SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

சிம்ம ராசிக்குள் நுழையும் புதன்.. நாளை முதல் கவனமாக இருக்க வேண்டிய 3 ராசிகள்!

Budhan Peyarchi: வரும் ஆகஸ்ட் 22 ஆம் தேதி சிம்ம ராசிக்குள் புதன் பெயர்ச்சி ஆவதால், 3 ராசிக்காரர்கள் பண விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டி உள்ளது. அவர்கள் யார் யார்? என்பதை இங்கு தெரிந்துக்கொள்வோம்.

Written By R Balaji
Published: Aug 21, 2026, 12:45 PM IST | Updated: Aug 21, 2026, 12:50 PM IST
Join

ஜோதிட சாஸ்திரத்தின் படி, ஒவ்வொரு கிரகங்களும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் தனது ராசி, நட்சத்திரத்தை மாற்றிக்கொள்ளும். இது மனிதர்களின் வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியதாக அமைகிறது. சில மாற்றங்கள் எதிர்வினை பலன்களையும் சில மாற்றங்கள் நேர்மறையான பலன்களை கொடுக்கும்.

அந்த வகையில், அறிவு, வியாபாரம், படிப்பு ஆகியவற்றின் காரணியாக திகழும் புதன், வரும் ஆகஸ்ட் 22 ஆம் தேதி கடக ராசியில் இருந்து சிம்ம ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். இந்த புதன் பெயர்ச்சியின் தாக்கம் மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளிலும் இருந்தாலும், குறிப்பிட்ட 3 ராசிகளின் மீது அதிக தாக்கத்தை ஏற்படுத்தும். ஆனால் அது நேர்மறையான  தாக்கமாக இல்லாமல் எதிர்மறையான விளைவுகளை தருகிறது. குறிப்பாக அவர்கள் பண விஷயத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டிய சூழல் உள்ளது. அவர்கள் யார் யார் என்பதை இங்கு பார்க்கலாம்.

மேஷம் (Aries Zodiac Signs)

புதன் பகவான் மேஷ ராசியின் 5ம் வீட்டில் சஞ்சரிப்பதால், இந்த காலகட்டத்தில் நீங்கள் பலவிதமான சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். திடீர் & வீண் செலவுகள் உங்கள் நிதிநிலையை பாதிக்கக்கூடும் என்பதால் பண விஷயத்தில் கூடுதல் கவனம் தேவை. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பாராத பணி மாற்றங்களும், கூடுதல் வேலைச்சுமையும் மன அழுத்தத்தை தரும். கணவன் - மனைவி இடையே தேவையற்ற வாக்குவாதங்கள் தோன்றி மறைய வாய்ப்புள்ளது; மேலும் வாழ்க்கைத்துணையின் உடல்நலனில் அக்கறை காட்டுவது அவசியம். தொழில் மற்றும் பணியிடத்தில் மறைமுக எதிர்ப்புகள் காணப்பட்டாலும், நிதானத்தையும் பொறுமையையும் கடைப்பிடிப்பது நல்லது.

ரிஷபம் (Taurus Zodiac Signs)

ரிஷப ராசியின் 4ம் வீட்டில் புதனின் சஞ்சாரம் நிகழ்வதால், நீங்கள் ஒவ்வொரு அடியையும் கவனமாக எடுத்து வைக்க வேண்டும். தொழில் மற்றும் வியாபாரம் செய்பவர்களுக்கு வர வேண்டிய லாபத்தில் தாமதம் ஏற்படலாம். சிலருக்கு பணப்புழக்கத்தில் சுணக்கம் காணப்படும். புதிய முதலீடுகள் அல்லது ஒப்பந்தங்களை தற்காலிகமாக தள்ளிப்போடுவது நிதி இழப்பைத் தவிர்க்க உதவும். எந்தவொரு முக்கிய முடிவையும் எடுப்பதற்கு முன் அனுபவசாலிகளின் ஆலோசனையை பெறுவது நல்லது. காதல் மற்றும் திருமண வாழ்க்கையில் கருத்து வேறுபாடுகள் ஏற்படக்கூடும் என்பதால், விட்டுக் கொடுத்து செல்வது மன அமைதியை தரும்.

விருச்சிகம் (Scorpio Zodiac Signs)

விருச்சிக ராசியின் 10ம் வீட்டில் புதன் செல்வதால் விருச்சிக ராசியினருக்கு இந்த மாற்றம் சாதக, பாதகங்கள் கலந்த ஒரு கலவையான பலனையே வழங்கும். குடும்பத்தில் மனக்கசப்புகளும், உறவினர்களிடையே கருத்து முரண்பாடுகளும் ஏற்பட வாய்ப்புள்ளது. பழைய பிரச்சினைகள் மீண்டும் எழுந்து மன நிம்மதியை சீர்குலைக்கக்கூடும் என்பதால், வார்த்தைகளில் மிகுந்த எச்சரிக்கை தேவை. திட்டமிட்ட காரியங்கள் தள்ளிப்போவதால் மன உளைச்சல் ஏற்படலாம். மருத்துவ செலவுகள் மற்றும் பிற சுப/அசுப செலவுகள் அதிகரிக்கக்கூடும் என்பதால், ஆரோக்கியத்திலும் வரவு-செலவிலும் முன்னெச்சரிக்கையுடன் இருப்பது நல்லது.

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
 

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

நான் ஊடகத் துறையில் 5 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வருகிறேன். தற்போது ஜீ நியூஸ் தமிழில் Content Writer ஆக வேலை பார்க்கும் எனக்கு விளையாட்டு, அரசியல் மற்றும் க்ரைம் சார்ந்த செய்திகளை எழுதுவதில் அதிக ஆர்வம் உண்டு.

ZEENEWS TRENDING STORIES