• हिन्दी
  • English
  • मराठी
  • বাংলা
  • தமிழ்
  • മലയാളം
  • ગુજરાતી
  • తెలుగు
  • ಕನ್ನಡ
  • ଓଡ଼ିଶା
  • Z Bharat
  • PHH
  • Business
  • WION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee Tamil News
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /Photos
  • /படித்த பெண்களே! சொந்த தொழில் தொடங்க ஆசையா? அரசின் 5 முக்கிய திட்டங்கள்

படித்த பெண்களே! சொந்த தொழில் தொடங்க ஆசையா? அரசின் 5 முக்கிய திட்டங்கள்

Written ByKarthikeyan Sekar
Published: Oct 03, 2026, 08:28 PM IST|Updated: Oct 03, 2026, 08:33 PM IST
joinshare
Tamil Nadu Government Business Schemes: படித்த பெண்கள் மற்றும் இளைஞர்களுக்கு சொந்த தொழில் செய்ய தமிழ்நாடு அரசு செயல்படுத்தும் 5 முக்கிய திட்டங்களை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்

Tamil Nadu Government Business Schemes: சொந்த தொழில் செய்ய ஆர்வம் உள்ளவர்கள், என்னென்ன திட்டங்களின் பயன்பெறலாம் என்பதை இங்கே விரிவாக பார்க்கலாம். 
 

Tamil Nadu Government Business Schemes1/6

NEEDS திட்டம்

புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டம் (NEEDS) - முதல் தலைமுறை தொழில்முனைவோரை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டு இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் ரூ.10 லட்சம் முதல் அதிகபட்சமாக ரூ.5 கோடி வரையிலான புதிய தொழில் திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்படுகிறது. உற்பத்தி மற்றும் சேவைத் தொழில்களையும் தொடங்கலாம்.
Tamil Nadu Government Business Schemes2/6

படித்த வேலையற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம் (UYEGP)

படித்த வேலையற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம் (UYEGP) - குறைந்த முதலீட்டில் சுயமாக தொழில் தொடங்க விரும்பும் நடுத்தர படித்த இளைஞர்களுக்கு இத்திட்டம் சிறந்த தேர்வாகும். அதிகபட்சமாக ரூ.15 லட்சம் வரை வழங்கப்படும் இத்திட்டத்தில் பேக்கரி, மசாலா பொடி அரைக்கும் ஆலை, அலுமினியம் மற்றும் இரும்பு ஃபேப்ரிகேஷன், அப்பளம் மற்றும் ஊறுகாய் தயாரிப்பு, ரெடிமேட் ஆடை உற்பத்தி ஆகிய தொழில்களையும், இருசக்கர வாகன பழுதுநீக்கும் மையம், அழகு நிலையம், ஜெராக்ஸ் கடை, மளிகைக் கடை மற்றும் மின்சாதன பழுதுநீக்கும் சேவை மையங்களையும் தொடங்க முடியும்.
Tamil Nadu Government Business Schemes3/6

தமிழ்நாடு மகளிர் தொழில் முனைவோர் மேம்பாட்டுத் திட்டம் (TWEES)

தமிழ்நாடு மகளிர் தொழில் முனைவோர் மேம்பாட்டுத் திட்டம் (TWEES) - பெண்கள் தனிநபராகவோ அல்லது மகளிர் குழுக்களாக ஒருங்கிணைந்தோ புதிய தொழில்களைத் தொடங்க இதில் முன்னுரிமை அளிக்கப்படுகிறது. தொழில் சார்ந்த அடிப்படை அறிவும் ஆர்வமும் உள்ள பெண்களுக்கு தொழில் தொடங்குவதற்குத் தேவையான வங்கிக் கடனுதவிகள் மற்றும் அரசு மானியங்கள் ஒருங்கிணைக்கப்பட்டு வழங்கப்படுகின்றன. இத்திட்டத்தின் கீழ் தையல் கலை மற்றும் பொட்டிக், எம்பிராய்டரி யூனிட், சானிட்டரி நாப்கின் தயாரிப்பு, மூலிகை மற்றும் இயற்கை அழகுசாதனப் பொருட்கள் தயாரிப்பு, கேட்டரிங் மற்றும் உணவு பேக்கிங் சர்வீஸ், கைவினைப் பொருட்கள் தயாரிப்பு போன்ற பல்வேறு சுயதொழில்களை வெற்றிகரமாகத் தொடங்கி நடத்தலாம்.
Tamil Nadu Government Business Schemes4/6

அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம் (AABCS)

அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம் (AABCS)- ஆதிதிராவிடர் (SC) மற்றும் பழங்குடியினர் (ST) வகுப்பைச் சேர்ந்தவர்களுக்கான திட்டம். இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்கக் குறைந்தபட்ச கல்வித் தகுதி எதுவும் தேவையில்லை. சிஎன்சி மெஷினிங், டெக்ஸ்டைல் ஆலைகள், கட்டுமானப் பொருட்கள் உற்பத்தி, அரிசி ஆலைகள், இன்ஜினியரிங் ஒர்க்ஸ் போன்ற ஆலைகளையும், வணிக ரீதியான சரக்கு லாரிகள், ஆம்புலன்ஸ், ஜேசிபி இயக்கம், லாஜிஸ்டிக்ஸ் மற்றும் மருத்துவப் பரிசோதனை மையங்களையும் தொடங்கலாம்.
Tamil Nadu Government Business Schemes5/6

பிரதம மந்திரி உணவு பதப்படுத்தும் குறு நிறுவனங்களை முறைப்படுத்தும் திட்டம் (PMFME)

பிரதம மந்திரி உணவு பதப்படுத்தும் குறு நிறுவனங்களை முறைப்படுத்தும் திட்டம் (PMFME) - உணவு தயாரிப்பு, பதப்படுத்துதல் மற்றும் பேக்கிங் துறையில் இயங்கும் குறுந்தொழில்களை ஊக்குவிக்க மத்திய மற்றும் மாநில அரசுகளின் பங்களிப்புடன் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. 18 வயது நிரம்பிய 8-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற எவரும் விண்ணப்பிக்கலாம். மரச்செக்கு எண்ணெய் உற்பத்தி, மாவு மில், மசாலா பொடி தயாரிப்பு, பால் பண்ணைப் பொருட்களான பன்னீர், நெய் தயாரித்தல், சிறுதானிய மற்றும் தினை தின்பண்டங்கள் தயாரிப்பு, பழச்சாறு பதப்படுத்துதல், ஊறுகாய் மற்றும் இறைச்சி பதப்படுத்தும் அலகுகளைத் தொடங்கலாம்.
Tamil Nadu Government Business Schemes6/6

விண்ணப்பிக்கும் வழிமுறை

விண்ணப்பிக்கும் வழிமுறை: ஆர்வமுள்ள இளைஞர்கள் தமிழக அரசின் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறையின் அதிகாரப்பூர்வ இணையதளமான msmeonline.tn.gov.in மூலமாகவோ அல்லது மத்திய அரசின் myscheme.gov.in மூலமாகவோ ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். மேலும் திட்ட வழிகாட்டல் மற்றும் விரிவான திட்ட அறிக்கை (DPR) தயாரிக்க மாவட்ட தொழில் மையத்தை (DIC) அணுகி நேரடி ஆலோசனைகளைப் பெறலாம்.
TAGS:
Tamil Nadu

Trending

  • News
  • Photos
  • Videos
நாளை (அக்டோபர் 4) 4 மாவட்டங்களில் கனமழை: சென்னையில் மழை உண்டா?

நாளை (அக்டோபர் 4) 4 மாவட்டங்களில் கனமழை: சென்னையில் மழை உண்டா?

2

தாய்மாமன் தங்க மோதிரம் : நாமக்கல் மாவட்டத்தில் எந்தெந்த தேதிகளில் வழங்கப்படுகிறது?

3

உணவு பார்சல்களில் ஸ்டேப்ளர் பின்களுக்கு அதிரடி தடை: FSSAI அதிரடி உத்தரவு

4

DA Hike: ஜனவரி 2027 முதல் 67% அகவிலைப்படி? அரசு ஊழியர்களுக்கு AICPI-IW கொடுத்த குட் நியூஸ்

5

மதுரை இளைஞர்களே... அக். 10இல் வேலைவாய்ப்பு முகாம் - முன்பதிவு முக்கியம்

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.