• हिन्दी
  • English
  • मराठी
  • বাংলা
  • தமிழ்
  • മലയാളം
  • ગુજરાતી
  • తెలుగు
  • ಕನ್ನಡ
  • ଓଡ଼ିଶା
  • Z Bharat
  • PHH
  • Business
  • WION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee Tamil News
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /விளையாட்டு
  • /தொடங்குகிறது ரஞ்சி கோப்பை திருவிழா: பார்மட் முதல் ஸ்டார் வீரர்கள் வரை - Explained

தொடங்குகிறது ரஞ்சி கோப்பை திருவிழா: பார்மட் முதல் ஸ்டார் வீரர்கள் வரை - Explained

ரஞ்சி கோப்பை 2026-27 சீசன் அக்டோபர் 11ஆம் தேதி முதல் தொடங்குகிறது. ரஞ்சி கோப்பையின் வரலாறு, தொடரின் பார்மட், நட்சத்திர வீரர்கள், தமிழ்நாடு அணியின் முழு ஸ்குவாட், போட்டி அட்டவணை அனைத்தையும் இங்கு காணலாம்.

Written BySudharsan G
Published: Oct 10, 2026, 07:19 PM IST|Updated: Oct 10, 2026, 07:46 PM IST
joinshare
தொடங்குகிறது ரஞ்சி கோப்பை திருவிழா:  பார்மட் முதல் ஸ்டார் வீரர்கள் வரை - Explained
Image Credit: Ranji Trophy 2026-27 Explained | AI Generated Image : ChatGPT

About the Author

Sudharsan G

Sudharsan G

I’m Sudharsan G, Sub Editor at Zee Tamil News, with over five years of experience in Tamil content writing. I cover Tamil Nadu, national, and international news, along with sports stories that connect with readers. A follower of cricket, cinema, and politics, I bring depth and perspective to every piece. I also have on-screen camera experience, which helps me present news stories in a more engaging and impactful way. Outside work, I enjoy modern Tamil literature and discovering new voices in contemporary writing.
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
தொடங்குகிறது ரஞ்சி கோப்பை திருவிழா:  பார்மட் முதல் ஸ்டார் வீரர்கள் வரை - Explained

தொடங்குகிறது ரஞ்சி கோப்பை திருவிழா: பார்மட் முதல் ஸ்டார் வீரர்கள் வரை - Explained

2

சென்னை : 50 ஆயிரம் ரூபாய் + சிறை தண்டனை - மாவட்ட ஆட்சியரின் கடும் எச்சரிக்கை

3

பாஜகவின் மிகப்பெரிய கொத்தடிமையே ஸ்டாலினும் உதயநிதியும்தான்... சொல்பவர் அமைச்சர் சிடிஆர்

4

TNPSC Group 4 இலவசப் பயிற்சி: அக்டோபர் 15 முதல் தொடக்கம் – விண்ணப்பிப்பது எப்படி?

5

தோனியின் கபேவில் விஜய் - ராகுல் மீட்டிங்... வீட்டிலும் தனியாக ஆலோசனை!

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

Ranji Trophy 2026-27, Explained: நாட்டின் முதன்மையான முதல் தர கிரிக்கெட் தொடர் ரஞ்சி கோப்பை ஆகும். 90 ஆண்டுகளுக்கும் மேலாக ரஞ்சி கோப்பை நடைபெற்று வருகிறது.

அந்த வகையில், 92வது ரஞ்சி கோப்பை தொடர் நாளை (அக். 11) தொடங்க உள்ளது. 2026-27 சீசனுக்கான இந்த தொடரில் 32 அணிகள் மோத உள்ளன. இந்தியா முழுவதும் நடைபெற இருக்கும் இத்தொடரின் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. யாருமே எதிர்பார்க்காத வகையில், ஜம்மு காஷ்மீர் கடந்த முறை ரஞ்சி கோப்பையை வென்றதால், அனைத்து அணிகளும் இம்முறை கோப்பையை வெல்லும் நோக்கில் தீவிரமாக உள்ளனர்.

மேலும் படிக்க | விக்கெட் கீப்பராகும் ஜெய்ஸ்வால்... இந்திய அணியில் இது ஏன் ரொம்ப முக்கியம்?

