Sukran Udhayam Palangal: இன்று சுக்கிரன் உதயமாகிறார். இதன் தாக்கத்தல் 5 ராசிக்காரர்களின் வாழ்வில் பொற்காலம் பிறக்கவுள்ளது. யார் அந்த அதிர்ஷ்ட ராசிகள்?
Venus Rise: கிரகங்களின் பெயர்ச்சி, உதயம், அஸ்தமனம், வக்ர பெயர்ச்சி, வக்ர நிவர்த்தி என அனைத்து மாற்றங்களும் ராசிகளில் ஆழ்ந்த தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. அன்பு, திருமணம், அழகு, கலை, மகிழ்ச்சி ஆகியவற்றின் காரணி கிரகமாக இருக்கும் சுக்கிரன் இன்று (அக்டோபர் 29) உதயமாகிறார். இது பல ராசிகளின் வாழ்வில் பல வித நன்மைகளைக் கொண்டு வரும்.
1/8
Sukran Udhayam
அன்பு, வசீகரம், திருமணம், காதல், அழகு, கலை, மகிழ்ச்சி ஆகியவற்றின் காரணி கிரகமாக இருப்பவர் சுக்கிரன். அவர் இன்று அஸ்தமன நிலையிலிருந்து உதயமாகிறார். இது முக்கிய ஜோதிட நிகழ்வாக பார்க்கப்படுகின்றது.
2/8
சுக்கிரன் பெயர்ச்சி பலன்கள்
சுக்கிரன் உதயத்தின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும். எனினும், சில ராசிக்காரர்களுக்கு இதனால் அதிக நன்மைகள் நடக்கும். இவர்களது நிதி நிலை வலுவடையும். சுக்கிரன் அருளால் வெற்றிகள் குவியும். அந்த அதிர்ஷ்ட ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.
3/8
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு சுக்கிரன் உதயம் லாபகரமானதாக இருக்கும். வேலை தேடிக்கொண்டிருக்கும் ரிஷப ராசிக்காரர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். சிலர் கடந்த கால மோதல்களைத் தீர்த்துக்கொள்ள முன்வரலாம். கலை சார்ந்த ஆர்வங்கள் மற்றும் உங்கள் தனிப்பட்ட தோற்றத்தில் கவனம் செலுத்த இது ஒரு நல்ல நேரமாக இருக்கலாம். பொருளாதார நிலை நன்றாக இருக்கும். சுக்கிரன் அருளால் பண வரவு அதிகமாகும்.
4/8
கடகம்
சுக்கிரன் பெயர்ச்சி கடக ராசிக்காரர்களுக்கு ஆதாயங்களை அளிப்பதாக இருக்கும். வருமானம், தொழில்முறை அங்கீகாரம் மற்றும் வணிக வளர்ச்சி தொடர்பான வாய்ப்புகள் உங்களுக்குக் கிடைக்கலாம். குழந்தைகளால் நல்ல செய்திகள் கிடைக்கும். ஊதிய உயர்வும், பதவி உயர்வும் கிடைக்க வாய்ப்புள்ளது. சிலர் தங்கள் கடந்த கால முயற்சிகளுக்காகப் பாராட்டுக்களையும் பெறக்கூடும். உங்கள் செலவுகளைக் கட்டுப்பாட்டில் வைத்திருங்கள். முன்னர் செய்த முதலீடுகளால் லாபம் கிடைக்கும்.
5/8
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு சுக்கிரன் உதயம் நல்ல பலன்களை அளிக்கும். குழந்தைகள் மூலம் நல்ல செய்திகள் கிடைக்கும். புதிய வேலை வாய்ப்பு குறித்து விவாதிக்கவோ அல்லது கடந்த கால வாய்ப்புகளை மீண்டும் பரிசீலிக்கவோ உங்களுக்கு வாய்ப்பு கிடைக்கலாம். உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். வாழ்வில் மகிழ்ச்சியும், அமைதியும் இருக்கும். உங்கள் நிதித் திட்டமிடலும் இன்னும் நேர்த்தியாக அமையக்கூடும்.
6/8
துலாம்
துலாம் ராசியின் அதிபதியான சுக்கிரன், தனது சொந்த ராசியிலேயே வலுப்பெற்று உதயமாவதால், துலாம் ராசிக்காரர்களுக்கு மிகவும் சாதகமான பலன்கள் கிடைக்கக்கூடும். பணியிடத்தில் உங்கள் முயற்சிகளுக்குப் பாராட்டு கிடைக்கலாம். வணிகத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். குழந்தைகள் மூலம் மகிழ்ச்சி கிடைக்கும். வாழ்வில் மகிழ்ச்சி இருக்கும்.
7/8
மகரம்
சுக்கிரன் உதயத்தின் தாக்கத்தால் மகர ராசிக்காரர்களுக்கு அனுகூலமான நன்மைகள் ஏற்படும். இந்தக் காலம் உங்கள் தொடர்புகளை விரிவுபடுத்தவும், குழுவாக இணைந்து பணியாற்றவும், உங்கள் திட்டங்களை மறுபரிசீலனை செய்யவும் சாதகமாக இருக்கும். தற்போதைய திட்டங்களில் மற்றவர்களுடன் இணைந்து பணியாற்றுவது பலனளிக்கும். பண கரவு அதிகமாகும்.
8/8
பொறுப்புத் துறப்பு
இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.