• हिन्दी
  • English
  • मराठी
  • বাংলা
  • தமிழ்
  • മലയാളം
  • ગુજરાતી
  • తెలుగు
  • ಕನ್ನಡ
  • ଓଡ଼ିଶା
  • Z Bharat
  • PHH
  • Business
  • WION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /Photos
  • /ரயிலில் சத்தம் போட்டால் சிறை.. ரூ.5,000 அபராதம்.. தெற்கு ரயில்வே அறிவிப்பு!

ரயிலில் சத்தம் போட்டால் சிறை.. ரூ.5,000 அபராதம்.. தெற்கு ரயில்வே அறிவிப்பு!

Written ByUmabarkavi K
Published: Oct 14, 2026, 02:56 PM IST|Updated: Oct 14, 2026, 03:03 PM IST
joinshare
Loud Music Train Rule: ரயில்களில் அதிக சத்தத்துடன் பாட்டு கேட்டால் 6 மாதங்கள் சிறை தண்டனை விதிக்கப்படும் என்றும் ரூ.5,000 வரை அபராதம் விதிக்கப்படும் என்றும் தெற்கு ரயில்வே எச்சரிக்கை விடுத்துள்ளது.

Loud Music Train Rule:  எனவே, இனி ரயில்களில் அதிக சத்தத்துடன் பாட்டு கேட்பதை தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு வருகிறது. 
 

Southern Railway1/5

விதிகளை மீறும் பயணிகள் மீது நடவடிக்கை

ரயில்வே அதிகாரிகள் எச்சரிக்கையை மீறித் தொடர்ந்து இடையூறு ஏற்படுத்தினால், நீதிமன்றம் மூலம் ரூ.5,000 வரை அபராதம் அல்லது 6 மாதங்கள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்படலாம். அல்லது அபராதம் மற்றும் சிறை என இரண்டு விதிக்கப்படலாம் என தெற்கு ரயில்வே எச்சரிக்கை விடுத்துள்து.
Southern Railway2/5

இந்தியன் ரயில்வே

இந்தியாவில் முக்கிய போக்குவரத்துகளில் ஒன்றாக இருப்பது ரயில் சேவை. ரயில்களில் தினமும் லட்சக்கணக்கானோர் பயணம் செய்து வருகின்றனர். குறைவான கட்டணம், கழிவறை வசதி, படுக்கை வசதி போன்றவை இருப்பதால் தொலைதூரம் பயணம் மேற்கொள்பவர்கள் ரயில்களில் செல்கின்றனர். இதற்கிடையில், இந்தியன் ரயில்வே பயணிகளுக்கு தொந்தரவு இல்லாத பயணத்திற்காக சில விதிகளை செயல்படுத்தி வருகிறது.
Southern Railway3/5

தெற்கு ரயில்வே முக்கிய அறிவிப்பு

அவ்வப்போது, விதிமுறைகளில் சில மாற்றங்களையும் ரயில்வே நிர்வாகம் செய்து வருகிறது. அந்த வகையில், தெற்கு ரயில்வே முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ரயில்களில் ஹெட்ஃபோன்கள் இல்லாமல் செல்போனில் பயணிகள் அதிக சத்தத்தில் பேசி வருவதாகவும், பாடல் கேட்பதாகவும், வீடியோக்கள் அல்லது ரீல்களைப் பார்ப்பது, மேம்ஸ் விளையாடுவதாக பயணிகள் தொர்ந்து புகார் அளித்து இருந்தனர்.
Southern Railway4/5

ரயில்களில் அதிகம் சத்தம் போட்டால் அபராதம், சிறை

பயணிகளின் புகாரை அடுத்து, தெற்கு ரயில்வே நடவடிக்கை எடுத்துள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே பயனர் ஆலோசனைக் குழுவின் உறுப்பினரான ஜாஃபர் அலி கூறினார். திருத்தப்பட்ட விதிகளின்படி, ரயில்களில் பயணிகள் ஹெட்ஃபோன்கள் போடாமல் சத்தமாக பாட்டு, வீடியோ கேட்டு பயணிகளுக்கு இடையூறு விளைவிக்கும் பயணிகளுக்கு ரூ.5,000 அபராதம் விதிக்கப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Southern Railway5/5

இந்தியன் ரயில்வே விதியின்படி, ரூ.5,000 அபராம், 6 மாதம் சிறை

ஜன் விஸ்வாஸ் (விதிமுறைகள் திருத்தம்) சட்டம், 2026-ல் திருத்தப்பட்ட, 1989-ஆம் ஆண்டு ரயில்வே சட்டத்தின் பிரிவு 145(2)-இன் கீழ் உள்ள விதிகளின்படி, ரயில்களில் சக பயணிகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் சத்தமாக மொபைல் போன் பார்ப்பவருக்கு ரூ.1,000 அபராதம் விதிக்கப்படும். மேலும், ரயிலில் இருந்து இறக்கிவிடப்பட்டு, டிக்கெட்டும் ரத்து செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
TAGS:
Southern Railway

Trending

  • News
  • Photos
  • Videos
மம்தா பானர்ஜியை கொல்ல சதி? கத்தியால் குத்த முயன்ற பெண் கைது.. என்ன நடந்தது?

மம்தா பானர்ஜியை கொல்ல சதி? கத்தியால் குத்த முயன்ற பெண் கைது.. என்ன நடந்தது?

2

பங்குச் சந்தை முதலீட்டாளர்களுக்கு குட் நியூஸ்.. Kwala Intel இந்தியாவில் அறிமுகம்! ரூ.199-ல் AI வசதி

3

பிக்பாஸ் 10 : ஜேசன் - சாந்தினி ரசிகர்களின் கவனம் ஈர்ப்பது ஏன்? இதுதான் மேட்டர்!

4

பண்டிகைக் காலத்தில் சர்க்கரை விலை உயர்வு: 14 லட்சம் டன் ஒதுக்கிய மத்திய அரசு! இனி விலை குறையுமா?

5

10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு: ஆசிரியர்களுக்கு வெளியான முக்கிய எச்சரிக்கை Explained

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.