ரஞ்சி கோப்பை வரலாறு - ஒரு பார்வை

  • 1934-35 சீசனில் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் ஆப் இந்தியா என்ற பெயரில் இந்த தொடர் தொடங்கப்பட்டது. 1935-36 சீசனில் ரஞ்சி கோப்பை என பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
  • முதல்முறையாக சர்வதேச கிரிக்கெட்டில் இங்கிலாந்து அணிக்காக விளையாடிய முதல் இந்திய வீரரான சர் ரஞ்சித்சிங்ஜியின் பெயரை இத்தொடருக்கு சூட்டப்பட்டது.
  • 1934ஆம் ஆண்டு நவம்பர் 4ஆம் தேதி சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் ரஞ்சி கோப்பையின் முதல் போட்டி நடைபெற்றது. அதில் மெட்ரோஸ் - மைசூர் அணிகள் மோதின. அப்போட்டியின் முதல் நாளிலேயே இன்னிங்ஸ் மற்றும் 23 ரன்கள் வித்தியாசத்தில் மெட்ராஸ் அணி வெற்றி பெற்றது.
  • 1934-35 முதல் சீசனில் பாம்பே ஜிம்கானா அணி, வடக்கு இந்திய அணியை இறுதிப்போட்டியில் 208 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி சாம்பியன்ஷிப்பை வெனறது.
  • மும்பை அணி (முன்னர் பாம்பே அணி) 42 முறை ரஞ்சி கோப்பையை வென்று பெரும் ஆதிக்கத்தை செலுத்தி வருகிறது. கடைசியாக 2023-24 சீசனில் மும்பை அணி ரஞ்சி கோப்பையை வென்றிருந்தது.
  • மும்பை அணிக்கு அடுத்து கர்நாடகா 8 முறையும், டெல்லி 7 முறையும் கோப்பையை வென்றிருக்கிறது.
  • தமிழ்நாடு அணி 1954-55, 1987-88 சீசன்களில் ரஞ்சி கோப்பையை வென்றிருக்கிறது. 1970-71 சீசனில் மெட்ரோஸ் அணி, தமிழ்நாடு என பெயர் மாற்றம் பெற்றது.

ரஞ்சி கோப்பை 2026-27

  • ரஞ்சி கோப்பை இரண்டு தொடர்களாக நடைபெறும். Elite எனப்படும் பிரதான தொடரில் 32 அணிகள் மோதும். இதில் வெல்லும் அணிக்கே ரஞ்சி கோப்பை வழங்கப்படும்.
  • அதேபோல், ரஞ்சி கோப்பை தொடரின் கீழ்நிலை பிரிவு Plate குரூப் என்றழைக்கப்படும். வளர்ந்து வரும் அணிகளுக்கு வாய்ப்பளிக்கும் வகையில், இந்த போட்டிகள் நடைபெறும். இதில் 6 அணிகள் விளையாடும்.
  • ஒரு சீசனில் Elite பிரிவின் கடைசி இடத்தை பிடிக்கும் அணி, அடுத்த சீசனில் Plate பிரிவுக்கு தள்ளப்படும். அதேநேரத்தில், Plate பிரிவில் சாம்பியன் பட்டம் வென்ற அணி அடுத்த சீசனில் Elite பிரிவுக்கு முன்னேறும்.
  • அந்த வகையில், நாகாலந்து அணி தற்போது Plate பிரிவுக்கு தள்ளப்பட்டிருக்கிறது. பீகார் அணி தற்போது Elite சுற்றுக்கு தகுதிபெற்றுள்ளது.

ரஞ்சி கோப்பை தொடரின் பிரதான Elite பிரிவில் மொத்தம் 32 அணிகள் உள்ளன. அவை நான்கு குரூப்களாக பிரிக்கப்பட்டுள்ளன. பிளேட் பிரிவில் 6 அணிகள் உள்ளன. அவை இதோ:

குரூப் ஏ குரூப் பி குரூப் சி குரூப் டி  பிளேட் குரூப்
பீகார்கர்நாடகாபெங்கால்மும்பைமிசோரம்
பரோடாஆந்திராடெல்லிராஜஸ்தான்மணிப்பூர்
கோவாசௌராஷ்டிராகுஜராத்ஹரியானாநாகாலாந்து
ஜம்மு காஷ்மீர்சத்தீஸ்கர்ஜார்க்கண்ட்தமிழ்நாடுசிக்கிம்
மத்திய பிரதேசம்ஹைதராபாத்கேரளாஹிமாச்சல் பிரதேசம்மேகாலயா
புதுச்சேரிதிரிபுராமகாராஷ்டிராஉத்தரகாண்ட்அருணாச்சலப் பிரதேசம்
உத்தர பிரதேசம்பஞ்சாப்சர்வீசஸ்ரயில்வேஸ் 
விதர்பாஅசாம்ஒடிசாசண்டிகர் 

