SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

தீபாவளியில் உருவாகும் மங்களகரமான யோகம்.. இந்த 4 ராசிகளுக்கு ஜாக்பாட்.. பொற்காலம் ஆரம்பம்

Budhaditya Rajyog On Diwali: தீபாவளி அன்று புதாதித்ய ராஜயோகம் உருவாகிறது. இதனால், தீபாவளி அன்று உருவாகும் இந்த யோகத்தால் சில ராசிக்காரர்களுக்கு நேர்மறையான ஆற்றல் உண்டாகும. எனவே, அவை என்னென்ன ராசசிகள் என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்ப்போம்.

Written By Umabarkavi K
Published: Oct 31, 2026, 04:42 PM IST | Updated: Oct 31, 2026, 05:00 PM IST
Join

Budhaditya Rajyog On Diwali: நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை நவம்பர் 8ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்நாள் இந்துகளின் முக்கியமான பண்டிகையாக கருதப்படுகிறது. இந்நாள் ஜோதிட ரீதியாகவும் முக்கியத்துவம் பெறுகிறது. இந்நாளில் சிறப்பு வாய்ந்த யோகம் உருவாகுகிறது. நவம்பர் 8ஆம் தேதி தீபாவளி அன்று புதாதித்ய ராஜயோகம் உருவாகிறது. இது ஜோதிட ரீதியாக முக்கியத்துவம் பெறுகிறது. இந்த புதாதித்ய ராஜயோகம் அறிவு, வியாபாரம், வெற்றி ஆகியவற்றை குறிக்கிறது. இந்த யோகம் பல ராசிக்காரர்களுக்க நன்மைகளை உண்டாகும். 

புதன் சூரியன் சேர்க்கையால் புதாதித்ய ராஜயோகம் உருவாகிறது. இந்த இரண்டு கிரகங்களும் ஒரே ராசியில் இருப்பது தொழில், நிதி விஷயங்களுக்கு முக்கியமானதாக கருதப்படுகிறது. அக்டோபர் 17ஆம் தேதி அன்று சூரியன் துலாம் ராசியில் பெயர்ச்சி அடைந்தது. மேலும், நவம்பர் 8ஆம் தேதி புதன் துலாம் ராசியில் பெயர்ச்சி அடைவார். இதனால், புதாத்திய ராஜயோகம் உருவாகிறது. தீபாவளி அன்று  புதாத்திய ராஜயோகத்தால் மேஷம், துலாம், கன்னி, கும்பம் ஆகிய ராசிக்காரர்களுக்கு நேர்மறையான ஆற்றல் உண்டாகும். எனவே, அவை என்னென்ன ராசிகள் என்பது குறித்து இந்த தொகுப்பில்  பார்ப்போம்.

மேலும் படிக்க: நவம்பர் 16ல் உருவாகும் குரு மங்கள யோகம்.. இந்த 3 ராசிகளுக்கு பணவரவு, அதிர்ஷ்டம்!

மேஷம் (Aries Zodiac Sign)

தீபாவளி அன்று உருவாகும் ராஜயோகத்தால் மேஷ ராசிக்காரர்கள் நன்மை உண்டாகும். நினைத்த காரியங்கள் நடக்கும். உடன் பிறந்தவர்களின் ஆதரவு இருக்கும். புதிய நண்பர்களின் அறிமுகம் கிடைக்கும். செயல்களில் எதிர்பார்த்த ஆதாயம் கிடைக்கும். பணி நிமித்தமாக புதிய வாய்ப்புகள் வந்து சேரும். ஏற்றுமதி இறக்குமதி வியாபாரத்தில் வருமானம் அதிகரிக்கும். தவறிய சில வாய்ப்புகள் மீண்டும் கிடைக்கும். திட்டமிட்டுச் செயல்படுவதால் நன்மை உண்டாகும். கொடுக்கல் வாங்கலில் விவேகம் வேண்டும். இல்லத்தில் நல்ல காரியம் நடைபெறும். பொழுதுபோக்கு விஷயத்தில் ஆர்வம் ஏற்படும். மனதில் நினைத்ததை செய்து முடிப்பீர்கள்.  நெருக்கடியான சில பிரச்சனைகள் குறையும். ஆதாயம் தரும் செயல்களில் அக்கறை காட்டுவீர்கள். பணி மாற்ற சிந்தனைகள் மேம்படும். தொழில் வளர்ச்சிக்கு உதவிகள் கிடைக்கும்.

