SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

ஐப்பசி மாத ராசிபலன்: சூரிய பெயர்ச்சியால் அதிர்ஷ்டம் பெறும் 3 ராசிகள்!

சூரியன் துலாம் ராசிக்கு பெயர்ச்சியடைவதால் உருவாகும் கிரக சேர்க்கைகளின் அடிப்படையில், ஐப்பசி மாதத்தில் சிம்மம், துலாம், மகரம் ஆகிய 3 ராசிக்காரர்களுக்கு வேலை, தொழில் மற்றும் வருமானத்தில் சாதகமான பலன்கள் கிடைக்கலாம்.

Written By R Balaji
Published: Oct 12, 2026, 02:08 PM IST | Updated: Oct 12, 2026, 02:12 PM IST
Join

தமிழ் மாதங்கள் பிறப்பதற்கு காரணமாக அமைவது சூரியனின் ராசி மாற்றமாகும். அந்த வகையில், அக்டோபர் 17 ஆம் தேதி சூரியன் கன்னி ராசியிலிருந்து துலாம் ராசிக்கு பெயர்ச்சியாக உள்ளார். இந்த பெயர்ச்சியுடன் ஐப்பசி மாதம் தொடங்குகிறது.

நவம்பர் 16 ஆம் தேதி வரை சூரியன் துலாம் ராசியில் சஞ்சரிப்பார். இந்த காலகட்டத்தில் துலாம் ராசியில் சூரியன், புதன், சுக்கிரன் ஆகிய மூன்று கிரகங்களும் இணையும் சூழல் உருவாகிறது. ஜோதிட நம்பிக்கைகளின்படி, சூரியன் மற்றும் புதன் சேர்க்கையால் புதாதித்ய யோகமும், சூரியன் மற்றும் சுக்கிரன் சேர்க்கையால் சுக்ராதித்ய யோகமும் உருவாகின்றன. மேலும், மூன்று கிரகங்களின் சேர்க்கை திரிகிரக யோகமாக கருதப்படுகிறது.

இந்த கிரக அமைப்புகளின் அடிப்படையில், ஜப்பசி மாதம் சில ராசிக்காரர்களுக்கு சாதகமான பலன்களை வழங்கும். வேலை தொழில், வருமானம் மற்றும் தனிப்பட்ட முயற்சிகளில் முன்னேற்றம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படும் அந்த மூன்று ராசிகள் குறித்து இங்கு பார்க்கலாம்.

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களுக்கு ஜப்பசி மாதம் தன்னம்பிக்கையையும் செயல்திறனையும் அதிகரிக்கும் காலமாக இருக்கலாம். நீண்ட நாட்களாக முயற்சி செய்து வந்த சில காரியங்களில் முன்னேற்றம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. முடிக்கப்படாமல் நிலுவையில் இருக்கும் பணிகளை திட்டமிட்டு செயல்பட்டு நிறைவு செய்யலாம்.

பணிபுரிபவர்களுக்கு அலுவலகத்தில் புதிய பொறுப்புகள் கிடைக்கலாம். உங்களுடைய அழைப்புக்கு அங்கீகாரம் கிடைப்பதுடன், சம்பள உயர்வு அல்லது பதவி உயர்வு தொடர்பான சாதகமான சூழல்களும் உருவாகலாம். தொழில் செய்து வருபவர்கள் புதிய முயற்சிகளில் கவனம் செலுத்தலாம். சரியான திட்டமிடலும் தொடர்ச்சியான உழைப்பும் தொழில் வளர்ச்சிக்கு உதவக்கூடும்.

துலாம்

சூரியன் துலாம் ராசியிலேயே சஞ்சரிப்பதால், இந்த ராசிக்காரர்களுக்கு ஜப்பசி மாதம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. பணியிடத்தில் உங்களுடைய செயல்பாடுகள் கவனத்தை பெறலாம். இதுவரை நிர்ணயித்த இலக்குகளை அடைவதற்கான வாய்ப்புகள் உருவாகலாம். சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கக்கூடும். வேலை மாற்றத்தை எதிர்பார்த்து கொண்டிருப்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கலாம். அதேபோல், தொழிலில் புதிய பொறுப்புகளை ஏற்கும் சூழலும் ஏற்படலாம். வருமானத்தை அதிகரிப்பதற்கான முயற்சிகளில் முன்னேற்றம் காண வாய்ப்புள்ளது. இருப்பினும், முக்கியமான பணிகளை மேற்கொள்ளும்போது அவசர முடிவுகளை தவிர்த்து கவனமாக செயல்படுவது நல்லது.

மகரம்

மகர ராசிக்காரர்களுக்கு தொழில் மற்றும் பணியிட முன்னேற்றத்தில் கவனம் செலுத்த வேண்டிய மாதமாக ஜப்பசி அமையலாம். சூரியன் உங்கள் ராசிக்கு 10ஆம் இடத்தில் சஞ்சரிக்கிறது. வேலையில் புதிய வாய்ப்புகள் உருவாகலாம். நீண்ட காலமாக தாமதமாகி வந்த பணிகளை முடிப்பதற்கான சூழலும் அமையக்கூடும். பணிபுரிபவர்கள் தங்களுடைய திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகளை பயன்படுத்தி கொள்ளலாம். தொழில் செய்பவர்களுக்கு வளர்ச்சிக்கான புதிய திட்டங்களை தொடங்கும் எண்ணம் ஏற்படலாம். பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்கான முயற்சிகளிலும் கவனம் செலுத்தலாம். முக்கிய முடிவுகளை எடுக்கும்போது கிடைக்கும் தகவல்களை முழுமையாக ஆராய்ந்து செயல்படுவது அவசியம்.

பொறுப்பு துறப்பு: இங்கு கொடுக்கப்பட்டிருக்கும் தகவல்கள் ஜோதிடக் கணிப்புகள், பொதுவான நம்பிக்கைகளின் அடிப்படையில் எழுதப்பட்டவை. இதனை Zee Tamil News உறுதிப்படுத்தவில்லை.
 

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

நான் ஊடகத் துறையில் 5 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வருகிறேன். தற்போது ஜீ நியூஸ் தமிழில் Content Writer ஆக வேலை பார்க்கும் எனக்கு விளையாட்டு, அரசியல் மற்றும் க்ரைம் சார்ந்த செய்திகளை எழுதுவதில் அதிக ஆர்வம் உண்டு.

ZEENEWS TRENDING STORIES