேண்டும். வெளிவட்டத்தில் பாராட்டுகள் கிடைக்கும். நிகழ்கால தேவைகள் பூர்த்தியாகும். எதிர்க்கருத்து கூறியவர்கள் மனம் மாறுவார்கள். கூட்டு முயற்சியில் வெற்றி கிடைக்கும். குடும்ப பிரச்சனைகள் விலகும். விலகி சென்றவர்கள் விரும்பி வருவார்கள். வீடு, வாகனம், நகை வாங்கும் யோகம் உங்களுக்கு இருக்கும்.

மேலும் படிக்க: ஐப்பசி மாத ராசிபலன்: சூரிய பெயர்ச்சியால் அதிர்ஷ்டம் பெறும் 3 ராசிகள்!

கன்னி (Virgo Zodiac Sign)

கன்னி ராசிக்காரர்களுக்கு புதனின் பெயர்ச்சி புதிய வழிகளை திறக்கக் கூடும். இந்த காலக்கட்டத்தில் பணியில் இருப்பவர்களுக்கு நேர்மறையான ஆற்றல் உண்டாகும். உங்கள் கடின உழைப்பிற்கு ஏற்ற பலன்களை பெறுவீர்கள். உத்தியோக பணிகளில் மாற்றமான சூழ்நிலைகள் காணப்படும். மனம் மகிழும்படியான செய்திகள் கிடைக்கும். கடன் தொடர்பான விஷயங்களில் சிந்தித்து முடிவெடுக்கவும். 

சமூகப் பணிகளில் மேன்மை உண்டாகும். வியாபாரப் பணிகளில் இருந்து வந்த நெருக்கடிகள் குறையும். கருத்துக்களை வெளிப்படுத்தும்போது சிந்தித்து செயல்படவும். வழக்கு சார்ந்த விஷயங்களில் பொறுமை வேண்டும். சகோதரர்களால் அனுகூலம் உண்டாகும். வரவுகளால் சேமிப்புகள் அதிகரிக்கும். பெண்கள் வழியில் அனுசரித்துச் செல்லவும். சுப காரியங்களில் இருந்த பிரச்சனைகள் விலகும்.

மேலும் படிக்க: சுக்கிரன் உதயம் 2026: இந்த மூன்று ராசிக்காரர்களுக்கு வாழ்க்கையே மாறுது

தனுசு (Sagittarius Zodiac Sign)

புதன் நட்சத்திர பெயர்ச்சி தனுசு ராசிக்காரர்களுக்கு செல்வம், அதிர்ஷ்டம் பெறும். உங்களுக்கு இருந்து வந்த சிறுசிறு பிரச்னைகள் தீரும். அரசுப் பணிகளில் இருந்து வந்த கால தாமதங்கள் குறையும். விவசாயப் பணிகளில் மேன்மையான சூழல்கள் ஏற்படும். கல்விப் பணிகளில் மாற்றங்கள் உருவாகும். விளையாட்டு விஷயங்களில் ஈடுபாடு உண்டாகும். எதிர்காலம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். 

உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும். உத்தியோகப் பணிகளில் புதுவிதமான சிந்தனைகள் உருவாகும். பெரியோர்களின் ஆலோசனைகள் மற்றும் ஆதரவுகள் கிடைக்கும். கடன் பிரச்சனைகள் குறைவதற்கான வாய்ப்புகள் ஏற்படும்.  மேன்மையான சூழல்  உருவாகும். உடனிருப்பவர்களின் விருப்பங்களை நிறைவேற்றி வைத்து மனம் மகிழ்வீர்கள். உடல் ஆரோக்கியத்தில் இருந்து வந்த இன்னல்கள் குறையும்

(பொறுப்பு துறப்பு: இங்கு கொடுக்கப்பட்டிருக்கும் தகவல்கள் ஜோதிடக் கணிப்புகள், பொதுவான நம்பிக்கைகளின் அடிப்படையில் எழுதப்பட்டவை. இதனை Zee Tamil News உறுதிப்படுத்தவில்லை)

மேலும் படிக்க: அக்டோபர் 19ல் சுக்கிரன் அஸ்தமனம்: இந்த 4 ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட்.. தொட்டதெல்லாம் துலங்கும்!
 

Add Zee News as a Preferred Source
TAGS:
Peyarchi