SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

செவ்வாய் பெயர்ச்சி: இந்த 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் கதவை தட்டும்.. பணவரவு, புகழ்!

நவம்பர் 12ஆம் தேதி செவ்வாய் சிம்ம ராசிக்கு இடம்பெயர்வதால், கடகம், சிம்மம் மற்றும் விருச்சிக ராசிக்காரர்களுக்கு தொழில் வளர்ச்சி, பணவரவு மற்றும் புதிய வாய்ப்புகள் கிடைக்கக்கூடும்.

Written By R Balaji
Published: Oct 17, 2026, 04:07 PM IST | Updated: Oct 17, 2026, 04:10 PM IST
Join

ஜோதிடத்தின்படி, நவகிரகங்களில் செவ்வாய் தைரியம், வீரியம், ஆற்றல் மற்றும் விடாமுயற்சியை குறிக்கும் கிரகமாக கருதப்படுகிறார். பொதுவாக ஒரு ராசியில் சுமார் 45 நாட்கள் வரை சஞ்சரிக்கும் செவ்வாய், மேஷம் மற்றும் விருச்சிக ராசிகளின் அதிபதியாகவும் விளங்குகிறார். தற்போது கடக ராசியில் இருக்கும் செவ்வாய் நவம்பர் 12 ஆம் சிம்ம ராசிக்கு இடம்பெயர உள்ளார்.

சிம்ம ராசியின் அதிபதியான சூரியனும் செவ்வாயும் நட்பு கிரகங்களாக கருதப்படுவதால், இந்த பெயர்ச்சி ஜோதிட ரீதியாக முக்கியத்துவம் பெறுகிறது. இந்த கிரக மாற்றத்தால் 12 ராசிகளிலும் வெவ்வேறு விதமான தாக்கங்கள் ஏற்படலாம். குறிப்பாக சில ராசிக்காரர்களுக்கு தொழில் வளர்ச்சி, வருமான முன்னேற்றம் மற்றும் புதிய வாய்ப்புகள் கிடைக்கலாம். அந்த வகையில், செவ்வாய் பெயர்ச்சியால், சாதகமான பலன்களை பெறும் 3 ராசிகள் குறித்து பார்க்கலாம்.

கடகம்

கடக ராசிக்காரர்களுக்கு இந்த செவ்வாய் பெயர்ச்சி பணம் மற்றும் குடும்பம் சார்ந்த விஷயங்களில் முக்கிய மாற்றங்களை கொண்டுவரக்கூடும். வருமானத்தை அதிகரிப்பதற்கான புதிய வாய்ப்புகள் உருவாகலாம். வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு எதிர்பார்த்த லாபம் கிடைக்கவும், நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த பணம் கைக்கு வரவும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

வேலை தேடுபவர்களுக்கு நல்ல சம்பளத்துடன் கூடிய வேலை கிடைக்கலாம். ஏற்கனவே பணியில் இருப்பவர்களுக்கு கடின உழைப்புக்கான அங்கீகாரம் கிடைக்க வாய்ப்புள்ளது. குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு கிடைப்பதால், முக்கியமான முடிவுகளை தன்னம்பிக்கையுடன் எடுக்க முடியும்.

சிம்மம்

செவ்வாய் சிம்ம ராசிக்கு இடம்பெயர்வதால், இந்த ராசிக்காரர்களின் தன்னம்பிக்கையும் செயல்திறனும் அதிகரிக்கலாம். தொழில் மற்றும் வியாபாரத்தில் புதிய முயற்சிகளை மேற்கொள்ள விரும்புபவர்களுக்கு சாதகமான சூழல் அமையலாம். வணிகர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைப்பதுடன், தொழிலை விரிவுபடுத்துவதற்கான வாய்ப்புகளும் உருவாகலாம். பரம்பரை சொத்து தொடர்பான விஷயங்களில் எதிர்பார்த்த முன்னேற்றம் கிடைக்கலாம். பணியிடத்தில் பொறுப்புகள் அதிகரிப்பதுடன், உங்களுடைய திறமையை வெளிப்படுத்தும் சந்தர்ப்பங்களும் அமையக்கூடும். குடும்பத்தில் புதிய பொறுப்புகள் வந்தாலும், அவற்றை சிறப்பாக கையாளும் மன உறுதி கிடைக்கலாம். நிதி சார்ந்த முடிவுகளை எடுக்கும்போது திட்டமிட்டு செயல்படுவது பயனுள்ளதாக இருக்கும்.

விருச்சிகம்

விருச்சிக ராசியின் அதிபதியான செவ்வாய், இந்த பெயர்ச்சியின்போது தொழில் சார்ந்த முன்னேற்றத்திற்கு முக்கியத்துவம் அளிக்கலாம். பணியிடத்தில் உங்களுடைய செயல்பாடுகள் மேம்படுவதுடன், புதிய பொறுப்புகள் அல்லது வளர்ச்சிக்கான வாய்ப்புகள் கிடைக்கலாம். நிலம், வீடு மற்றும் சொத்து தொடர்பான முயற்சிகளில் சாதகமான முடிவுகள் கிடைக்கலாம். நீண்ட நாட்களாக திட்டமிட்டு வந்த சில செயல்களை முன்னெடுத்து செல்லும் சூழல் உருவாகலாம். தொழில் மற்றும் நிதி சார்ந்த முடிவுகளை எடுக்கும்போது தன்னம்பிக்கையுடன் செயல்படுவது உதவியாக இருக்கலாம். எதிர்கால வளர்ச்சிக்கு அடித்தளமிடும் வாய்ப்புகளையும் இந்த காலகட்டம் வழங்கலாம்.

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை)
 

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

நான் ஊடகத் துறையில் 5 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வருகிறேன். தற்போது ஜீ நியூஸ் தமிழில் Content Writer ஆக வேலை பார்க்கும் எனக்கு விளையாட்டு, அரசியல் மற்றும் க்ரைம் சார்ந்த செய்திகளை எழுதுவதில் அதிக ஆர்வம் உண்டு.

ZEENEWS TRENDING STORIES