• हिन्दी
  • English
  • मराठी
  • বাংলা
  • தமிழ்
  • മലയാളം
  • ગુજરાતી
  • తెలుగు
  • ಕನ್ನಡ
  • ଓଡ଼ିଶା
  • Z Bharat
  • PHH
  • Business
  • WION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee Tamil News
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /Photos
  • /திருப்பதி ரூ.300 ஸ்பெஷல் தரிசன டிக்கெட் புக்கிங் தொடக்கம்! எப்படி புக் செய்வது?

திருப்பதி ரூ.300 ஸ்பெஷல் தரிசன டிக்கெட் புக்கிங் தொடக்கம்! எப்படி புக் செய்வது?

Written ByYuvashree M
Published: Oct 07, 2026, 06:04 AM IST|Updated: Oct 07, 2026, 06:23 AM IST
joinshare
Tirupati Special Entry Darshan Ticket : திருமலை திருப்பதியில் ஸ்வாமி தரிசனம் செய்வதற்கான முன்பதிவு அக்டோபர் 7ஆம் தேதியான இன்று தொடங்குகிறது. எத்தனை மணிக்கு, எப்படி புக் செய்யலாம் என்று, இங்கு காணலாம்.

Tirupati Special Entry Darshan Ticket : ரூ.300 செலுத்தி, திருப்பதியில் ஸ்வாமி தரிசனம் செய்வதற்கான ஸ்பெஷல் எண்ட்ரி டிக்கெட் முன்பதிவு அக்டோபர் 7ஆம் தேதியான இன்று தொடங்குகிறது. இது குறித்த விவரங்களை இங்கு தெரிந்து கொள்வோம்.

tirupati dharshan purattasi month1/5

திருப்பதி கோயில் தரிசனம் - புரட்டாசி மாதம்

திருமலை திருப்பதி கோயிலில், தினந்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்து சாமி தரிசனம் செய்வது வழக்கம். அதிலும், இது புரட்டாசி மாதம் என்பதால், அனைத்து நாட்களிலும் மக்கள் கடல் அலை போல் திரண்டு பெருமாளை சாமி தரிசனம் செய்து வருகின்றனர். இந்த கூட்டத்தை ஓரளவுக்கு சமாளித்து, பெருமாளை தரிசிக்க ரூ.300 டிக்கெட் உதவும்.
300 rs special entry dharshan tickets2/5

ரூ.300 ஸ்பெஷல் எண்ட்ரி தரிசன டிக்கெட் முன்பதிவு

ரூ.300 ஸ்பெஷல் தரிசன டிக்கெட் முன்பதிவு, அக்டோபர் 7ஆம் தேதியான இன்று, காலை 10 மணியளவில் தொடங்க இருக்கிறது. வரும் 12, 13,14, 18, 19, 20 உள்ளிட்ட தேதிகளில் சாமி தரிசனம் செய்வதற்கான டிக்கெட்டுகள், இன்று காலை தொடங்குகின்றனர்.
60000 tickets will be booked3/5

சுமார் 60000 டிக்கெட்டுகள் வரை முன்பதிவு

ஒரு நாளைக்கு 10,000 டிக்கெட்டுகள் வீதம், மொத்தம் 6 நாளைக்கு 60,000 டிக்கெட்டுகள் வரை முன்பதிவு செய்யப்பட இருக்கின்றன. ஸ்ரீவாரி நவராத்திரி பிரம்மோத்சவத்தை முன்னிட்டு, அதிக கூட்டம் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
navratri bhramotsava heavy crowd4/5

நவராத்திரி பிரம்மோஸ்தவத்தால் அலைமோதும் கூட்டம்

நவராத்திரி பிரம்மோத்சவத்தை முன்னிட்டு, விஐபி தரிசனம் சில நாட்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. கூடவே, சிபாரிசு கடிதங்களும் ஏற்றுக்கொள்ளப்படாது என்றும், அக்டோபர் 10-9 வரை மட்டும் ஒரு சிலருக்கு இதில் விலக்கு இருக்கும் என்றும் கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
tirupati devasthana special entry5/5

திருப்பதி தேவஸ்தான ஸ்பெஷல் எண்ட்ரி டிக்கெட்டுகள்

திருப்பதி தரிசனத்துக்கான ஸ்பெஷல் எண்ட்ரி டிக்கெட்டுகள், ttdevashtanams.ap.gov.in எனும் இணையதளத்தின் வாயிலாக மட்டுமே புக் செய்ய வேண்டும். புக் செய்வதற்கு முன், உங்கள் ஆதார் நம்பருடன் ரெடியாக அதிவேக இணையதள வசதியுடைய மொபைல் அல்லது கம்ப்யூட்டரை வைத்துக்கொள்ளுங்கள். ஒரு சில நிமிடங்களில் இந்த டிக்கெட்டுகள் தீர்ந்து விடும் என்பது குறிப்பிட தக்கது.
TAGS:
Tour Travel

Trending

  • News
  • Photos
  • Videos
8வது ஊதியக் குழு: லெவல் 6-8 அரசு ஊழியர்களுக்கு 1 லட்சத்தைத் தாண்டும் அடிப்படை ஊதியம்!!

8வது ஊதியக் குழு: லெவல் 6-8 அரசு ஊழியர்களுக்கு 1 லட்சத்தைத் தாண்டும் அடிப்படை ஊதியம்!!

2

4 புறநகர் ரயில்கள் பகுதி ரத்து! 11 நாட்களுக்கு பராமரிப்பு பணிகள்..எந்த வழித்தடத்தில்?

3

அக்டோபர் 7 ராசிபலன் : மேஷத்திற்கு வளர்ச்சி..மீனத்திற்கு ஆதாயம்! உங்கள் ராசிக்கு என்ன?

4

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 அறிவிப்பு! 6,574 காலிப் பணியிடங்கள் – விண்ணப்பிப்பது எப்படி?

5

அரசுப் பள்ளிகளில் காலிப் பணியிடங்கள் கணக்கெடுப்பு தொடக்கம்! அரசு லேட்டஸ்ட் அப்டேட்

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.