• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /Photos
  • /ரயில் பயணிகளே அலர்ட்! 5 மெமு ரயில்கள் ரத்து.. தெற்கு ரயில்வே அதிரடி

ரயில் பயணிகளே அலர்ட்! 5 மெமு ரயில்கள் ரத்து.. தெற்கு ரயில்வே அதிரடி

Written ByUmabarkavi K
Published: Sep 09, 2026, 07:36 AM IST|Updated: Sep 09, 2026, 07:43 AM IST
joinshare
Southern Railway Announcement: சென்னையில் பல மின்சார ரயில்கள், மெமு ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவிப்பை வெளியிட்டுள்ளது. எந்தெந்த ரயில்கள் ரத்து செய்யப்படுகிறது என்பதை இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்.

Southern Railway Announcement: சென்னையில் இருந்து இயக்கப்படும் மெமு ரயில், மின்சார ரயில்கள் இன்றும், நாளையும் ரத்து செய்யப்படுகிறது.
 

Chennai Memu Trains1/5

தெற்கு ரயில்வே

சென்னையில் முக்கிய போக்குவரத்துகளில் ஒன்றாக இருப்பது மின்சார ரயில் சேவை. மின்சார ரயில்களில் தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் பயணித்து வருகின்றனர். அவ்வப்போது ரயில் சேவையில் சில மாற்றங்களை செய்து வருகிறது. அந்த வகையில், தற்போது தெற்கு ரயில்வே சென்னை கோட்டம் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது, இன்றும், நாளையும் பல மின்சார ரயில்களின் சேவையில் சில மாற்றங்களை தெற்கு ரயில்வே செய்துள்ளது.
Chennai Memu Trains2/5

மெமு ரயில்கள் ரத்து

சென்னை சென்ட்ரல் - கூடூர் வழித்தடத்தில் பெடபரியா -நாயுடுபேட்டை ரயில் நிலையங்களுக்கு இடையே நாளை (செப்டம்பர் 10) மதியம் 12.20 மணிக்கு முதல் மாலை 6.50 மணி வரை பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால், சில பயணிகள் ரயில்கள் ரத்து செய்யப்படுகிறது.
Chennai Memu Trains3/5

ரயில்கள் முழுமையாக ரத்து

அதன்படி, ரயில் எண் (66039) சென்ட்ரல் - சூலூர்போட்டை இடையே காலை 7.45 மணிக்கு இயக்கப்படும் மெமு ரயில் ரத்து செய்யப்படுகிறது. ரயில் எண் (66041) சூலூர்பேட்டை - நெல்லூர் இடையே காலை 10 மணிக்கு இயக்கப்படும் ரயிலும் ரத்து செய்யப்படுகிறது. ரயில் எண் (66042) சூலூர்பேட்டை - சென்ட்ரல் இடையே மாலை 6.40 மணிக்கு இயக்கப்படும் மெமு ரயில் ரத்து செய்யப்படுகிறது. ரயில் எண் (66003) சென்ட்ரல் - ஆவடி இடையே இரவு 9.25 மணிக்கு இயக்கப்படும் ரயிலும் ரத்து செய்யப்படுகிறது.
Chennai Memu Trains4/5

விழுப்புரம் ரயில்கள் ரத்து

சென்னை எழும்பூர் - விழுப்புரம் வழித்தடத்தில் பேரணி யார்டில் இன்று காலை 10.15 மணி முதல் மதியம் 1.15 மணி வரை மூன்று மணி நேரத்திற்கு பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால், சில ரயில்கள் பகுதியளவு ரத்து செய்யப்படுகிறது. அதன்படி, ரயில் எண் (66045) தாம்பரம் - விழுப்புரம் இடையே காலை 9.45 மணிக்கு இயக்ப்படும் ரயில், திண்டிவம் வரை மட்டுமே இயக்கப்படும். விழுப்புரம் வரை இந்த ரயில் இயக்கப்படாது.
Chennai Memu Trains5/5

வைகை விரைவு ரயில்

ரயில் எண் (66046) விழுப்புரம் - சென்னை கடற்கரை இடையே மதியம் 1.30 மணிக்கு இயக்கப்படும் ரயில் திண்டிவனம் ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும். விழுப்புரம் ரயில் நிலையத்தில் மதியம் 1.30 மணிக்கு புறப்படாது என தெரிவிக்கப்படுகிறது. மேலும், எழும்பூரில் - மதுரை வைகை அதிவிரைவு ரயில் இடைப்பட்ட ரயில் நிலையத்தில் சுமார் 10 நிமிடங்கள் நிறுத்தி வைக்கப்பட்டு பின்னர் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது
TAGS:
Chennai

Trending

  • News
  • Photos
  • Videos
டெல்லி ஜாமியா பல்கலைக்கழக போராட்டம்... பதற்றம் ஏன்? நடந்தது என்ன? Explained

டெல்லி ஜாமியா பல்கலைக்கழக போராட்டம்... பதற்றம் ஏன்? நடந்தது என்ன? Explained

2

டெட் தேர்வு எழுதும் அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு குட் நியூஸ்! சிறப்பு பயிற்சி ஏற்பாடு

3

விலைவாசியை குறைங்க, பட்டினியா கிடக்க முடியல... விதவை பெண்ணின் தர்ணா போராட்டம்

4

அரசு ஊழியர்களுக்குத் குட்நியூஸ்! திருமண முன்பணம் விதிமுறையில் முக்கிய மாற்றம்

5

மனு போடவே வேண்டாம்... வீடு தேடி வரும் சேவைகள்! தமிழக அரசின் புதிய வெற்றி இ-சேவை 2.0 திட்டம்!

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.