• हिन्दी
  • English
  • मराठी
  • বাংলা
  • தமிழ்
  • മലയാളം
  • ગુજરાતી
  • తెలుగు
  • ಕನ್ನಡ
  • ଓଡ଼ିଶା
  • Z Bharat
  • PHH
  • Business
  • WION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee Tamil News
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /Photos
  • /தாய்மாமன் தங்க மோதிரம் வாங்கிய பெண்களின் ரியாக்ஷன்!

தாய்மாமன் தங்க மோதிரம் வாங்கிய பெண்களின் ரியாக்ஷன்!

Written ByKarthikeyan Sekar
Published: Oct 10, 2026, 06:40 PM IST|Updated: Oct 10, 2026, 06:46 PM IST
joinshare
Tamil Nadu Thaimaman Gold Ring Scheme: தாய்மாமன் தங்க மோதிர திட்டத்தில் பயனடைந்த பெண்களின் ரியாக்ஷனை இங்கே பார்க்கலாம்.

Tamil Nadu Thaimaman Gold Ring Scheme: தமிழ்நாடு முதலமைச்சர் அண்மையில் தொடங்கி வைத்த தாய்மாமன் தங்க மோதிர திட்டத்தில் பயனடைந்த பயனாளிகள் என்ன நினைக்கிறார்கள் என்பதை இங்கே விரிவாக பார்க்கலாம்.
 

Tamil Nadu Thaimaman Gold Ring Scheme1/7

பாசத்தின் அடையாளமான அரசு திட்டம்

பாசத்தின் அடையாளமான அரசு திட்டம் : தமிழக அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் பச்சிளம் குழந்தைகளுக்குத் தமிழர் பண்பாட்டின்படி அன்பு மற்றும் பாசத்தை வெளிப்படுத்தும் வகையில் 'தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்' அறிமுகப்படுத்தப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது. மதுரையில் தொடங்கி வைக்கப்பட்ட இத்திட்டத்தின் கீழ் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் பிரசவித்த தாய்மார்களுக்கு ஒரு கிராம் எடையில் தங்க மோதிரங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
Tamil Nadu Thaimaman Gold Ring Scheme2/7

காவேரியின் நெகிழ்ச்சியான வார்த்தைகள்

காவேரியின் நெகிழ்ச்சியான வார்த்தைகள் : திருவள்ளூர் மாவட்டம் ஈக்காடு ஊராட்சி ஒன்றியத்தைச் சேர்ந்த காவேரி என்ற தாய், தன் குழந்தைக்குத் தங்க மோதிரத்தைப் பெற்றுக்கொண்டு பெரும் மகிழ்ச்சி அடைந்தார். "எங்கள் குடும்பத்தில் ஒருவராக தாய்மாமன் முறையில் இந்த அன்பைப் பரிசளித்தது மனதிற்கு மிகவும் நெகிழ்ச்சியாக உள்ளது, பிறந்த உடனே குழந்தைக்கு மோதிரம் வழங்கியது வாழ்நாளில் மறக்க முடியாத ஒன்று" என்று அவர் உணர்ச்சிவசப்பட்டுத் தெரிவித்தார்.
Tamil Nadu Thaimaman Gold Ring Scheme3/7

குண்டுமணி தங்கம் கூட கனவாக இருந்த அமுதா

குண்டுமணி தங்கம் கூட கனவாக இருந்த அமுதா : அம்சா நகர் பகுதியைச் சேர்ந்த அமுதா தனது கணவர் தனியார் நிறுவனத்தில் பணியாற்றும் எளிய குடும்பப் பின்னணியைக் குறிப்பிட்டுக் கண் கலங்கினார். "குண்டுமணி தங்கம் கூட வாங்க முடியாத அளவுக்கு விலை உயர்ந்து நிற்கும் இந்தச் சவாலான காலகட்டத்தில், அரசு மருத்துவமனையில் பிறந்த என் குழந்தைக்கு ஒரு கிராம் தங்க மோதிரம் கிடைத்திருப்பதை நினைத்துப் பார்க்கவே முடியவில்லை" என மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.
Tamil Nadu Thaimaman Gold Ring Scheme4/7

