• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /இந்தியா
  • /'தூஸ்ரா' படத்திற்கு எதிராக சவுரவ் கங்குலி வழக்கு.. பின்னணி என்ன? Explained

'தூஸ்ரா' படத்திற்கு எதிராக சவுரவ் கங்குலி வழக்கு.. பின்னணி என்ன? Explained

தனது கிரிக்கெட் சாதனைகள் மற்றும் அடையாளத்தை அனுமதியின்றி வணிக ரீதியாக பயன்படுத்தியதாக 'தூஸ்ரா' படக்குழுவுக்கு எதிராக சவுரவ் கங்குலி டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

Written ByR Balaji
Published: Oct 31, 2026, 03:48 PM IST|Updated: Oct 31, 2026, 03:52 PM IST
joinshare
'தூஸ்ரா' படத்திற்கு எதிராக சவுரவ் கங்குலி வழக்கு.. பின்னணி என்ன? Explained

About the Author

R Balaji

R Balaji

நான் ஊடகத் துறையில் 5 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வருகிறேன். தற்போது ஜீ நியூஸ் தமிழில் Content Writer ஆக வேலை பார்க்கும் எனக்கு விளையாட்டு, அரசியல் மற்றும் க்ரைம் சார்ந்த செய்திகளை எழுதுவதில் அதிக ஆர்வம் உண்டு.
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
தீபாவளியில் உருவாகும் மங்களகரமான யோகம்.. இந்த 4 ராசிகளுக்கு ஜாக்பாட்.. பொற்காலம் ஆரம்பம்

தீபாவளியில் உருவாகும் மங்களகரமான யோகம்.. இந்த 4 ராசிகளுக்கு ஜாக்பாட்.. பொற்காலம் ஆரம்பம்

2

வங்கக்கடலில் உருவாகும் புதிய புயல்: நாளை முதல் தமிழகத்தில் கனமழை எச்சரிக்கை!

3

'தூஸ்ரா' படத்திற்கு எதிராக சவுரவ் கங்குலி வழக்கு.. பின்னணி என்ன? Explained

4

ரூ.200க்கு 10 மளிகைப் பொருட்கள்.. ரேஷன் அட்டை இல்லாமல் வாங்க முடியுமா? முக்கிய அறிவிப்பு

5

கே.என். நேரு ஊழல் வழக்கில்... சீரியல் நடிகைக்கு தொடர்பா...? அவரே கொடுத்த விளக்கம்

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி. இவர் சமீபத்தில் தொடரப்பட்ட வழக்குதான் பேசுப்பொருளாகி உள்ளது. தனது அனுமதியின்றி வாழ்க்கை சம்பவங்களையும் கிரிக்கெட் சாதனைகளையும் பயன்படுத்தியதாக கூறி, Doosra திரைப்படத்தின் தயாரிப்பாளர்களுக்கு எதிராக டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். குறிப்பாக, 2002ம் ஆண்டு நாட்வெஸ்ட் தொடரின் இறுதிப்போட்டி தொடர்பான காட்சிகள் படத்தில் இடம்பெற்றிருப்பது இந்த சர்ச்சைக்கு முக்கிய காரணமாகி உள்ளது.

இந்த விவகாரத்தில் கங்குலியின் தனிப்பட்ட அடையாளத்தை பயன்படுத்துவதற்கான உரிமை மட்டுமின்றி, அவரது வாழ்க்கை வரலாற்று படத்தை உருவாக்க ஏற்கனவே மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தமும் கேள்விக்குள்ளாகி உள்ளது. அப்படி என்ன நடந்தது? தூஸ்ரா படக்குழுவின் விளக்கம் என்ன? நீதிமன்றம் கூறியது என்ன? என்பதை விரிவாக பார்க்கலாம்.

கங்குலி நீதிமன்றத்திற்கு சென்றது ஏன்?