மேலும் படிக்க | IND அணியில் புவனேஷ்வர் குமார் ரீ-என்ட்ரி.. முகமது ஷமிக்கு வாய்ப்பு கிடைக்குமா? Explainer

ரஞ்சி கோப்பை தொடரின் பார்மட்

Elite பிரிவு:

  • ஒவ்வொரு குரூப்பிலும் இடம்பெற்றுள்ள அணிகள் தங்கள் பிரிவில் உள்ள மற்ற 7 அணிகளுடன் தலா 1 போட்டியில் விளையாடும்.
  • ரஞ்சி கோப்பை தொடர் இரண்டு கட்டங்களாக நடைபெறும். அக்டோபர் 11 தொடங்கி நவம்பர் 5 வரை முதல் நான்கு சுற்றுப் போட்டிகள் நடைபெறும். அதன்பின் ஜனவரி 17 தொடங்கி மார்ச் 3 வரை மீதம் உள்ள மூன்று சுற்றுப் போட்டிகள், காலிறுதிப் போட்டிகள், அரையிறுதிப் போட்டிகள், இறுதிப்போட்டி என அனைத்து போட்டிகளும் நடைபெறும்.
  • ரஞ்சி கோப்பை தொடரின் இந்த இரண்டு கட்டங்களுக்கு இடையே, விஜய் ஹசாரே கோப்பை (50 ஓவர் உள்நாட்டு தொடர்), சையத் முஷ்டாக் அலி கோப்பை (டி20 உள்நாட்டு தொடர்) நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.
  • குரூப் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள், அதாவது 8 அணிகள் காலிறுதிச் சுற்றுக்கு தகுதிபெறுவார்கள். அதில் வெல்லும் அணிகள் அரையிறுதி, இறுதிப்போட்டி என முன்னேறுவார்கள்.

🎥 A historic moment that brought an incredible Ranji Trophy 2025-26 season to a close 🏆👏 Predict your Champions for this season 👇 #RanjiTrophy 2026-27 begins TOMORROW! @mflone_ https://t.co/gMjC79JMYe

— BCCI Domestic (@BCCIdomestic) October 10, 2026

Plate பிரிவு:

  • இதில் மொத்தமே 6 அணிகள்தான். எனவே ஒரு அணி மற்ற 5 அணிகளுடன் தலா 1 முறை மோதும். இதில் மொத்தமே 5 சுற்று போட்டிகளே நடைபெறும்.
  • இந்த சுற்றின் முடிவில் முதலிரண்டு அணிகள் இறுதிப்போட்டிக்கு தகுதிபெறும். Plate பிரிவின் இறுதிப்போட்டி ஜனவரி 24ஆம் தேதி நடைபெறும்.

ரஞ்சி கோப்பை 2026-27 நட்சத்திர வீரர்கள்

முகமது சிராஜ்: இவர் ஆந்திரா அணியில் இடம்பெற்றுள்ளார், முதல் போட்டியில் கர்நாடகா அணியுடன் ஆந்திரா விளையாடுகிறது.

கேஎல் ராகுல்: இவர் கர்நாடகா அணியில் இடம்பெற்றுள்ளார், முதல் போட்டியில் ஆந்திரா அணியுடன் கர்நாடகா அணி விளையாடுகிறது.

யஷஸ்வி ஜெய்ஸ்வால், சர்ஃபராஸ் கான்: இவர்கள் இருவரும் மும்பை அணியில் இடம்பெற்றுள்ளனர். முதல் போட்டியில் சண்டிகர் அணியுடன் மோதுகின்றனர்.

ஆவேஷ் கான்: இவர் மத்திய பிரதேச அணியில் இடம்பெற்றுள்ளார். இவர் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் ஜம்மு காஷ்மீர் அணியை எதிர்கொள்வார்.

முகமது ஷமி, ஆகாஷ் தீப், முகேஷ் குமார்: இந்த மூன்று வேகப்பந்துவீச்சாளர்களும் பெங்கால் அணி ஸ்குவாடில் இடம்பெற்றுள்ளனர்.

