SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

குரு உதயம்.. இந்த 6 ராசிக்காரர்கள் மட்டும் கவனமா இருக்கணும்!

குரு பகவான் இன்று கடக ராசியில் அஸ்தமன நிலையில் இருந்து விலகி அந்த ராயிலேயே உதயமாகிறார். இதன் காரணமாக 6 ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டி உள்ளது. அவர்கள் யார் யார்? அவர்களுக்கான எச்சரிக்கை என்ன என்பதை இங்கே விரிவாக பார்க்கலாம்.

Reported By R Balaji Written By R Balaji
Published: Aug 12, 2026, 12:53 PM IST | Updated: Aug 12, 2026, 12:58 PM IST
Join

ஜோதிடத்தில் சுப கிரகமாகவும், நவகிரகங்களின் தேவ குருவாகவும் விளங்கும் குரு பகவான், தற்போது தனது உச்ச வீடான கடக ராசியில் அஸ்தமன நிலையிலிருந்து விலகி இன்று (ஆகஸ்ட் 12) உதயமாகி உள்ளார். குருவின் இந்த நிலை பொதுவாக நன்மைகளை தந்தாலும், சில ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டிய சூழல் உருவாக்கியுள்ளது.

குரு உதயம் என்றால் என்ன?

ஒரு கிரகம் சூரியனுக்கு அருகில் வரும்போது தனது ஒளியை இழந்து 'அஸ்தமனம்' அடையும். அப்போது அதன் இயல்பான சுப பலன்கள் குறையும். மீண்டும் சூரியனை விட்டு குறிப்பிட்ட தூரம் விலகும்போது அந்த கிரகம் 'உதய நிலை' பெறும். குரு உதயமாகும்போது தனது முழு சக்தியையும் மீண்டும் பெறுகிறார். கடகம் குருவிற்கு 'உச்ச வீடு' என்பதால், இதன் தாக்கம் அனைத்து ராசிகளிலும் மிக வலுவாக இருக்கும்.

கவனமாக இருக்க வேண்டிய 6 ராசிகள்

மேஷம்

மேஷ ராசியின் 4ம் வீட்டில் குரு உதமாகிறார். இதன் காரணமாக மேஷ ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டும். குடும்பம் மற்றும் சொத்து சார்ந்த விவகாரங்களில் மன உளைச்சல் வரலாம். தாயாரின் உடல்நலத்தில் கவனம் தேவை. அவசரப்பட்டு நிலம், வீடு அல்லது வாகனம் வாங்கும் முடிவுகளை தள்ளிப்போடுங்கள்.

மிதுனம்

மிதுன ராசியின் 2ம் வீட்டில் குரு உதயமாகிறார். இதன் தாக்கம் மிதுன ராசியின் மீது வலுவாக இருக்கும். வரவு இருந்தாலும், அதற்கு ஈடான வீண் விரய செலவுகள் வரக்கூடும். பேச்சால் தேவையற்ற மனக்கசப்புகள் வரலாம். பெரிய முதலீடுகளை தவிர்க்கவும். பேசும்போது வார்த்தைகளில் கவனம் தேவை.

சிம்மம்

சிம்ம ராசியின் 12ம் வீட்டில் குரு உதயமாகும். இதனால், விரய ஸ்தானத்தில் குரு உதயமாகவதால் மருத்துவ செலவுகளும், தேவையற்ற பயணங்களும் அதிகரிக்கும். மேலும், புதிய கடன்கள் வாங்குவதையும், அபாயகரமான பணப் பரிவர்த்தனைகளையும் தவிர்க்கவும். நிதி ஒழுக்கம் மிக அவசியம்.

துலாம்

துலாம் ராசியின் 10ம் வீட்டில் குரு உதயமாகிறார். கர்ம ஸ்தானத்தில் குரு இருப்பதால் வேலைப்பளு மற்றும் மன அழுத்தம் அதிகரிக்கும். மேலதிகாரிகளுடன் கருத்து வேறுபாடு ஏற்பட வாய்ப்புள்ளது. வேலையை மாற்றும் முடிவை அவசரமாக எடுக்க வேண்டாம்; பொறுமையைக் கடைப்பிடிக்கவும்.

தனுசு

தனுசு ராசியின் 8ம் வீட்டில் குரு உதயமாகிறார். அஷ்டம ஸ்தானத்தில் குரு உதயமாகவதால் பரம்பரை சொத்து வழக்குகளில் பின்னடைவு அல்லது தடைகள் வரலாம். ஆரோக்கியத்தில் அலட்சியம் காட்டக் கூடாது; நிதி சார்ந்த விஷயங்களில் எச்சரிக்கை தேவை.

கும்பம் (6-ம் வீட்டில் குரு)

கும்ப ராசியின் 6ம் வீட்டில் குரு உதயமாகிறார். சத்ரு மற்றும் ரோக ஸ்தானத்தில் குரு உதயமாகவதால் மறைமுக எதிர்ப்புகளும், வேலை செய்யும் இடத்தில் போட்டியும் அதிகரிக்கும். சக ஊழியர்களுடன் வீண் விவாதங்களைத் தவிர்க்கவும்; சரியான உணவுப் பழக்கம் மூலம் ஆரோக்கியத்தைப் பராமரிக்கவும்.

பரிகாரங்கள்

வியாழக்கிழமைகளில் தட்சிணாமூர்த்திக்கு மஞ்சள் பூக்கள் சாற்றி, கொண்டைக்கடலை மாலை அணிவித்து வழிபடலாம்.

'ஓம் குருவே நமஹ' என்ற மந்திரத்தை தினமும் 108 முறை ஜபிப்பது நன்மையளிக்கும்.

முதியவர்கள் அல்லது ஆசிரியர்களுக்கு உங்களால் இயன்ற உதவிகளைச் செய்வது குருவின் கெடுபலன்களைக் குறைக்கும்.

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

நான் ஊடகத் துறையில் 5 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வருகிறேன். தற்போது ஜீ நியூஸ் தமிழில் Content Writer ஆக வேலை பார்க்கும் எனக்கு விளையாட்டு, அரசியல் மற்றும் க்ரைம் சார்ந்த செய்திகளை எழுதுவதில் அதிக ஆர்வம் உண்டு.

ZEENEWS TRENDING STORIES