SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

ஆகஸ்ட் 22 முதல் புதாதித்ய ராஜயோகம்.. இந்த 5 ராசிகளுக்கு பணம், பதவி, அதிர்ஷ்டம் கொட்டும்!

வரும் ஆகஸ்ட் 22 ஆம் தேதி சூரியன் மற்றும் புதன் சிம்ம ராசியில் சேர்க்கையாகிறது. இந்த சேர்க்கையால் புதாதித்ய ராஜயோகத்தை உருவாக்குகிறது. இதனால் 5 ராசிக்காரர்கள் அதிர்ஷ்டம் பெறுகின்றனர்.

Reported By R Balaji Written By R Balaji
Published: Aug 10, 2026, 04:20 PM IST | Updated: Aug 10, 2026, 05:52 PM IST
Join

ஜோதிட சாஸ்திரத்தில் நவகிரகங்களின் அரசரான சூரியனும், புத்தி மற்றும் தொடர்பாடலுக்கு அதிபதியான புதனும் ஒரே ராசியில் சேருவது 'புதாதித்ய ராஜயோகம்' என்று அழைக்கப்படுகிறது. இந்த சேர்க்கையானது ஒருவரின் தலைமை பண்பு, முடிவெடுக்கும் திறன், தன்னம்பிக்கை மற்றும் பேச்சு திறனை பலமடங்கு அதிகரிக்கும் ஆற்றல் கொண்டது.

தற்போது கடக ராசியில் சஞ்சரித்து வரும் சூரிய பகவான், வரும் ஆகஸ்ட் 17 அன்று தனது சொந்த ராசியான சிம்மத்திற்கு செல்கிறார். அதைத் தொடர்ந்து ஆகஸ்ட் 22 ஆம் தேதி புதனும் சிம்ம ராசியில் நுழைகிறார். இதனால் சிம்ம ராசியில் உருவாகும் இந்த அபூர்வ புதாதித்ய ராஜயோகம், அனைத்து ராசிகளிலும் மாற்றத்தை ஏற்படுத்தினாலும், குறிப்பிட்ட 5 ராசியினருக்கு தொழில், வியாபாரம் மற்றும் நிதிநிலையில் அமோக வளர்ச்சியை தரவுள்ளது.

மேஷம் (Aries Zodiac Signs)

மேஷ ராசியின் 5 ஆம் வீட்டில் நிகழும் இந்த யோகத்தால் உங்களின் திறமைகளுக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கும். வேலை மாற்றத்திற்கு முயற்சிப்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகளும், தொழிலதிபர்களுக்கு புதிய வருமான வழிகளும் திறக்கும். மாணவர்களுக்குக் கல்வியிலும், குடும்பத்தில் சுமுகமான சூழலும் நிலவும். அவசரப்பட்டு முடிவுகள் எடுப்பதைத் தவிர்க்கவும்.

மிதுனம் (Gemini Zodiac SIgns)

3-ஆம் வீட்டில் உருவாகும் ராஜயோகத்தால் உங்கள் தகவல் தொடர்புத் திறன் கூடும். குறிப்பாக டிஜிட்டல் மீடியா, மார்க்கெட்டிங் மற்றும் வெளிநாட்டுத் தொடர்புடைய தொழில் செய்பவர்களுக்கு எதிர்பாராத வளர்ச்சி காத்திருக்கிறது. புதிய பொறுப்புகள் மூலம் வருமானம் அதிகரிக்கும். எனினும், தேவையில்லாத வாக்குறுதிகளை யாருக்கும் கொடுக்க வேண்டாம்.

சிம்மம் (Leo Zodiac Signs)

உங்கள் சொந்த ராசியிலேயே இந்த யோகம் அமைவதால் தன்னம்பிக்கை மிளிரும். அலுவலகத்தில் மேலதிகாரிகளின் பாராட்டு, பதவி உயர்வு மற்றும் புதிய பொறுப்புகள் தேடி வரும். தொழிலில் லாபகரமான ஒப்பந்தங்களும், முக்கிய புள்ளிகளின் தொடர்புகளும் கிடைக்கும். பொருளாதார நிலை திருப்திகரமாக இருந்தாலும், அதிகப்படியான தன்னம்பிக்கை ஆணவமாக மாறாமல் பார்த்துக்கொள்வது அவசியம்.

