குரு பெயர்ச்சி: இந்த 5 ராசிகளுக்கு அதிர்ஷ்டம்.. பணமழை கொட்டும்!
Guru Peyarchi Palangal: குரு பகவான் வரும் ஆகஸ்ட் 19 ஆம் தேதி ஆயில்யம் நட்சத்திரத்திற்கு பெயர்ச்சி ஆகிறார். இதனால் 5 ராசிக்காரர்கள் அதிர்ஷ்டம் பெறுகின்றனர். அவர்களின் பணவரவு அதிகரிக்கும், சொத்து மதிப்பு உயரும் வாய்ப்புள்ளது.
ஜோதிட சாஸ்திரத்தின்படி, ஒவ்வொரு கிரகமும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் தனது ராசி மற்றும் நட்சத்திரத்தை மாற்றிக்கொள்ளும். இந்த மாற்றம் மனிதர்களின் வாழ்க்கையில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தும். அது நல்ல விதமாகவும் இருக்கலாம் சில கேட்ட விளைவுகளையும் ஏற்படுத்தலாம்.
அந்த வகையில், கிரகங்களில் மிகவும் முக்கிய கரகமாக திகழும் குரு, ஆகஸ்ட் 19 ஆம் தேதி அன்று பூச நட்சத்திரத்தில் இருந்து விலகி, ஆயில்யம் நட்சத்திரத்திற்கு பெயர்ச்சி ஆகிறார். அறிவு, அதிர்ஷ்டம், பொன், பொருள் ஆகியவற்றின் அதிபதியாக திகழும் குருவின் இந்த பெயர்ச்சி அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும், குறிப்பிட்ட சில ராசிக்காரர்களுக்கு மட்டும் மிகவும் சாதகமாகவும் சுப பலன்களையும் தர உள்ளது.
கடகம் (Gemini Zodiac Signs)
குரு இந்த நட்சட்த்திர பெயர்ச்சியால் கடக ராசியினருக்கு வாழ்க்கையில் பல நேர்மறை மாற்றங்கள் ஏற்பட உள்ளது. இந்த காலகட்ட்டத்தில் நிதி நிலைமை வலுவடையும். சமுதாயத்தில் மதிப்பும், மரியாதையும், அந்தஸ்தும் உயரும். தனிப்பட்ட வாழ்க்கையிலும் தொழில் வாழ்க்கையிலும் நல்ல வளர்ச்சி காணப்படும். அனைத்து துறைகளிலும் வெற்றி கிடைக்கும். போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுக்கு சாதகமான சூழல் நிலவும். ஆன்மீக நாட்டம் அதிகரித்து, ஆன்மீக தலங்களுக்கு சென்று வருவீர்கள். மேலும், திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி பெருகும்.
கன்னி (Virgo Zodiac Signs)
கன்னி ராசியினருக்கு குருவின் பெயர்ச்சி அளப்பரிய நன்மைகளை அள்ளித் தரும். இக்காலத்தில் எதிர்பாராத பணவரவு அல்லது திடீர் லாபம் கிடைக்க அதிக வாய்ப்புள்ளது. அலுவலகத்தில் உங்கள் பணிகளுக்கு பாராட்டுகளும் மரியாதையும் கிடைக்கும். மாணவர்களுக்கு இது மிகவும் பொன்னான காலமாகும். கணவன்-மனைவி இடையேயான மனக்கசப்புகள் நீங்கி, குடும்பத்தில் அமைதி நிலவும். கடன் சுமைகள் குறைய தொடங்கும். நீண்ட தூர பயணங்கள் நல்ல பலனை தரும். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும்.
விருச்சிகம் (Scorpio Zodiac Signs)
விருச்சிக ராசியினருக்கு குருவின் நகர்வு அதிர்ஷ்டத்தின் கதவுகளை திறக்கும். உத்தியோகத்தில் பதவி உயர்வு அல்லது சம்பள உயர்வுக்கான வாய்ப்புகள் தேடி வரும். தொழிலில் எதிர்பார்த்ததை விட கூடுதல் லாபம் கிடைக்கும். புதிய நிதி திட்டங்கள் நல்ல பலனை தரும். வீட்டில் சுப காரியங்கள் நடந்து, மகிழ்ச்சியும் அமைதியும் நிலவும். திருமண வாழ்க்கையில் பிணைப்பு அதிகரிக்கும். மாணவர்களுக்கும் போட்டி தேர்வு எழுதுபவர்களுக்கும் நல்ல வெற்றி கிடைக்கும். ஆரோக்கியம் மேம்படும்.
மகரம் (capricorn Zodiac Signs)
குருவின் இந்த பெயர்ச்சி மகர ராசிக்காரர்களின் தொழில் மற்றும் பொருளாதாரத்தில் சிறப்பான முன்னேற்றம் ஏற்படும். வேலையில் பதவி உயர்வு, புதிய பொறுப்புகள் அல்லது உயர் அதிகாரிகளின் பாராட்டு கிடைக்க வாய்ப்புள்ளது. வியாபாரம் செய்பவர்களுக்குப் புதிய வாய்ப்புகளும் நல்ல லாபமும் கிடைக்கும். சமுதாயத்தில் உங்கள் புகழும் கௌரவமும் அதிகரிக்கும். மேலும், வசதிகள் பெருகுவதுடன், வருமானத்திற்கான புதிய வழிகளும் பிறக்கும்.
மீனம் (Pisces Zodiac Signs)
குரு பகவானின் நட்சத்திர பெயர்ச்சி மீன ராசிக்காரர்களுக்கு அபிரிமிதமான நன்மைகளை தரும். புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் பாராட்டு கிடைக்கும். புதிய பொறுப்புகளும் தேடி வரும். வியாபாரிகளுக்கு பெரிய ஒப்பந்தங்கள் கை கூடும். முதலீடுகளிலிருந்து நல்ல லாபம் கிடைக்கும் அறிகுறிகள் உள்ளன. நீண்ட நாட்களாக தடைபட்டு வந்த வேலைகள் இந்த காலகட்டத்தில் முடியும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும்; வாழ்க்கை துணையின் பூரண ஒத்துழைப்பு கிடைக்கும். சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் உயரும். பண பலம் அதிகரிக்கும். இருப்பினும், எந்தவொரு பெரிய நிதி முடிவையும் எடுப்பதற்கு முன், உங்கள் சூழ்நிலையை நன்கு ஆராய்ந்து செயல்படுவது நல்லது.
(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)