துலாம் (Libra Zodiac Sign)

தீபாவளி அன்று உருவாகும்  இந்த யோகத்தால் துலாம் ராசிக்காரர்கள் செல்வம், அதிர்ஷ்டம் பெருகும். தீபாவளி அன்று நல்ல காரியங்கள் நடக்கும். பிள்ளைகளால் மகிழ்ச்சி ஏற்படும். வாகனப் பயணத்தில் கவனம் வேண்டும். தெய்வீக சிந்தனை மேலோங்கும். மனதில் இருந்த தேக்க நிலை மாறித் தெளிவு பிறக்கும். பணி சார்ந்து அலைச்சல் ஏற்படும். கேளிக்கை செயல்களில் ஆர்வம் உண்டாகும். 

ஆரோக்கியம் சார்ந்து சில விரயம் உண்டாகும். பங்குதாரர்களிடம் விழிப்புணர்வுடன் இருக்கவும். விலகிச்சென்ற உறவுகள் தேடி வருவார்கள். அரசு வழியில் ஒத்துழைப்புகள் ஏற்படும். மறதியால் அலைச்சல் உண்டாகும். சுபகாரிய எண்ணங்கள் ஈடேறுவதில் தாமதங்கள் உருவாகலாம். விமர்சனப் பேச்சுகளை தவிர்க்கவும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். வியாபாரத்தில் இருந்த மறைமுக எதிர்ப்புகள் நீங்கும்.

மேலும் படிக்க: குரு அதிசார பெயர்ச்சி இன்று: மேஷம் முதல் மீனம் வரை... யாருக்கு சாதகம்? யாருக்கு பாதகம்?

கன்னி (Virgo Zodiac Sign)

தீபாவளி அன்று உருவாகும் புதாத்திய ராஜயோகத்தால் கன்னி ராசிக்காரர்களுககு நன்மை உண்டாகும். இந்த யோகத்தால் புதிய பொறுப்புகள் கிடைக்கும். தாயின் எண்ணங்களை நிறைவேற்றுவீர்கள். சஞ்சலமான சிந்தனைகளால் செயல்பாடுகளில் தடுமாற்றம் ஏற்படும். வியாபார அபிவிருத்திக்கான சூழல் உண்டாகும். பொழுதுபோக்கு விஷயங்களில் கவனத்துடன் செயல்படவும். பொதுமக்களால் புதிய அனுபவங்கள் ஏற்படும். எதிர்பாராத சில பயணங்கள் முலம் மனதளவில் மாற்றம் ஏற்படும். உத்தியோகத்தில் பொறுமை வேண்டும். 

தனவரவுகள் மூலம் சேமிப்புகள் அதிகரிக்கும். திட்டமிட்ட பணிகளை முடிப்பீர்கள். நவீன மின்னணு சாதனங்கள் மீதான ஆர்வம் மேம்படும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளால் ஏற்பட்ட மனக்கசப்புகள் நீங்கும். சக ஊழியர்களின் ஒத்துழைப்பு மேம்படும். சேமிப்பு தொடர்பான சிந்தனைகள் பிறக்கும். மாணவர்களுக்கு வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகள் கைகூடும்.

கும்பம் (Aquarius Zodiac Sign)

புதாத்திய ராஜயோகத்தால்  கும்ப ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் உண்டாகும். கணவன்-மனைவியிடையே நெருக்கம் அதிகரிக்கும். திறமைகள் மூலம் மதிப்புகள் உயரும். வியாபார பணிகளில் முன்னேற்றம் ஏற்படும். மற்றவர்களின் கருத்துக்களுக்கு மதிப்பளித்து செயல்படவும். வெளிவட்டத்தில் கௌரவம் மேம்படும். கமிஷன் துறைகளில் ஆதாயம் அடைவீர்கள். கலகலப்பான பேச்சுக்கள் மூலம் மகிழ்ச்சியான தருணங்கள் ஏற்படும். பழக்கவழக்கங்களில் சிறுசிறு மாற்றங்கள் உருவாகும். மனதை உருத்திய சில கவலைகள் விலகும். பொருளாதார தொடர்பான சிக்கல்கள் குறையும். பாதியில் நின்ற பணிகளை செய்து முடிப்பீர்கள். தாய்மாமன் வகையில் ஒத்துழைப்பு மேம்படும்.

மேலும் படிக்க: குரு பெயர்ச்சி: நாளை முதல் 6 ராசிகளுக்கு ஜாக்பாட்!! வாழ்வில் உச்சம் தொடுவார்கள்

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை)
 

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

I am Uma Barkavi as a journalist with 5 years of experience across various media platforms, including TV and digital media. Since 2021, she has covered Tamil Nadu, lifestyle, national, political, and astrology news. She focuses on delivering engaging digital news content in a reader-friendly and informative format.

ZEENEWS TRENDING STORIES