துலாம் (Leo Zodiac Signs)

லாப ஸ்தானமான 11-ஆம் வீட்டில் இந்த யோகம் அமைவதால் நீண்ட நாட்களாக வராமல் இருந்த நிலுவைத் தொகைகள் கைக்கு வந்து சேரும். வெளிநாடு தொடர்பிலான வேலைகளில் நல்ல பலன் கிடைக்கும். ஆராய்ச்சி மற்றும் படைப்புத் துறையினருக்கு இது பொற்காலம். தனிப்பட்ட ரகசியங்களை மற்றவர்களிடம் பகிர்வதைத் தவிர்க்கவும்.

தனுசு (Sagittarius Zodiac Signs)

பாக்கிய ஸ்தானத்தில் புதாதித்ய யோகம் அமைவதால் முழு அதிர்ஷ்ட ஆதரவு உங்களுக்கு உண்டு. நிலுவையில் இருந்த பணிகள் விரைந்து முடியும். தொழில் விரிவாக்கம், உத்தியோக உயர்வு மற்றும் ஆன்மீகப் பயணங்கள் சாத்தியமாகும். வெளிநாட்டு வேலை அல்லது உயர்கல்வி முயற்சிகள் கைகூடும். புதிய முதலீடுகளில் மட்டும் நிதானம் தேவை.

புதாதித்ய ராஜயோகத்தின் முக்கியத்துவமும் பரிகாரங்களும்

ஜோதிட சாஸ்திரத்தின்படி, சூரியன் ஆத்ம காரகனாகவும், புதன் அறிவின் காரணியாகவும் கருதப்படுகிறார்கள். இவர்கள் இருவரும் நண்பர்கள் என்பதால், சிம்ம ராசியில் இணையும் போது பெறப்படும் பலன்கள் இரட்டிப்பாகும்.

யாரெல்லாம் அதிக நன்மைகளை பெறுவார்கள்?

சிம்மம், மேஷம், மிதுனம், துலாம், தனுசு ஆகிய ராசிகளை கொண்டவர்களுக்கு இந்த யோகம் முழுமையாக வேலை செய்யும். தசாபுத்தி சாதகமாக இருக்கும் பட்சத்தில், இந்த 5 ராசியினருக்கு எதிர்பாராத நிதி நிலை உயர்வு, அரசாளும் தகுதி அல்லது அரசாங்க ரீதியிலான சலுகைகள் கிடைக்கும்.

யோகத்தின் பலனை அதிகரிக்க செய்ய எளிய பரிகாரங்கள்

சூரிய வழிபாடு: தினமும் காலையில் சூரிய நமஸ்காரம் செய்வதும், ஆதித்ய ஹ்ருதய ஸ்தோத்திரம் பாராயணம் செய்வதும் அரச யோக பலன்களை விரைவாகத் தரும்.

புதன் வழிபாடு: புதன்கிழமைகளில் பெருமாள் கோவில் தரிசனம் அல்லது விஷ்ணு சகஸ்ரநாமம் கேட்பது புதனின் அருள் பெற்று புத்தி கூர்மையை அதிகரிக்கும்.

மேலும், ஏழை மாணவர்களின் கல்வி செலவுக்கு உதவுவது மற்றும் பறவைகளுக்கு தண்ணீரும் தானியமும் வைப்பது சுப பலன்களை பெருக்கும்.
 

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

நான் ஊடகத் துறையில் 5 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வருகிறேன். தற்போது ஜீ நியூஸ் தமிழில் Content Writer ஆக வேலை பார்க்கும் எனக்கு விளையாட்டு, அரசியல் மற்றும் க்ரைம் சார்ந்த செய்திகளை எழுதுவதில் அதிக ஆர்வம் உண்டு.

ZEENEWS TRENDING STORIES