• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /Photos
  • /பறவைக் காய்ச்சல்: வண்டலூர் பூங்கா இன்று முதல் மூடல்... வெளியான முக்கிய அறிவிப்பு!

பறவைக் காய்ச்சல்: வண்டலூர் பூங்கா இன்று முதல் மூடல்... வெளியான முக்கிய அறிவிப்பு!

Written ByUmabarkavi K
Published: Oct 22, 2026, 10:13 AM IST|Updated: Oct 22, 2026, 10:22 AM IST
joinshare
Vandaloor Zoo Closed Latest News: சென்னை அடுத்த வண்டலூரில் உள்ள உயிரியல் பூங்காவுக்கு பார்வையாளர்களுக்கு 2 நாட்கள் அனுமதி கிடையாது என அறிவிக்கப்பட்டுள்ளது. பறவைக் காய்ச்சல் உறுதி செய்யப்பட்டதை அடுத்து, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Vandaloor Zoo Closed Latest News:  இரண்டு நாட்களுக்கு பிறகு, வண்டலூர் உயிரியல் பூங்கா வழக்கம்போல் திறந்திருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
 

Vandalur Zoo1/5

வண்டலூர் உயிரியியல் பூங்கா

சென்னையை அடுத்த வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியியல் பூங்காவுக்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்வார்கள். சுமார் 1,490 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த பூங்காவில் 180 வகைகளைச் சேர்ந்த 2500க்கும் மேற்பட்ட விலங்குகள், பறவைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றனர். இந்த பூங்காவை காண சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதியில் இருந்து மட்டுமின்றி, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள், வெளிமாநிலங்களில் இருந்தும் பார்வையாளர்கள் வருகை தருவார்கள்.
Vandalur Zoo2/5

வண்டலூர் இரண்டு நாட்களுக்கு மூடப்படும்

இந்த நிலையில், வண்டலூர் பூங்கா இரண்டு நாட்கள் மூடப்படும் எனவும் பார்வையாளர்களுக்கு இன்றும், நாளையும் அனுமதி கிடையாது என அறிவிக்கப்பட்டுள்ளது. போபாலில் உள்ள தேசிய உயர் பாதுகாப்பு விலங்கு நோய்கள் நிறுவனம் (NIHSAD), வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா விலங்கியல் பூங்காவில் உள்ள நீர்ப்பறவைகளுக்கு H5N1 பறவைக் காய்ச்சல் தொற்று ஏற்பட்டிருப்பதை உறுதி செய்தது.
Vandalur Zoo3/5

அக்டோபர் 22,23ஆம் தேதி பூங்கா மூடல்

அக்டோபர் 3 முதல் 9ஆம் தேதிக்குள் நான்கு வண்ண நாரைகள், ஒரு சாம்பல் கூழைக்கடா, ஒரு சாம்பல் நாரை மற்றும் ஒரு பாம்புப் பறவை உட்பட ஏழு நீர்ப்பறவைகள் இறந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பறவைக்க காய்ச்சலால் உயிரிழந்தது கண்டறியப்பட்டது. தொடர்ந்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இரண்டு நாட்கள் வண்டலூர் உயிரியியல் பூங்கா மூடப்படும் என அறிவிக்கப்பட்டது.
Vandalur Zoo4/5

நீர்பறவைகளுக்கு பறவைக் காய்ச்சல்

பறவைகளை பாதுகாக்கவும், பார்வையாளர்கள் மற்றும் ஊழியர்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் எடுக்கப்பட்ட ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவே வண்டலூர் பூங்கா இரண்டு நாட்களுககு மூடப்படுவதாக அதிகாரிகள் கூறுகின்றனர். இறப்புகள் பதிவான உடனேயே, தடுப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, ஏழு நாட்களுக்கு நீர்ப்பறவைகளுக்கு மீன்கள் மூலம் நோய்த்தடுப்பு வாய்வழி நுண்ணுயிர் எதிர்ப்பிகள், மூலிகை வைரஸ் எதிர்ப்பு மருந்துகள், நோய் எதிர்ப்பு சக்தியைத் தூண்டும் மருந்துகளை வழங்கியதாக அதிகாரிகள் கூறினர்.
Vandalur Zoo5/5

வண்டலூர் பூங்கா நிர்வாகம் எடுத்த நடவடிக்கை

பறவைக் காய்ச்சல் எனப் பொதுவாக அறியப்படும் ஏவியன் இன்ஃப்ளூயன்ஸா, முதன்மையாகப் பறவைகளைத் தாக்கும் ஒரு வைரஸ் தொற்றாகும். H5N1 உட்பட சில வகை வைரஸ்கள், எப்போதாவது மனிதர்களையும் பாதிக்கக்கூடும் என்பதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும், பாதிக்கப்பட்ட பறவைகளுடன் தொடர்பைத் தவிர்ப்பதும் முக்கியமானதாகிறது. எனவே, வண்டலூர் பூங்கா நிர்வாகத்தின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைளுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
TAGS:
Chennai

Trending

  • News
  • Photos
  • Videos
PF ரிட்டர்ன் தாக்கல் காலக்கெடு நீட்டிக்கப்படுமா? EPF குறித்து முக்கிய அம்சங்கள்!

PF ரிட்டர்ன் தாக்கல் காலக்கெடு நீட்டிக்கப்படுமா? EPF குறித்து முக்கிய அம்சங்கள்!

2

Beef சாப்பிடுவியா? பள்ளியில் ஆசிரியர் கேட்ட கேள்வி.. மாணவர் எடுத்த விபரீத முடிவு.. வகுப்பறையில் நடந்த கொடூரம்

3

LIC ஹவுசிங் ஃபைனான்ஸ் நிறுவனத்தில் வேலை: டிகிரி போதும்.. 232 அப்ரண்டிஸ் பணியிடங்கள், எப்படி விண்ணப்பிப்பது?

4

குருவால் உருவாகும் மங்கள யோகம்! இந்த 3 ராசிகளுக்கு கோடீஸ்வர யோகம்.. தீபாவளிக்கு பிறகு பொற்காலம்

5

Explainer: அகவிலைப்படி எப்போது அதிகரிக்கும்? ஏன் இந்த தாமதம்? பொறுமை இழக்கும் அரசு ஊழியர்கள்

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.