SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

பாபா வாங்கா கணித்த 2026: உலகை மாற்றப் போகும் அந்த 3 நிகழ்வுகள்!

Baba Vanga 2026 Predictions : உலகில், மிகவும் புகழ்பெற்ற கணிப்பாளராக விளங்கிய பாபா வாங்கா, 2026ஆம் ஆண்டுக்காக முக்கியமாக மூன்று கணிப்புகளை விட்டு சென்றிருக்கிறார். இந்த கணிப்புகள் நிறைவேறும் நாள் நெருங்கி விட்டது. அவை என்னென்ன தெரியுமா? இதோ விவரம்!

Written By Yuvashree M
Published: Aug 09, 2026, 01:17 PM IST | Updated: Aug 10, 2026, 05:50 PM IST
Join

Baba Vanga 2026 Predictions : எதிர்காலத்தில் நடக்கப் போவதை முன்கூட்டியே கணிக்கும் ஆற்றல் பெற்றவராக விளங்கியவர் என கூறப்பட்டவர் பாபா வாங்கா. இவருடைய ஒரு சில கணிப்புகள் உண்மையாகவே நிகழ்ந்துள்ளதோடு இவர் கூறியபடி நடந்து விட்டதாக இவரை நம்புபவர்கள் கூறுகின்றனர். அந்த வகையில் இவர் 2026 ஆம் ஆண்டு குறித்து எழுதி இருக்கும் முக்கியமான மூன்று கணிப்புகள் நிகழப்போகும் நாள் நெருங்கி விட்டதாக கூறப்படுகிறது.

பாபா வாங்கா யார்?

பாபா வாங்கா, சிறு வயதிலேயே தன்னுடைய பார்வையை இழந்தவர். இவருக்கு எதிர்காலத்தில் நடக்கப்போகும் நிகழ்வுகளை முன்கூட்டியே அறியும் சக்தி கிடைத்ததாக கூறப்படுகிறது. சொல்லப்போனால், இவர் 12 வயது சிறுமியாக இருந்த போதே பார்வையிழந்ததாகவும் எதிர்காலத்தை கணிக்கும் அபூர்வமான சக்தி கிடைத்ததாகவும் கூறப்படுகிறது. இதனாலேயே இவர் தன்னுடைய 30வது வயதுக்குள் பெரும் புகழ் அடைந்ததாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது.

பாபா வாங்காவிடம் இன்னொரு பழக்கமும் இருக்கிறது. அவர் எந்த விஷயத்தையும் நேரடியாக கூற மாட்டார். அனைத்தையும் மறைமுகமான வார்த்தைகளாக கொண்டு, தனக்கு தெரிந்த காட்சிகளை வெளிப்படுத்துவார்.

பாபா வாங்காவின் கணிப்புகள்..

பாபா வாங்க தன்னுடைய கணிப்பில், இரண்டு உலோகப்பறவைகள் அமெரிக்க சகோதரர்கள் மீது மோதுகின்றன என்றும், அவ்விடம் சாம்பலாக மாறுகிறது என்றும் தன்னுடைய கணிப்பில் தெரிவித்துள்ளார். மேலும், அங்கு மனித ரத்தம் ஆறாக பாய்கிறது என்றும் கணித்திருக்கிறார். இதை, அமெரிக்க இரட்டை கோபுர தாக்குதலின் கணிப்பு என பல பேர் நம்புகின்றனர்.

இதே போல, இவர் இயற்கை பேரிடர்கள் குறித்தும், மனித தொழிலாளர்களுக்கு மாற்று வரும் என்பது குறித்தும் பல்வேறு கணிப்புகளை வெளியிட்டிருக்கிறார். அவை நடைமுறையில் அவ்வப்போது நிகழ்ந்து கொண்டு இருப்பதாக பல பேர் நம்புகின்றனர்.

2026ஆம் ஆண்டுக்கான கணிப்புகள்:

2026ஆம் ஆண்டு முடிவதற்குள்ளாக, ஒரு பெரிய விண்கலம் பூமிக்கு வரும் என்றும்ம், மூன்றாம் உலகப்போர் தொடங்கும் என்றும், ரஷியாவின் தலைமையில் பெரும் மாற்றங்கள் நிகழும் என்றும் பாபா வாங்க கணித்து வைத்திருக்கிறார். இதில் ஹைலைட் என்னவென்றால், 2026ஆம் ஆண்டுக்குள் இவை அனைத்தும் நிகழும் என்று அவர் தெரிவித்திருக்கிறார். 2026ஆம் ஆண்டு முடிவதற்கு இன்னும் 5 மாதங்கள் மட்டுமே இருக்கிறது. மேற்கூறிய கணிப்புகளில் ஒரு கணிப்பிற்கு வரும் நவம்பர் மாதமே காலக்கெடு கொடுக்கப்பட்டிருக்கிறது.

பாபா வாங்கா இதற்கு முன் குறித்த கணிப்பு:

பாபா வாங்கா, 1996ஆம் ஆண்டிலேயே மறைந்து விட்டார். ஆனால் அதற்கு முன்னாலேயே, பல நூற்றாண்டுகளுக்கு தேவையான குறிப்பை எடுத்துவிட்டு சென்றிருக்கிறார். இவர், 1997ல் நடந்த இளவரசி டயானாவின் மறைவு, 9/11 அட்டாக், 2004ல் சுனாமி பேரழ்வு, கொரோனா நோய் தொற்று உள்ளிட்டவை குறித்து சரியாக கணித்திருப்பதாக அவருடைய கணிப்புகளை நம்புபவர்கள் கூறுகின்றனர். அதே போல, அவர் 2026ஆம் ஆண்டு குறித்து வெளியிட்டிருக்கும் கணிப்புகளும் இருக்குமோ என்கிற நம்பிக்கை அவரை பின்தொடர்பவர்களுக்கு இருக்கிறது.

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

யுவஸ்ரீ, 3 ஆண்டுகளுக்கும் மேல் டிஜிட்டல் மீடியாவில் பணியாற்றி வருகிறேன். சினிமா, வைரல், குற்றம் மற்றும் உள்ளூர் சம்பந்தப்பட்ட செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உள்ளது. கதை மற்றும் கவிதைகளை எழுதுவதும், அவற்றை சில மேடைகளில் பகிர்வதும் எனக்கு பிடித்த விஷயங்கள்.

ZEENEWS TRENDING STORIES