SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

குரு - புதன் சேர்க்கை.. இந்த 3 ராசிகளுக்கு ஜாக்பாட்! பணம், பதவி தேடி வரும்!

குரு மற்றும் புதன் பகவானின் சேர்க்கை ஆகஸ்ட் 15 ஆம் தேதி நிகழ்ந்த நிலையில், மூன்று ராசிக்காரர்களுக்கு தொழில், பணம், என அனைத்திலும் அதிர்ஷ்டம் கிடைக்க இருக்கின்றன.

Reported By R Balaji Written By R Balaji
Published: Aug 16, 2026, 04:18 PM IST | Updated: Aug 16, 2026, 04:26 PM IST
Join

ஜோதிட சாஸ்த்திரன்படி, நவகிரகங்கள் குறிப்பிட்ட கால இடைவெளியில் தங்களின் ராசி மற்றும் நட்சத்திரத்தை மாற்றுகின்றன. அப்படி முக்கிய கிரகங்களான புதன் மற்றும் குரு பகவானும் தனது ராசி, நட்சத்திரத்தை மாற்றி கொள்கின்றன. கிரகங்களின் இளவரசராக அறியப்படும் புதன் பகவான் அறிவு, தகவல் தொடர்பு உள்ளிட்ட பல்வேறு விஷயங்களின் காரணியாக திகழ்கிறது. அதேபோல் குரு பகவான் ஞானம், அதிர்ஷ்டம், செழிப்பு ஆகியவற்றை குறிக்கிறது.

இந்த நிலையில், குரு பகவானும், புதனும் ஆகஸ்ட் 15 ஆம் தேதி ஒன்றினைந்துள்ளனர். இவர்களின் இந்த சேர்க்கையானது குறிப்பிட்ட 3 ராசிக்காரர்களின் தொழில், பணவரவு மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்த போகிறது. அந்த அதிர்ஷ்ட ராசிகள் யார் என்று பார்ப்போம்.

ரிஷபம் (Taurus Zodiac Signs)

ரிஷப ராசியினருக்கு இந்த கிரக சேர்க்கை பொற்காலமாக இருக்க போகிறது. பணிபுரியும் இடத்தில் சக ஊழியர்களின் ஆதரவுடன் நற்பெயர் கிடைக்கும். சம்பள உயர்வு மற்றும் தொழில் விரிவாக்கத்திற்கான முயற்சிகள் கைகூடும். புதிய முதலீடுகளை தொடங்குவதற்கு இது மிக சிறந்த தருணம். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த கனவுகள் மற்றும் ஆசைகள் நனவாகும். பழைய சிக்கல்கள் அனைத்தும் முடிவுக்கு வந்து, மன அமைதியும் குடும்பத்தில் சுபிட்சமும் உண்டாகும்.

தனுசு (Sagittarius Zodiac Signs)

தனுசு ராசிக்காரர்களுக்கு குரு மற்றும் புதனின் சேர்க்கையால் தொட்டதெல்லாம் துலங்கும் காலம் இது. கடின உழைப்புக்கு ஏற்ற பதவி உயர்வு, புதிய பொறுப்புகள் மற்றும் சமூகத்தில் உயர் அந்தஸ்து தேடி வரும். புதிய வணிக ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி பணப்புழக்கம் மளமளவென உயரும். தொழிலை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்ல சாதகமான சூழல் நிலவும். குடும்பத்தில் இருந்துவந்த மனக்கசப்புகள் மறைந்து மகிழ்ச்சியும் ஒற்றுமையும் பெருகும்.

மகரம் (Capricorn Zodiac Signs)

மகர ராசியினருக்கு இந்த சேர்க்கை அதிர்ஷ்ட கதவை திறக்கிறது. உத்தியோகத்தில் எதிர்பாராத நன்மைகள் உண்டாகும். வெளிநாடு சென்று பணிபுரியும் அல்லது பயணம் மேற்கொள்ளும் வாய்ப்புகள் கூடிவரும். பணியிடத்தில் உங்கள் திறமைக்கான பாராட்டும் மதிப்பும் கிடைக்கும். உடல்நலனில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு புத்துணர்ச்சியுடன் செயல்படுவீர்கள். குடும்பப் பிரச்சினைகள் பேச்சுவார்த்தை மூலம் சுமுகமாக முடியும். திருமணமாகாதவர்களுக்கு மனதிற்குப் பிடித்த வரன் கிடைத்து புதிய வாழ்க்கை தொடங்கும்.

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
 

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

நான் ஊடகத் துறையில் 5 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வருகிறேன். தற்போது ஜீ நியூஸ் தமிழில் Content Writer ஆக வேலை பார்க்கும் எனக்கு விளையாட்டு, அரசியல் மற்றும் க்ரைம் சார்ந்த செய்திகளை எழுதுவதில் அதிக ஆர்வம் உண்டு.

ZEENEWS TRENDING STORIES