Today Rasi Palan: இன்று (நவம்பர் 18, 2026) புதன்கிழமை, கார்த்திகை 02 ஆம் நாள். மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான இன்றைய பலன்கள் இங்கே!
1/13
மேஷம்
குடும்பத்தின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். கொடுக்கல் வாங்கலில் இருந்த தாமதங்கள் விலகும். பொன் பொருள்கள் சேர்க்கை உண்டாகும். எதிர்பாராத சில புதிய வாய்ப்புகள் கிடைக்கும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். கலை துறைகளில் திறமைகள் வெளிப்படும். உடல் ஆரோக்கிய பிரச்சனைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். கைத்தொழிலில் மேன்மை உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : அடர் நீல நிறம்
அஸ்வினி : தாமதங்கள் விலகும்.
பரணி : வாய்ப்புகள் கிடைக்கும்.
கிருத்திகை : மேன்மை உண்டாகும்.
2/13
ரிஷபம்
நண்பர்கள் ஆதரவாக பேசுவார்கள். சமூகப் பணிகளில் மரியாதை உயரும். வீடு வாகனங்களை சீர் செய்வீர்கள். பெரியோர்களின் சந்திப்பால் மனமாற்றம் ஏற்படும். எதையும் சமாளிக்கும் சாமர்த்தியம் பிறக்கும். அலுவலகத்தில் சில நெளிவு சுளிவுகளை கற்றுக் கொள்வீர்கள். வாழ்க்கைத்துணையின் வழியில் ஆதாயம் ஏற்படும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்
கிருத்திகை : மரியாதை உயரும்.
ரோகிணி : மாற்றம் ஏற்படும்.
மிருகசீரிஷம் : ஆதாயகரமான நாள்.
3/13
மிதுனம்
பிடிவாத போக்கினை குறைத்துக் கொள்ளவும். ஜாமீன் விஷயங்களில் சிந்தித்து செயல்படவும். பிள்ளைகளால் மதிப்புகள் உயரும். விலகி சென்றவர்கள் விரும்பி வருவார்கள். வியாபாரத்தில் மாற்றங்கள் ஏற்படும். மற்றவர்களின் தேவைகளை நிறைவேற்றி வைப்பீர்கள். எதிர்பாராத சில வரவுகளால் சேமிப்புகள் மேம்படும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்
மிருகசீரிஷம் : சிந்தித்து செயல்படவும்.
திருவாதிரை : மாற்றங்கள் ஏற்படும்.
புனர்பூசம் : சேமிப்புகள் மேம்படும்.
4/13
கடகம்
சிந்தனைகளில் கவனம் வேண்டும். உடன் பிறந்தவர்கள் இடத்தில் அனுசரித்து செல்லவும். புதிய தொழில்நுட்ப கருவிகளில் கவனம் வேண்டும். மனதளவில் ஒரு விதமான பதற்றங்கள் ஏற்பட்டு நீங்கும். கணித தொடர்பான துறைகளில் அலட்சியம் இன்றி செயல்படவும். பூர்வீக சொத்துக்களால் அலைச்சல்கள் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : நீல நிறம்
புனர்பூசம் : கவனம் வேண்டும்.
பூசம் : பதற்றங்கள் நீங்கும்.
ஆயில்யம் : அலைச்சல்கள் உண்டாகும்.
5/13
சிம்மம்
வெளிவட்டாரத்தில் மதிப்புகள் உயரும். குழந்தைகள் வழியில் மகிழ்ச்சி உண்டாகும். உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பு மனதிற்கு புதிய மாற்றத்தை ஏற்படுத்தும். சுபகாரிய பேச்சுவார்த்தை சாதகமாக முடியும். தான தர்மங்களில் மனம் ஈடுபடும். தடைபட்ட செயல்களை செய்து முடிப்பீர்கள். பிரபலமானவர்களின் அறிமுகம் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்
மகம் : மதிப்புகள் உயரும்.
பூரம் : மாற்றமான நாள்.
உத்திரம் : அறிமுகம் உண்டாகும்.
6/13
கன்னி
பேச்சுகளில் அனுபவ அறிவு வெளிப்படும். தடைப்பட்ட சில காரியங்களை முடிப்பீர்கள். உடன் இருப்பவர்கள் மூலம் ஆதாயத்தை உருவாக்குவீர்கள். திடீர் வரவுகளால் கையிருப்புகள் மேம்படும். வியாபாரத்தில் லாபம் உண்டாகும். உயர் அதிகாரிகளிடம் இருந்த வேறுபாடுகள் மறையும். மனதளவில் இருந்த கவலைகள் நீங்கி புத்துணர்ச்சி பெறுவீர்கள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் மஞ்சள் நிறம்
உத்திரம் : அனுபவம் வெளிப்படும்.
அஸ்தம் : கையிருப்புகள் மேம்படும்.
சித்திரை : புத்துணர்ச்சியான நாள்.