கங்குலி தனது வாழ்க்கையை மையமாக கொண்டு திரைப்படம் தயாரிப்பதற்காக, 2021 ஆகஸ்ட் 5ம் தேதி Luv Films தயாரிப்பு நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்திருந்தார். இதன்படி, அவரது வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக கொண்டு Dada என்ற பெயரில் திரைப்படம் உருவாக்கும் உரிமையை அந்த நிறுவனம் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த ஒப்பந்தத்தில் கங்குலியின் பெயர், உருவம், குரல், ஆளுமை மற்றும் அவரது வாழ்க்கையில் இடம்பெற்ற முக்கிய சம்பவங்கள் உள்ளிட்டவற்றை பயன்படுத்துவதற்கான உரிமைகளும் இடம்பெற்றுள்ளதாக Luv Films தரப்பு தெரிவித்துள்ளது. இந்த சூழலில், Doosra திரைப்படத்தில் கங்குலியின் வாழ்க்கை மற்றும் கிரிக்கெட் சாதனைகள் அனுமதியின்றி பயன்படுத்தப்பட்டுள்ளதாக அவர் தரப்பில் ஆட்சேபனை தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், கங்குலியும் Luv Films நிறுவனமும் இணைந்து படத்தின் தயாரிப்பாளர்களுக்கு எதிரான வழக்கு தொடர்ந்துள்ளனர்.

2002 நாட்வெஸ்ட் தொடர் சர்ச்சைக்கு என்ன காரணம்?

கங்குலியின் கிரிக்கெட் வாழ்க்கையில் மற்ற முடியாத தருணங்களில் ஒன்று 2002ம் ஆண்டு நடைபெற்ற நாட்வெஸ்ட் தொடரின் இறுதிப்போட்டி. லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற அந்த போட்டியில், இங்கிலாந்து நிர்ணயித்த இலக்கை இந்திய அணி வெற்றிகரமாக எட்டியது.

இந்த வெற்றிக்கு பிறகு லார்ட்ஸ் மைதானத்தின் பால்கனியில் நின்று கங்குலி தனது சட்டையை சுழற்றி சுழற்றி கொண்டாடிய காட்சி இந்திய கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் கவனம் பெற்றது. அவரது கேப்டன்சி காலத்தின் அடையாளமாகவும் அந்த சம்பவம் பார்க்கப்படுகிறது.

Doosra திரைப்படத்தின் இரண்டாம் பாதியில் இந்த நாட்வெஸ்ட் தொடரின் இறுதிபோட்டி தொடர்பான காட்சிகள் அதிகமாக இடம்பெற்றுள்ளதாக கங்குலி தரப்பு நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. மேலும், தனது உருவம் மற்றும் அடையாளம் வணிக நோக்கத்திற்காக அனுமதியின்றி பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் வாதிட்டுள்ளது.

தூஸ்ரா படக்குழு கூறுவது என்ன?

கங்குலியின் வாழ்க்கை வரலாற்றை மையமாக கொண்டு Doosra திரைப்படம் உருவாக்கப்படவில்லை என்பதே படக்குழுவின் முக்கிய விளக்கமாக உள்ளது. ராஜஸ்தானை சேர்ந்த தாரா என்ற இளம்பெண்ணின் கற்பனை கதையை மையமாக கொண்ட விளையாட்டு திரைப்படம் இது எனத் தெரிவித்துள்ளது.

சமூக கட்டுப்பாடுகளையும் எதிர்பார்ப்புகளையும் எதிர்கொள்ளும் ஒரு பெண்ணின் கதையில், இந்திய கிரிக்கெட்டின் முக்கியமான தருணங்கள் உத்வேகமாக பயன்படுத்தப்பட்டுள்ளதாக படக்குழு கூறியுள்ளது. கங்குலி இந்த படத்தின் நேரடி கதாநாயகன் அல்ல. அவரது கிரிக்கெட் பயணம் படத்தின் மைய கதாபாத்திரத்துக்கு உத்வேகம் அளிக்கும் வகையில் மட்டுமே இடம்பெற்றுள்ளதாகவும் விளக்கம் அளித்துள்ளது.

மேலும், படத்தில் பயன்படுத்தப்பட்டுள்ள கிரிக்கெட் கட்சிகளுக்கான உரிமைகளை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம், இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் வாரியம் உள்ளிட்ட தொடர்புடைய அமைப்புகளிடமிருந்து பெற்றுள்ளதாகவும் படக்குழு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டெல்லி உயர்நீதிமன்றம் சொல்வது என்ன?

Doosra திரைப்படத்தை திரையரங்குகளில் வெளியிடத் தடை விதிக்க வேண்டும் என்று கங்குலி தரப்பில் முதற்கட்டமாக கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால், அக்டோபர் 22ம் தேதி இந்த கோரிக்கையை டெல்லி உயர்நீதிமன்றம் ஏற்கவில்லை. தொடர்ந்து அக்டோபர் 23ஆம் தேதி படக்குழுவிடம் விளக்கம் கோரியதுடன், திரைப்படத்தை நீதிமன்றத்தில் திரையிட்டு காட்டவும் அறிவுறுத்தியது.

