SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

குரு பகவானுக்கு மிகவும் பிடித்த 4 ராசிகள்.. பணம், அதிர்ஷ்டம் எப்போதும் குறையாது!

Guru Bhagavan Favorite Zodiac Signs: குரு பகவான் உச்சம் பெற்றால், அதன் தாக்கம் மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளின் மேலும் இருக்கும். இருப்பினும் குருவிற்கு பிடித்த ராசிகள் என 4 ராசிகள் உள்ளன. அவர்களுக்கு எப்போதும் பண தேவைகளில் குறை இருக்காது. அப்படி அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார் யார் என்பதை இங்கே பார்க்கலாம்.

Reported By R Balaji Written By R Balaji
Published: Aug 07, 2026, 06:44 PM IST | Updated: Aug 10, 2026, 05:48 PM IST
Join

ஜோதிட சாஸ்திரத்தில் நவகரகங்களில் சுப கிரகம் என்றும் தேவகுரு என்றும் போற்றப்படுபவர் குரு ஆவார். ஒருவரின் ஜாதகத்தில் குருவின் நிலை எவ்வளவு வலுவாகவும் சிறப்பாகவும் அமைந்துவிட்டால், அவர்களுக்கு வாழ்க்கையில் செல்வ செழிப்பு, வேலயில் உயர் பதவி, நல்லறிவு மற்றும் மனநிம்மதி ஆகியவை தடையின்றி கிடைக்கும் என்பது ஜோதிட நம்பிக்கை. "குரு பார்க்க கோடி நன்மை" என்ற பழமொழிக்கேற்ப, குருவின் பார்வை மற்றும் அனுகிரகம் ஒரு மனிதனை வாழ்க்கையின் உச்சத்திற்கு கொண்டு செல்லும்.

அனைத்து ராசிகளுக்கும் பலன்களை வழங்கி வந்தாலும், சில குறிப்பிட்ட ராசிகள் மீது குரு பகவானுக்கு எப்போதும் தனிப்பிரியமும், சிறப்பு ஆசீர்வாதமும் உண்டு. அந்த அதிர்ஷ்டகரமான 4 ராசிக்காரர்கள் யார் யார் என்பதை இங்கு விரிவாக தெரிந்துக்கொள்வோம்.

கடகம் (Cancer Zodiac Signs)

கடக ராசியின் அதிபதியாக சந்திரன் திகழ்கிறார். ஜோதிட சாஸ்த்திரத்தின்படி, குரு பகவான் உச்சம் அடையும் ராசி கடகம் ஆகும். இதனால் கடக ராசியில் பிறந்தவர்களுக்கு இயல்பாகவே குருவின் பூரண அருள் எப்போதும் இருக்கும். இந்த ராசிக்காரர்கள் செய்யும் தொழிலில் அல்லது பார்க்கும் வேலையில் மிக விரைவாக முன்னேற்றம் மற்று பதவி உயர்வை பெறுவார்கள். புதிய பொறுப்புகள் தேடி வரும். குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும். குறிப்பாக, புத்திர பாக்கியம் மற்றும் குழந்தைகளின் முன்னேற்றத்தால் சமூகத்தில் பெரும் புகழும் மரியாதையும் கிடைக்கும்.

தனுசு (Sagittarius Zodiac Signs)

தனுசு ராசியின் சொந்த அதிபதியே குரு பகவான் தான். தனது சொந்த வீட்டிற்கு எப்போதும் நன்மைகளையே செய்யும் குரு, தனுசு ராசிக்காரர்களின் நிதி நிலையை மிகவும் பலப்படுத்துவார். அசையா சொத்துக்கள், நிலம் மற்றும் வீடுகள் வாங்கும் யோகம் இவர்களுக்கு எளிதில் கூடிவரும். மேலும், திருமண வாழ்க்கையில் நிலவும் தடைகள் நீங்கி, தம்பதியரிடையே அன்பும் அமைதியும் நிலவ குருவின் அருள் பெரிதும் துணை நிற்கும்.

சிம்மம் (Leo Zodiac Signs)

சிம்ம ராசியின் அதிபதி சூரியன் ஆவார். ஜோதிட ரீதியாக சூரியனுக்கும் குருவிற்கும் இடையே நட்பு ரீதியிலான பிணைப்பு உள்ளது. இதன் காரணமாக சிம்ம ராசிக்காரர்கள் மீது குருவின் பார்வை எப்போதும் இருக்கும். குருவின் அருளால் இவர்களுக்கு திடீர் பணவரவும், தொழிலில் முன்னேற்றம் மற்றும் அபரிமிதமான வெற்றியும் சாத்தியமாகும். எந்தத் துறையில் காலடி வைத்தாலும் அதில் தலைசிறந்து விளங்கும் வாய்ப்பை குரு பகவான் வழங்கி அருள்வார்.

மீனம் (Pisces Zodiac Signs)

தனுசை போலவே மீனம் ராசியையும் குரு பகவான் ஆள்கிறார். நீர் ராசியான மீனத்தில் குரு அதிபதியாக இருப்பதால், இந்த ராசிக்காரர்களுக்கு இயல்பாகவே ஆன்மீக ஈடுபாடும், உயர்ந்த சிந்தனைகளும் இருக்கும். குருவின் அருள் எப்போதும் தடையின்றி கிடைப்பதால், இவர்களுக்கு வாழ்க்கையில் பெரிய பொருளாதார நெருக்கடிகள் ஏற்படுவதில்லை. ஆபத்து காலங்களில் இவர்களை காக்கும் அரணாக குரு பகவானின் அருள் எப்போதும் இருக்கும்.

இந்த 4 ராசிகளில் பிறந்தவர்கள் குரு பகவானை வியாழக்கிழமை தோறும் வழிபட்டு, தட்சிணாமூர்த்திக்கு மஞ்சள் நிற மலர்கள் சாற்றி வழிபாடு செய்து வந்தால், வாழ்க்கையில் மேலும் பல வெற்றிகளை பெறலாம்.

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
 

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

நான் ஊடகத் துறையில் 5 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வருகிறேன். தற்போது ஜீ நியூஸ் தமிழில் Content Writer ஆக வேலை பார்க்கும் எனக்கு விளையாட்டு, அரசியல் மற்றும் க்ரைம் சார்ந்த செய்திகளை எழுதுவதில் அதிக ஆர்வம் உண்டு.

ZEENEWS TRENDING STORIES