குர்னூர் பிரர், உமேஷ் யாதவ்: இவர்கள் பஞ்சாப் அணி ஸ்குவாடில் இடம்பெற்றுள்ளனர். முதல் போட்டியில் அசாம் அணியை எதிர்கொள்கின்றனர்.

வாஷிங்டன் சுந்தர்: இவர் தமிழ்நாடு அணியில் இடம்பெற்றுள்ளார். முதல் சுற்றில் ராஜஸ்தான் அணியை தமிழ்நாடு எதிர்கொள்கிறது.

இந்த வீரர்கள் நாளைய முதல் சுற்றுப் போட்டிகளில் விளையாடுவார்களா என்பது உறுதி செய்யப்படவில்லை. பிட்னஸ் மற்றும் அணி காம்பினேஷன் அடிப்படையிலேயே இவர்கள் விளையாடுவார்கள்.

முதல் சுற்று போட்டிகளின் அட்டவணை

Plate பிரிவு போட்டிகள்

சிக்கிம் vs மேகாலயா - ரங்போ
அருணாச்சல பிரதேசம் vs நாகாலாந்து - அகமதாபாத்
மிசோரம் vs மணிப்பூர் - நாடியாட்

Elite பிரிவு போட்டிகள்

  • ஆந்திரா vs கர்நாடகா - முளப்பாடு
  • பெங்கால் vs டெல்லி - கல்யாணி
  • பீகார் vs உத்தரபிரதேசம் - ராஜ்கிர்
  • கோவா vs பரோடா - பனாஜி
  • குஜராத் vs ஒடிசா - அகமதாபாத்
  • ஹரியானா vs இமாச்சல பிரதேசம் - ரோஹ்தக்
  • ஹைதராபாத் vs திரிபுரா - ஹைதராபாத்
  • ஜம்மு காஷ்மீர் vs மத்திய பிரதேசம் - ஸ்ரீநகர்
  • ஜார்கண்ட் vs கேரளா - ஜாம்ஷெட்பூர்
  • மும்பை vs சண்டிகர் - மும்பை
  • பஞ்சாப் vs அசாம் - முல்லன்பூர்
  • ரயில்வே vs உத்தரகாண்ட் - CCI, மும்பை
  • ராஜஸ்தான் vs தமிழ்நாடு - ஜெய்ப்பூர்
  • சௌராஷ்டிரா vs சத்தீஸ்கர் - ராஜ்கோட்
  • சர்வீசஸ் vs மகாராஷ்டிரா - புது தில்லி
  • விதர்பா vs புதுச்சேரி - நாக்பூர்

தமிழ்நாடு அணி ஸ்குவாட்

சாய் கிஷோர் (கேப்டன்), ஆண்ட்ரே சித்தார்த் (துணை கேப்டன்), அஜிதேஷ், அஜித் ராம், அதிஷ் எஸ்.ஆர், தீபேஷ் தேவேந்திரன், கோவிந்த் கணேஷ், ஹேம்சுதேஷன், பாபா இந்திரஜித், நாராயண் ஜெகதீசன், நிதிஷ் ராஜகோபால், பிரதோஷ் ரஞ்சன் பால், பிரணவ் ராகவேந்திரா, சரவண குமார், சோனு யாதவ், விமல் குமார், வாஷிங்டன் சுந்தர்.

 

 

 

 

View this post on Instagram

 

 

 

 

 

 

 

 

 

 

 

A post shared by Tamil Nadu Cricket Association (@tncacricket)

தமிழ்நாடு அணியின் குரூப் சுற்று அட்டவணை

  • ராஜஸ்தான் - தமிழ்நாடு (ஜெய்ப்பூர், அக். 11)
  • தமிழ்நாடு - உத்தர பிரதேசம் (சென்னை, அக். 18)
  • தமிழ்நாடு - ரயில்வேஸ் (சென்னை, அக்.26)
  • சண்டிகர் - தமிழ்நாடு (சண்டிகர், நவ.2)
  • தமிழ்நாடு - இமாச்சல் பிரதேசம் (ஜன. 17)
  • தமிழ்நாடு - மும்பை (ஜன. 24)
  • ஹரியானா - தமிழ்நாடு (பிப். 1, ரோஹ்தக்)

மேலும் படிக்க | 4 ஆண்டுகளுக்கு பின் இந்திய அணியில்... புவியின் தேவையும், காத்திருக்கும் சவால்களும்... Explained

Add Zee News as a Preferred Source
TAGS:
Cricket