• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /Photos
  • /படிப்பு தகுதி தேவையில்லை! தொழில் தொடங்கும் பெண்களுக்கு ரூ.2 லட்சம் மானியம் - தமிழ்நாடு அரசு

படிப்பு தகுதி தேவையில்லை! தொழில் தொடங்கும் பெண்களுக்கு ரூ.2 லட்சம் மானியம் - தமிழ்நாடு அரசு

Written ByKarthikeyan Sekar
Published: Oct 30, 2026, 02:28 PM IST|Updated: Oct 30, 2026, 02:39 PM IST
joinshare
TWEES scheme : சொந்த தொழில் தொடங்க நினைக்கும் பெண்களுக்கு குட் நியூஸ், தமிழக அரசின் TWEES திட்டத்தில் இப்போது விண்ணப்பிக்கலாம்

TWEES scheme : தமிழ்நாடு மகளிர் தொழில்முனைவோர் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் தொழில் தொடங்க பெண்கள் விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. முழு விவரம்
 

TWEES scheme Latest Update1/7

திட்ட அறிமுகம்

திட்ட அறிமுகம்: தமிழ்நாட்டில் பெண்களை வெற்றிகரமான தொழிலதிபர்களாக மாற்றும் நோக்கில், குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் (MSME) துறை சார்பில் ‘தமிழ்நாடு மகளிர் தொழில்முனைவோர் மேம்பாட்டுத் திட்டம்’ (TWEES) செயல்படுத்தப்படுகிறது. அடுத்த 5 ஆண்டுகளில் 1 லட்சம் பெண் தொழில்முனைவோரை உருவாக்குவதைத் தமிழ்நாடு அரசு முக்கிய இலக்காகக் கொண்டுள்ளது.
TWEES scheme Latest Update2/7

வயது வரம்பும் கல்வித் தகுதியும்

வயது வரம்பும் கல்வித் தகுதியும் : இத்திட்டத்தின் கீழ் பயன்பெற 18 முதல் 55 வயதுக்குட்பட்ட தமிழ்நாட்டில் வசிக்கும் பெண்கள் தகுதியுடையவர்கள் ஆவர். இதில் சேருவதற்கு எவ்வித குறைந்தபட்சக் கல்வித் தகுதியும் தேவையில்லை என்பது கூடுதல் சிறப்பம்சமாகும்.
TWEES scheme Latest Update3/7

எந்தெந்த தொழில்களுக்கு வாய்ப்பு?

எந்தெந்த தொழில்களுக்கு வாய்ப்பு? : பெண்கள் சுயமாக உற்பத்தி, சேவை மற்றும் வணிகம் சார்ந்த எந்தவொரு தொழிலையும் புதிதாகத் தொடங்க இத்திட்டம் உறுதுணையாக அமைகிறது. இதன் மூலம் சுயசார்புடன் கூடிய வாழ்வாதாரத்தை உருவாக்க முடியும்.
TWEES scheme Latest Update4/7

திட்ட மதிப்பீடும் அரசு மானியமும்

திட்ட மதிப்பீடும் அரசு மானியமும் : தொழில் தொடங்குவதற்கான திட்ட மதிப்பீடு அதிகபட்சமாக ரூ.10 லட்சம் வரை இருக்கலாம். இதில் அரசின் சார்பில் திட்ட மதிப்பீட்டில் 25% அல்லது அதிகபட்சமாக ரூ.2 லட்சம் வரை நேரடி மானியமாக வழங்கப்படும்.
TWEES scheme Latest Update5/7

பயனாளியின் பங்கு

பயனாளியின் பங்கு மற்றும் பிணைய விலக்கு : தொழில் தொடங்கத் தேவையான மொத்த தொகையில் பயனாளியின் குறைந்தபட்சப் பங்களிப்பு 5% மட்டுமே ஆகும். மிக முக்கியமாக, இத்திட்டத்தின் கீழ் கடன் பெறுவதற்கு எவ்வித சொத்துப் பிணையமும் தேவையில்லை.
TWEES scheme Latest Update6/7

தொழில்முனைவோர் பயிற்சி

தொழில்முனைவோர் பயிற்சி : வங்கி மூலம் கடன் ஒப்புதல் பெற்ற பயனாளிகளுக்கு 3 நாட்கள் இணையவழி தொழில்முனைவோர் மேம்பாட்டுப் பயிற்சி கட்டாயமாக வழங்கப்படும். மேலும், ஆதிதிராவிடர், பழங்குடியினர், மூன்றாம் பாலினத்தவர், கைம்பெண்கள் மற்றும் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள பெண்களுக்கு இதில் சிறப்பு முன்னுரிமை அளிக்கப்படும்.
TWEES scheme Latest Update7/7

விண்ணப்பிக்கும் முறை

விண்ணப்பிக்கும் முறை : இத்திட்டத்தின் கீழ் பயன் பெற விரும்பும் தகுதியான பெண்கள் www.msmeonline.tn.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் வாயிலாக எளிதாக விண்ணப்பிக்கலாம். கூடுதல் விவரங்களுக்கு மாவட்டத் தொழில் மையங்களை அணுகலாம்.
TAGS:
TN Govt Schemes

Trending

  • News
  • Photos
  • Videos
TNPSC தேர்வு எழுத நினைப்போருக்கு குட் நியூஸ்... வயது உச்சவரம்பு 5 ஆண்டுகள் உயர்வு

TNPSC தேர்வு எழுத நினைப்போருக்கு குட் நியூஸ்... வயது உச்சவரம்பு 5 ஆண்டுகள் உயர்வு

2

Explainer: மூத்த குடிமக்களுக்கான நலத்திட்டங்கள்: ரூ.77.98 கோடியை வாரி வழங்கிய மத்திய அரசு

3

ஹெலிகாப்டர் திடீர் மாயம்... 6 பேரியின் நிலை என்ன? - உத்தரகாண்டில் பரபரப்பு

4

50 நாட்களுக்கும் மேல் சிகிச்சையில் வி.எஸ்.பாபு! என்னதான் ஆச்சு? சமீபத்திய அப்டேட்..

5

சென்னை அம்மா உணவக ஊழியர்களுக்கு சூப்பர் செய்தி!! விரைவில் ஊதிய உயர்வு

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.