Maduranthakkam By Election Result 2026: மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் முடிவுகள் வெளியாகி வருகின்றன. தமிழ்நாடு அரசியலில் ஆளும் தவெகவுக்கு இந்த இடைத்தேர்தல் மிக முக்கியானவை எனலாம்.
கடந்த ஏப்ரல் மாதம் நடந்த பொதுத்தேர்தலில் இந்த 2 தொகுதிகளிலும் அதிமுக வெற்றி பெற்றது. அந்த வகையில், மதுராந்தகம் தொகுதியின் எம்எல்ஏ மரகதம் குமரவேல் தனது பதவியையும், தாராபுரம் தொகுதியின் எம்எல்ஏ சத்யபாமா தனது எம்எல்ஏ பதவியையும் ராஜினாமா செய்ததால் இடைத்தேர்தல் வந்தது.
இதில் தவெக சார்பில் மதுராந்தகத்தில் மரகதம் குமரவேல் மற்றும் தாராபுரத்தில் சத்யபாமா ஆகியோர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்கள். முதலமைச்சர் விஜய் உள்பட அமைச்சர்கள் பலரும் இரண்டு தொகுதிகளிலும் தீவிர பரப்புரையை மேற்கொண்டனர். அக். 6ஆம் தேதி அன்று தேர்தல் நடைபெற்றது, இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.
இந்த இரண்டு தொகுதிகளிலும் ஆளும் தவெக வேட்பாளர்களுடன் பிரதான எதிர்க்கட்சியான திமுக, இரண்டு தொகுதிகளையும் கைப்பற்றியிருந்த அதிமுக, நாம் தமிழர் கட்சி ஆகிய நான்கு கட்சிகள் போட்டியிட்டன. அதேபோல், மதுராந்தகம் தொகுதியில் சிபிஎம் கட்சியும், தாராபுரம் தொகுதியில் சிபிஐ கட்சியும் போட்டியிட்டன.
இந்நிலையில், தற்போது வாக்குகள் எண்ணப்பட்டு வரும் சூழலில் தவெக - திமுக - அதிமுக இடையேதான் கடும் போட்டி நிலவுகிறது. அதிலும் தாராபுரம் தொகுதியில் ஒரு கட்டத்தில் அதிமுக முன்னிலை பெற்று வந்த நிலையில், காலை 10.30 மணியளவில் தவெக முன்னிலை பெற்றது. தற்போது தாராபுரத்தில் அதிமுக 3வது இடத்திற்கு தள்ளப்பட்டு, திமுக 2வது இடத்திற்கு முன்னேறியிருக்கிறது.
#JustIn | 2வது இடத்தில் திமுக #ZeeTamilNews | #Dharapuram | #TNByElections | #TVK | #DMK https://t.co/g5fvxiQF7X
— Zee Tamil News (@ZeeTamilNews) October 9, 2026
| வேட்பாளர்கள் | வாக்குகள் |
| சத்யபாமா (அதிமுக) | 81,100 (40.56%) |
| இந்திராணி (திமுக) | 64,373 (32.20%) |
| கௌரி சித்ரா (தவெக) | 46,438 (23.23%) |
| திவ்யா (நாம் தமிழர்) | 6,026 (3.01%) |
மதுராந்தகம் தொகுதியில் தவெக வேட்பாளர் மரகதம் குமரவேல் ஆரம்பத்தில் இருந்தே தொடர்ச்சியாக முன்னிலையில் இருந்து வருகிறார். அதேநேரத்தில், பொதுத்தேர்தலில் மூன்றாவது இடத்தை பிடித்த திமுக தற்போது இரண்டாம் இடத்தில் தொடர்ந்து நீடிக்கிறது. பொதுத்தேர்தலில் வென்ற அதிமுக, இந்த முறை 3வது இடத்திற்கு தள்ளப்பட்டது.
#JustIn | 11,825 வாக்குகள் வித்தியாசத்தில் தவெக முன்னிலை #ZeeTamilNews | #Madurantakam | #ByElection | #ByElectionResult | #VoteCounting | #TVK https://t.co/OzpK0aUcFb
— Zee Tamil News (@ZeeTamilNews) October 9, 2026
| வேட்பாளர்கள் | வாக்குகள் |
| மரகதம் குமரவேல் (அதிமுக) | 69,284 (34.95%) |
| எழில் கேத்ரின் ஏழுமலை (தவெக) | 62,090 (31.32%) |
| அமுலு பொன்மலர் (திமுக) | 59,838 (30.18%) |
| ஜானகிராமன் (நாம் தமிழர்) | 4,950 (2.50%) |
தாராபுரம் தொகுதியில் அதிமுக பின்னுக்கு தள்ளப்பட்டது அதிர்ச்சியளித்தாலும், மதுராந்தகம் தொகுதியில் அதிமுக தொடர்ச்சியாக பின்னடைவில் உள்ளதற்கு ஒரு வகையில் பாமகவும் காரணம் என அரசியல் வல்லுநர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.