திருச்சி மாவட்டத்தில் புதிய வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. முழு விவரங்களை தெரிந்து கொள்ளுங்கள்
திருச்சியில் போக்சோ சட்டத்தின் கீழ் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உதவும் Support Person பணிக்கு விண்ணப்பிக்கலாம். முழு விவரங்களை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்
1/6
திருச்சிராப்பள்ளி மாவட்ட வேலைவாய்ப்பு
பாலியல் குற்றங்களால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உரிய உதவி மற்றும் ஆதரவு வழங்கும் நோக்கில், திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் 'ஆதரவு நபர்' ஆகத் தேர்வு செய்து பட்டியலிடுவதற்குத் தகுதியுடைய நபர்கள் மற்றும் அமைப்புகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார்.
2/6
கல்வித்தகுதி
இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் குழந்தைகள் உரிமைகள் அல்லது குழந்தைகள் பாதுகாப்புத் துறையில் பணிபுரியும் தனிநபராகவோ அல்லது அமைப்பாகவோ இருக்க வேண்டும். அல்லது சமூகப்பணி, சமூகவியல், சட்டம், உளவியல், குழந்தை மேம்பாடு உள்ளிட்ட குழந்தைகள் நலன் சார்ந்த துறைகளில் முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
3/6
குறைந்தபட்ச வயது
இளங்கலைப் பட்டம் பெற்றவர்கள் குழந்தைகள் கல்வி, மேம்பாடு, சுகாதாரம் அல்லது பாதுகாப்பு சார்ந்த பணிகளில் குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். தனிநபர் விண்ணப்பதாரர்களுக்குக் குறைந்தபட்ச வயது 25 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
4/6
ஒப்புகைச் சீட்டு கட்டாயம்
தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் https://tiruchirappalli.nic.in/ என்ற திருச்சிராப்பள்ளி மாவட்ட அதிகாரப்பூர்வ இணையதளத்திலிருந்து விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்ய வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் கல்வித் தகுதி, பணி அனுபவம் ஆகியவற்றின் சுய சான்றொப்பமிட்ட நகல்கள் மற்றும் காவல்துறை சரிபார்ப்புச் சான்றிதழ் அல்லது அதற்கு விண்ணப்பித்ததற்கான ஒப்புகைச் சீட்டைக் கட்டாயம் இணைக்க வேண்டும்.
5/6
விண்ணப்ப முகவரி
விண்ணப்ப உறையின் மீது "Application for Empanelment as Support Person - Trichy District" எனக் குறிப்பிட்டு, வரும் 05.12.2026 அன்று மாலை 5.00 மணிக்குள் நேரில் அல்லது அஞ்சல் மூலமாகச் சமர்ப்பிக்க வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை "மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, N.E.1, முதல் தளம், மெக்டொனால்ட்ஸ் சாலை, கலையரங்கம் வளாகம், கண்டோன்மெண்ட், திருச்சிராப்பள்ளி - 1" என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
6/6
மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு
குறிப்பிட்ட காலக்கெடுவிற்குப் பிறகு பெறப்படும் விண்ணப்பங்கள் மற்றும் முழுமையற்ற விண்ணப்பங்கள் எவ்வித முன்னறிவிப்புமின்றி நிராகரிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்தத் தேர்வில் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தைச் சேர்ந்த விண்ணப்பதாரர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.