SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

டிசம்பரில் குரு, சனி பெயர்ச்சி: இந்த 3 ராசிகளுக்கு பொன்னான காலம்.. தொட்டதெல்லாம் அதிர்ஷ்டம், வெற்றி

Guru Shani Peyarchi: டிசம்பர் மாதத்தில் குரு சனி பெயர்ச்சி நடக்கிறது. குரு பகவான் டிசம்பர் மாதத்தில் வக்ர நிலைக்கு திரும்புகிறார். அதே நேரத்தில் சனி பகவான் வக்ர நிலையில் இருந்து நேர் இயக்கத்திற்கு திரும்புகிறார். இதனால், ரிஷபம், துலாம், மீனம் ஆகிய ராசிகளுக்கு டிசம்பர் முதல் பொன்னான காலமாக இருக்கும்.

Written By Umabarkavi K
Published: Nov 28, 2026, 08:33 IST | Updated: Nov 28, 2026, 08:46 IST
Join

Guru Shani Peyarchi: ஜோதிடத்தில் குரு மற்றும் சனி பகவான் மிகவும் முக்கியமான கிரகமாக கருதப்படுகிறார். குரு பகவான் 12 மாதங்களுக்கு ஒருமுறை ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு பெயர்ச்சி அடைவார். அதே நேரத்தில் சனி பகவான் இரண்டரை ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு பெயர்ச்சி அடைவார். சனி பகவான் தற்போது மீன ராசியிலும், குரு பகவான் சிம்ம ராசியிலும் சஞ்சரித்து வருகின்றனர்.  

குரு சனியின் பெயர்ச்சி 12 ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும்.  இதற்கிடையில், 2026 டிசம்பர்  மாதம் சனி, குரு பெயர்ச்சி நடக்க உள்ளது.  டிசம்பர் 11ஆம் தேதி மீன ராசியில் சனி பகவான் வக்ர நிலையில் இருந்து நேர் இயக்கத்திற்கு திரும்புகிறார். பின்னர், டிசம்பர் 13ஆம் தேதி  குரு பகவான் சிம்ம ராசியில் வக்ர நிலைக்கு திரும்புகிறார். ஜோதிடத்தில் இரண்டு கிரகங்களின் இயக்கம் மாறுவது சில ராசிகளுக்கு நேர்மறையான ஆற்றலை கொடுக்கும். எனவே, அவை என்னென்ன ராசிகள் என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்ப்போம்.

ரிஷபம் (Taurus Zodiac Sign)

டிசம்பரில் நடக்கும் சனி குரு பெயர்ச்சியால் ரிஷப ராசிக்காரர்களுக்கு சுப பலன்கள் உண்டாகும். வேலைவாய்ப்பில்லாமல் இருப்பவர்கள் நல்ல செய்திகளை கேட்பீர்கள். உடன் பிறந்தவர்களின் ஆதரவு இருக்கும். புதிய வருமான வாய்ப்புகள் உருவாகும். தொழிலில் முன்னேற்றம் இருக்கும்.  வீடு, சொத்து, நகை வாங்கும் யோகம் கைகூடும். கடன் தொல்லையில் இருந்து விடுபடலாம். தந்தை வழியில் ஒத்துழைப்பு உண்டாகும். தர்ம காரியங்களில் ஈடுபாடு ஏற்படும். எதிர்பாராத சில பயணங்களால் புதிய அனுபவம் கிடைக்கும். மற்றவர்களுக்கு ஆலோசனைகளை கூறுவதில் கவனம் வேண்டும்.

மேலும் படிக்க: சூரியன் பெயர்ச்சி: டிசம்பர் முதல் 5 ராசிக்கு ராஜவாழ்க்கை.. டபுள் அதிர்ஷ்டம், டபுள் வெற்றி!

துலாம் (Libra Zodiac Sign)

குரு, சனி பெயர்ச்சியால் துலாம் ராசிக்காரர்களுக்கு செல்வம், அதிர்ஷ்டம் பெருகும். உங்களுக்கு இருந்து வந்த பிரச்னைகள் தீரும். குடும்பத்தில் சுப காரியங்கள் நடக்கும். கணவன்-மனைவியிடையே இருந்த வருத்தங்கள் நீங்கும். தன வரவுகள் தேவைக்கு கிடைக்கும். இழுபறியான சில வேலைகள் முடியும். எதிர்பார்த்த சில மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். உறவுகளின் வருகையால் சில மாற்றங்கள் ஏற்படும். உயர் அதிகாரிகள் ஒத்துழைப்பு அளிப்பார்கள். தர்ம காரியங்களில் ஈடுபாடு ஏற்படும். வியாபாரத்தில் இருந்த போட்டிகள் மறையும். தேடி வந்தவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். வியாபாரத்தில் இருந்த மந்தநிலை விலகும்.

மீனம் (Pisces Zodiac Sign)

குரு, சனி பெயர்ச்சியால் மீன ராசிக்காரர்கள் அதிர்ஷ்டம் உண்டாகும். நீண்ட காலமாக நிலுவையில் உள்ள பணிகளை முடிப்பீர்கள். உங்கள் வேலையில் புதிய பொறுப்புகள் கிடைக்கும். மூதாதையர் சொத்து மூலம் உங்களுக்கு நன்மைகள் கிடைக்கலாம். உறவினர்களின் ஆதரவுகள் கிடைக்கும். ஆரோக்கியம் சார்ந்த செயல்களில் கவனம் வேண்டும். வாகன பழுதுகளை சரி செய்வீர்கள். 

சிந்தனைகளில் சில குழப்பம் உண்டாகும். புதுவிதமான இடங்களுக்கு சென்று வருவீர்கள். கொடுக்கல் வாங்கலில் முன்னேற்றம் ஏற்படும். நெருக்கடியாக இருந்த சில பிரச்சனைகள் குறையும். சுபகாரியம் தொடர்பான எண்ணங்கள் ஈடேறும். பூர்வீக சொத்துக்கள் மூலம் லாபகரமான சூழ்நிலைகள் அமையும். உத்தியோகம் சார்ந்த பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். சேமிப்பை மேம்படுத்துவதற்கான வாய்ப்புகள் அமையும்.

(பொறுப்பு துறப்பு: இதில் இடம்பெற்றுள்ள தகவல்கள் பொதுவானவை ஆகும். பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், நம்பிக்கைகளின் அடிப்படையில் எழுதப்பட்டவை. இதற்கு ஜீ நியூஸ் (Zee Tamil News) பொறுப்பேற்காது)

மேலும் படிக்க: குரு வக்ர பெயர்ச்சி: 122 நாட்கள் 5 ராசிகளுக்கு ராஜவாழ்க்கை... அள்ளிக்கொடுப்பார் குரு

 

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

I am Uma Barkavi as a journalist with 5 years of experience across various media platforms, including TV and digital media. Since 2021, she has covered Tamil Nadu, lifestyle, national, political, and astrology news. She focuses on delivering engaging digital news content in a reader-friendly and informative format.
Read More

ZEENEWS TRENDING STORIES