தீபாவளியான இன்று உருவான சுக்ராதித்ய ராஜயோகத்தால் மேஷம், கன்னி, துலாம், கும்பம் ஆகிய 4 ராசிக்காரர்களுக்கு பணவரவு, தொழில் வளர்ச்சி மற்றும் பொருளாதார முன்னேற்றம் கிடைக்கும்.
1/5
சுக்ராதித்ய ராஜயோகம்.. இந்த 4 ராசிகளுக்கு பணவரவு அதிகரிக்குமா?
தீபாவளி பண்டிகை ஆன்மிக முக்கியத்துவம் கொண்டதாக மட்டுமின்றி, ஜோதிட நம்பிக்கைகளின்படியும் சிறப்பான நாளாகக் கருதப்படுகிறது. இந்த ஆண்டு நவம்பர் 6ஆம் தேதி உருவாகும் சுக்ராதித்ய ராஜயோகம், சில ராசிக்காரர்களுக்கு செல்வம், தொழில் வளர்ச்சி மற்றும் நிதி முன்னேற்றத்தை அளிக்கும்.
2/5
மேஷம்
மேஷ ராசியினருக்கு இந்த ராஜயோகம் பொருளாதார ரீதியாக முன்னேற்றத்தை தரும். ஏற்கனவே செய்த முதலீடுகள் மூலம் ஆதாயம் கிடைக்கவும், நீண்ட நாட்களாகத் தாமதமான பணிகள் முடிவுக்கு வரவும் வாய்ப்புள்ளது. புதிய ஒப்பந்தங்கள் மூலம் வருமானம் அதிகரிக்கலாம். பணவரவு உயர்வதால் சேமிப்பும் மேம்படும். பணியிடத்தில் சம்பள உயர்வு அல்லது பதவி உயர்வு கிடைக்க வாய்ப்புள்ளதாகவும், உடல்நிலையில் நல்ல மாற்றங்கள் ஏற்படலாம்.
3/5
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு இந்த காலகட்டம் நிதி வளர்ச்சிக்கான புதிய வாய்ப்புகளை உருவாக்கும் என ஜோதிடத்தில் கூறப்படுகிறது. வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கவும், புதிய வருமான வழிகள் உருவாகவும் வாய்ப்புகள் உள்ளன. பணியிடத்தில் திறமைக்கு அங்கீகாரம் கிடைக்கலாம். லாபகரமான ஒப்பந்தங்கள் மற்றும் முதலீட்டு வாய்ப்புகள் கிடைக்கக்கூடும். இதனால் பொருளாதார நிலை மேம்பட்டு, எதிர்காலத்திற்கான சேமிப்பை அதிகரிக்க முடியும்.
4/5
துலாம்
துலாம் ராசியினருக்கு தொழில் மற்றும் பணவரவு தொடர்பான சாதகமான மாற்றங்கள் ஏற்படலாம். வேலை செய்பவர்களுக்கு புதிய பொறுப்புகள் அல்லது பதவி உயர்வு கிடைக்க வாய்ப்புள்ளது. பொருளாதார நிலை உயர்வதால் புதிய வாகனம் அல்லது வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கும் சூழல் உருவாகலாம். வேலை தேடுபவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கலாம். குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சியும், தம்பதியரிடையே புரிதலும் அதிகரிக்கலாம்.
5/5
கும்பம்
கும்ப ராசியினருக்கு சுக்ராதித்ய ராஜயோகம் தொழில் மற்றும் நிதி சார்ந்த முன்னேற்றத்தை ஏற்படுத்தும் என ஜோதிடத்தில் கணிக்கப்பட்டுள்ளது. பணியிடத்தில் பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்ற வாய்ப்புகள் கிடைக்கலாம். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கவும், பழைய முதலீடுகள் நல்ல பலன்களைத் தரவும் வாய்ப்புள்ளது. நீண்ட காலமாக நிலுவையில் இருந்த பணிகளை முடிக்க முடியும். பொருளாதார வளர்ச்சியால் சமூகத்தில் மதிப்பு அதிகரிக்கலாம் என்றும், ஆரோக்கியத்தில் நல்ல மாற்றங்கள் ஏற்படலாம்.