அக்டோபர் 29 ஆம் தேதி நடைபெற்ற விசாரணையின்போது, படத்தில் எந்தெந்த காட்சிகள் ஆட்சேபனைக்குரியவை என்பதை தெளிவாக குறிப்பிடுமாறு கங்குலி தரப்பு வழக்கறிஞர்களிடம் நீதிமன்றம் கேட்டுக்கொண்டது. அந்த காட்சிகள் இடம்பெறும் நேரம் மற்றும் அவற்றுக்கு எதிர்ப்பு தெரிவிப்பதற்கான காரணங்களையும் பட்டியலிட அறிவுறுத்தியது. மேலும், திரைப்படத்தின் பிரதியை பென் டிரைவில் சமர்ப்பிக்குமாறும் Luv Films தயாரிக்க திட்டமிட்டுள்ள Dada திரைப்படத்திற்கான கதை வடிவத்தை சீல் வைக்கப்பட்ட உறையில் தாக்கல் செய்யுமாறும் நீதிமன்றம் கேட்டுள்ளது. இதன் மூலம், இரு தரப்பினரும் முன்வைக்கும் உரிமை கோரிக்கைகளை ஆராய முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

திரைப்படத்தின் சில காட்சிகள் மட்டுமே சர்ச்சைக்குரியதாக இருக்கும் நிலையில், ஒட்டுமொத்த படத்தையும் தடை செய்ய வேண்டிய அவசியம் என்ன என்றும் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்குவது அல்லது ஒலியை முடக்குவது, அந்த காட்சிகளை பயன்படுத்துவதற்கான உரிமம் பெறுவது, படத்தின் தொடக்கத்தில் மறுப்பு அறிவிப்பை சேர்ப்பது போன்ற மாற்று வழிகளையும் பரிசீலிக்கலாம் என குறிப்பிட்டுள்ளது.

தூஸ்ரா திரைப்படம் எதை பற்றியது?

Doosra: India’s Other Freedom Struggle என்ற பெயரில் உருவாகியுள்ள இந்தப் படத்தை அபினய் தியோ இயக்கியுள்ளார். பிளாபிதா போர்த்தாகூர், அங்குர் விகல், சமிதா குரு உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

ராஜஸ்தானை சேர்ந்த நடுத்தரக் குடும்ப பெண்ணின் வாழ்க்கையையும், இந்திய கிரிக்கெட் நிகழ்வுகள் அவரது வாழ்க்கையில் ஏற்படுத்தும் தாக்கத்தையும் மையமாக கொண்டு கதை அமைக்கப்பட்டுள்ளது. சமூக எதிர்பார்ப்புகளை எதிர்கொள்ளும் பெண்ணின் பயனத்தை விளையாட்டு பின்னணியில் படமாக்கியுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.

அடுத்து என்ன நடக்கும்?

இந்த வழக்கில் கங்குலியின் ஆளுமை உரிமை மீறப்பட்டதா அல்லது Luv Films நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட ஒப்பந்த உரிமைகள் பாதிக்கப்பட்டுள்ளனவா என்பது குறித்து டெல்லி உயர் நீதிமன்றம் இதுவரை இறுதி முடிவு எடுக்கவில்லை. சர்ச்சைக்குரிய காட்சிகள் குறித்த விவரங்களையும், இரு தரப்பினரின் வாதங்களையும் ஆய்வு செய்த பிறகே அடுத்தகட்ட முடிவு எடுக்கப்படும்.

இந்த வழக்கின் அடுத்த விசாரணை நவம்பர் 2-ம் தேதி நடைபெற உள்ளது. அதில் திரைப்படத்தின் குறிப்பிட்ட காட்சிகளை மாற்ற வேண்டுமா, நீக்க வேண்டுமா அல்லது வேறு ஏதேனும் நடவடிக்கை எடுக்க வேண்டுமா என்பது குறித்து விவாதிக்கப்படலாம். அதுவரை படத்தை திரையரங்குகளில் இருந்து திரும்ப பெற வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிடவில்லை.
 

Add Zee News as a Preferred Source
TAGS:
Explainer