• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /Photos
  • /டாஸ்மாக் முக்கிய உத்தரவு: மது பாட்டில்களை இறக்க பணப்பரிவர்த்தனை கூடாது

டாஸ்மாக் முக்கிய உத்தரவு: மது பாட்டில்களை இறக்க பணப்பரிவர்த்தனை கூடாது

Written ByKarthikeyan Sekar
Published: Oct 29, 2026, 06:18 PM IST|Updated: Oct 29, 2026, 06:23 PM IST
joinshare
TASMAC latest news : டாஸ்மாக் கடைகளில் சரக்கு இறக்குவதில் புதிய வழிகாட்டுதல்களை மதுரை தெற்கு மாவட்ட மேலாளர் சுற்றறிக்கையாக அனுப்பியுள்ளார்

TASMAC latest news : மதுபான பாட்டில்களை இறக்க பணப்பரிவர்த்தனை கூடாது என டாஸ்மாக் பணியாளர்களுக்கு சுற்றறிக்கை பறந்துள்ளது. இதன் முழு விவரம் இங்கே...

 

TASMAC new rules1/5

டாஸ்மாக் நிர்வாகத்தின் புதிய சுற்றறிக்கை

மதுரை டாஸ்மாக் நிர்வாகத்தின் புதிய சுற்றறிக்கை : மதுரை (தெற்கு) மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் மதுபானக் கிடங்கிலிருந்து சில்லறை விற்பனைக் கடைகளுக்கு மதுபானங்களை ஏற்றி இறக்குவது தொடர்பாக, கடைப் பணியாளர்கள் மற்றும் போக்குவரத்து ஒப்பந்ததாரர்களுக்கு முக்கிய அறிவுறுத்தல்கள் அடங்கிய சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. தலைமை அலுவலக வழிகாட்டுதலின்படி மாவட்ட மேலாளர் அலுவலகம் இதனை வெளியிட்டுள்ளது.
TASMAC new rules2/5

ஒப்பந்ததாரரின் பொறுப்பு

சரக்குகளை இறக்குவது ஒப்பந்ததாரரின் பொறுப்பு : கிடங்கிலிருந்து கடைகளுக்கு மதுபானப் பெட்டிகளைப் பாதுகாப்பாக ஏற்றி இறக்கி வைப்பது முழுமையாகப் போக்குவரத்து ஒப்பந்ததாரரின் பொறுப்பாகும். இதற்காக ஒப்பந்ததாரர் தங்களது சொந்த சுமைதூக்கும் தொழிலாளர்களைக் கொண்டே பெட்டிகளை உரிய முறையில் கடைகளில் இறக்கி வைக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
TASMAC new rules3/5

ஸ்கேன் செய்யும் பணி

கடைப் பணியாளர்களுக்கு மட்டுமே ஸ்கேன் செய்யும் பணி : மதுபானக் கடைகளில் சரக்குகளை இறக்கும்போது, கடைப் பணியாளர்கள் கையடக்கக் கருவி மூலம் மதுபானப் பெட்டிகளை ஸ்கேன் செய்து, சரக்குகளைச் சரிபார்த்துப் பெற்றுக்கொள்வது மட்டுமே அவர்களின் பணியாகும் என்று அதில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
TASMAC new rules4/5

பணப்பரிவர்த்தனைக்குத் தடை

பணப்பரிவர்த்தனைக்குத் தடை : கடைகளில் மதுபானங்களை இறக்கி வைப்பதற்கான அனைத்துக் கட்டணங்களும் மாவட்ட மேலாளர் அலுவலகம் மூலமாகவே போக்குவரத்து ஒப்பந்ததாரருக்கு நேரடியாக வழங்கப்படும். எனவே, சரக்குகளை இறக்குவதற்காகக் கடைப் பணியாளர்களுக்கும் சுமைதூக்கும் தொழிலாளர்களுக்கும் இடையே எவ்வித நேரடி பணப்பரிவர்த்தனையும் இருக்கக்கூடாது என திட்டவட்டமாக அறிவுறுத்தப்பட்டுள்ளது.
TASMAC new rules5/5

புகார் வரக்கூடாது

புகார்களுக்கு இடமளிக்காமல் பணியாற்ற உத்தரவு : இந்த வழிமுறைகளை டாஸ்மாக் கடைப் பணியாளர்களும், போக்குவரத்து ஒப்பந்ததாரர்களும் முறையாகப் பின்பற்றி, எவ்வித புகார்களுக்கும் இடமளிக்காமல் பணியாற்ற வேண்டும் என மதுரை (தெற்கு) மாவட்ட மேலாளர்/துணை ஆட்சியர் எச்சரித்துள்ளார்.
TAGS:
Tamil Nadu

Trending

  • News
  • Photos
  • Videos
SBI கிரெடிட் கார்டு வைத்திருப்பவர்களுக்கு எச்சரிக்கை.. டிசம்பர் 1 முதல் எரிபொருள் செலவுக்கு 1% கூடுதல் கட்டணம்!

SBI கிரெடிட் கார்டு வைத்திருப்பவர்களுக்கு எச்சரிக்கை.. டிசம்பர் 1 முதல் எரிபொருள் செலவுக்கு 1% கூடுதல் கட்டணம்!

2

அம்பாசமுத்திரம் இடைத்தேர்தலில் சீமான் போட்டி - திமுக, அதிமுகவின் பொது வேட்பாளரா?

3

இஸ்ரேலில் ஆட்சி அமைக்கும் புதிய திட்டம்: எதிர்க்கட்சியுடன் கைகோர்க்கும் நெதன்யாகு?

4

சந்தீப் ராய் ரத்தோர் டிரான்ஸ்பர்... 17 கைதிகள் தப்பியதன் எதிரொலி - தமிழக அரசு அதிரடி

5

மின்வாரியத்தில் ஓய்வு பெற்றவர்களுக்கு ஜாக்பாட்! ரூ.1.25 லட்சம் வரை சம்பளத்தில் வேலைவாய்ப்பு

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.