7/13
துலாம்
இலக்கியப் பணிகளில் மாற்றம் ஏற்படும். திறமைகளை வெளிப்படுத்துவதில் கவனம் வேண்டும். கணவன் மனைவிக்கிடையே புரிதல் ஏற்படும். மறை பொருள் சார்ந்த தேடல்கள் அதிகரிக்கும். இறை சார்ந்த சிந்தனைகள் உண்டாகும். தனிப்பட்ட விஷயங்கள் பகிர்வதை தவிர்க்கவும். செயல்பாடுகளில் சுதந்திரம் மேம்படும்.
அதிர்ஷ்ட திசை : வடமேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்
சித்திரை : மாற்றம் ஏற்படும்.
சுவாதி : புரிதல் ஏற்படும்.
விசாகம் : சுதந்திரம் மேம்படும்.
8/13
விருச்சிகம்
கல்வியில் இருந்த குழப்பங்கள் குறையும். உடன் பிறந்தவர்கள் பக்கபலமாக செயல்படுவார்கள். வியாபார இடமாற்ற எண்ணங்கள் பிறக்கும். பிரபலமானவர்களின் ஒத்துழைப்புகள் கிடைக்கும். கடன் பிரச்சனைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். சக ஊழியர்கள் ஆதரவால் திட்டமிட்ட காரியம் நிறைவேறும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
விசாகம் : குழப்பங்கள் குறையும்.
அனுஷம் : ஒத்துழைப்புகள் கிடைக்கும்.
கேட்டை : எண்ணம் ஈடேறும்.
9/13
தனுசு
குடும்ப உறுப்பினர்களிடம் ஒத்துழைப்புகள் மேம்படும். நீண்ட நாள் பிரச்சனைகளுக்கு தீர்வுகள் கிடைக்கும். வெளிவட்டாரத்தில் மதிப்புகள் உயரும். அதிரடியான சில செயல்கள் மூலம் மாற்றத்தை உருவாக்குவீர்கள். உயர் அதிகாரிகளிடம் நெருக்கம் மேம்படும். எதிலும் திட்டமிட்டு செயல்படுவீர்கள். மனதளவில் புதிய தன்னம்பிக்கை பிறக்கும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்
மூலம் : தீர்வுகள் கிடைக்கும்.
பூராடம் : மாற்றமான நாள்.
உத்திராடம் : தன்னம்பிக்கை பிறக்கும்.
10/13
மகரம்
குடும்பத்தில் சிறுசிறு விவாதங்கள் ஏற்பட்டு நீங்கும். கடன் உதவிகள் கிடைக்கும். நீண்ட நேரம் கண்விழிப்பதை தவிர்க்கவும். நண்பர்கள் வழியில் அலைச்சல்கள் ஏற்படும். அலுவல் பணிகளில் விவேகம் வேண்டும். மற்றவர்கள் பற்றிய கருத்துக்களை தவிர்க்கவும். இறை வழிபாடு புரிதலை உருவாக்கும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : வடமேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்
உத்திராடம் : உதவிகள் கிடைக்கும்.
திருவோணம் : அலைச்சல்கள் ஏற்படும்.
அவிட்டம் : ஒத்துழைப்புகள் கிடைக்கும்.
11/13
கும்பம்
உறவுகள் வழியில் அனுசரித்து செல்லவும். பாடங்களில் சிறுசிறு குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும். கால்நடை பற்றிய புரிதல்கள் அதிகரிக்கும். சேமிப்பு சார்ந்த ஆலோசனைகள் கிடைக்கும். சஞ்சலமான சிந்தனைகளை தவிர்ப்பது மன அமைதியை கொடுக்கும். பயனற்ற வாக்குறுதிகளை தவிர்ப்பது நல்லது. பெற்றோர் வழியில் சிறு சிறு வேறுபாடுகள் ஏற்பட்டு நீங்கும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
அவிட்டம் : அனுசரித்து செல்லவும்.
சதயம் : ஆலோசனைகள் கிடைக்கும்.
பூரட்டாதி : வேறுபாடுகள் நீங்கும்.
12/13
மீனம்
தம்பதிகளுக்குள் அனுசரித்து செல்லவும். கொடுக்கல் வாங்கலில் கவனம் வேண்டும். வழக்கு விஷயங்களில் திருப்பங்கள் உண்டாகும். பூர்வீகச் சொத்துகளால் அலைச்சல் ஏற்படும். வாகனப் பயணங்களில் மிதமான வேகம் நன்று. மறைமுக எதிர்ப்புகள் ஏற்பட்டு நீங்கும். விவேகமான செயல்பாடுகள் நல்ல மாற்றத்தை உருவாக்கும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீல நிறம்
பூரட்டாதி : கவனம் வேண்டும்.
உத்திரட்டாதி : அலைச்சல் ஏற்படும்.
ரேவதி : மாற்றமான நாள்.
13/13
பொறுப்புத் துறப்பு
இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.