குடும்பத்தின் பாரத்தைப் போக்கிய பரிவு

குடும்பத்தின் பாரத்தைப் போக்கிய பரிவு : நடுத்தர மற்றும் ஏழை எளிய குடும்பங்களுக்குத் தங்க நகை என்பது எட்டாக்கனியாக மாறிவரும் சூழலில், பச்சிளம் குழந்தையின் கைக்கு அரசு சார்பில் கிடைத்த தங்க மோதிரம் அப்பெண்களின் குடும்பத்தினரிடையே ஒரு பெரும் நிம்மதியையும் பெருமிதத்தையும் ஏற்படுத்தியுள்ளது. அரசு மருத்துவமனை மீதான நம்பிக்கையை இது பன்மடங்கு உயர்த்தியுள்ளதாகப் பெண்கள் கூறுகின்றனர்.
Tamil Nadu Thaimaman Gold Ring Scheme5/7

பாதுகாப்பான முறையில் கையில் சேர்ந்த தங்கம்

பாதுகாப்பான முறையில் கையில் சேர்ந்த தங்கம் : தங்க மோதிரங்கள் தனித்துவமான வரிசை எண் மற்றும் சேதப்படுத்த முடியாத பாதுகாப்புப் பெட்டகத்தில் வழங்கப்பட்ட விதம் தாய்மார்களைப் பெரிதும் கவர்ந்துள்ளது. கார்டு வடிவிலான அட்டைப் பெட்டியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த தங்க மோதிரத்தைப் பார்த்த தாய்மார்கள், அரசு செய்துள்ள ஏற்பாட்டை வியந்து பாராட்டினர்.
Tamil Nadu Thaimaman Gold Ring Scheme6/7

மருத்துவமனை வளாகத்தில் மலர்ந்த புன்னகை

மருத்துவமனை வளாகத்தில் மலர்ந்த புன்னகை : திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தங்க மோதிரத்தைப் பெற்றுக் கொண்ட தாய்மார்கள், தங்களது பச்சிளம் குழந்தைகளை மடியில் ஏந்தியபடி கைகளில் மோதிரப் பெட்டியை உயர்த்திப் பிடித்துப் புகைப்படங்களுக்கு புன்னகையுடன் போஸ் கொடுத்தனர். அந்த மருத்துவமனை வளாகமே தாய்மார்களின் சிரிப்பாலும் மகிழ்ச்சிப் பெருக்காலும் விழாக்கோலம் பூண்டது.
Tamil Nadu Thaimaman Gold Ring Scheme7/7

நன்றி பெருக்கில் திளைத்த எளிய மக்கள்

நன்றி பெருக்கில் திளைத்த எளிய மக்கள் : தாய்மைப் பேற்றை வெறும் சிகிச்சையாகப் பார்க்காமல் ஒரு பாசப் பிணைப்பாகக் கொண்டாடி, தாய்மாமன் ஸ்தானத்தில் நின்று பரிசளித்த தமிழக அரசுக்கும் முதல்வருக்கும் தாய்மார்கள் தங்களது குடும்பத்தினர் சார்பில் நெஞ்சார்ந்த நன்றிகளை உரித்தாக்கினர். இத்திட்டம் தங்களுடைய வாழ்நாளின் மிகச் சிறந்த நினைவாக நிலைத்து நிற்கும் என அவர்கள் ஒருமித்த குரலில் தெரிவித்தனர்.
TAGS:
TN Govt Schemes

Trending

  • News
  • Photos
  • Videos
தொடங்குகிறது ரஞ்சி கோப்பை திருவிழா:  பார்மட் முதல் ஸ்டார் வீரர்கள் வரை - Explained

தொடங்குகிறது ரஞ்சி கோப்பை திருவிழா: பார்மட் முதல் ஸ்டார் வீரர்கள் வரை - Explained

2

சென்னை : 50 ஆயிரம் ரூபாய் + சிறை தண்டனை - மாவட்ட ஆட்சியரின் கடும் எச்சரிக்கை

3

பாஜகவின் மிகப்பெரிய கொத்தடிமையே ஸ்டாலினும் உதயநிதியும்தான்... சொல்பவர் அமைச்சர் சிடிஆர்

4

TNPSC Group 4 இலவசப் பயிற்சி: அக்டோபர் 15 முதல் தொடக்கம் – விண்ணப்பிப்பது எப்படி?

5

தோனியின் கபேவில் விஜய் - ராகுல் மீட்டிங்... வீட்டிலும் தனியாக ஆலோசனை!

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.