SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

23 ஆகஸ்ட் 2026 ராசிபலன் : மேஷம் to மீனம்.. யோகம் அடிக்கப்போகும் நாள்..யாருக்கு தெரியுமா?

ஆகஸ்ட் 23ஆம் தேதியான இன்று, எந்தெந்த ராசிகளுக்கு என்னென்ன பலன்கள் இருக்கின்றன என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்வோம்.

Written By Yuvashree M
Published: Aug 23, 2026, 05:48 AM IST | Updated: Aug 23, 2026, 06:06 AM IST
Join

ஜோதிட சாஸ்திரங்களின் படி, ஒருவருடைய ராசியை வைத்தே அவரது நாள் எப்படி செல்லும் என்பதை கணிக்க இயலும். அந்த வகையில், மேஷம் முதல் மீனம் வரை இருக்கும் 12 ராசிகளில், எந்த ராசிக்கு இன்று எந்த பலன் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்வோம். 

மேஷம்

குடும்பத் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். மறதி பிரச்சனைகள் குறையும். வதந்திகளை பொருட்படுத்தாமல் செயல்படவும். முக்கிய முடிவுகளில் பொறுமை வேண்டும்.  உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். பணி சார்ந்து சில பயணம் உண்டாகும். வியாபாரத்தை விரிவு செய்யவதில் ஆலோசனை வேண்டும்.

ரிஷபம்

உழைப்பிற்கான பலன் கிடைப்பதில் காலதாமதமாகும். உணவு விஷயத்தில் கட்டுபாடு வேண்டும். உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் ஏற்படும். உத்தியோக பணிகளில் சாதகமற்ற சூழல் அமையும். வாகன பயணத்தில் கவனம் வேண்டும். சஞ்சலமான சிந்தனைகளால் குழப்பம் ஏற்படும். எதிர்பார்த்த முடிவுகளில் சில மாற்றம் உண்டாகும்.

மிதுனம்

வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும். எதிர்பார்த்த சில பணிகள் தாமதமின்றி நடக்கும். எதிர்பார்ப்புகள் சில நிறைவேறும். தான தர்மங்களில் மனம் ஈடுபடும். பிரமுகர்களின் சந்திப்புகளால் ஆதாயம் கிடைக்கும். உத்தியோகத்தில் சாதகமான சூழல் அமையும். கூட்டுத் தொழிலில் இருந்த நெருக்கடி நீங்கும்.

கடகம்

மாமன் வழியில் ஆதரவுகள் கிடைக்கும். பிடித்தமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உடன் நலனில் கவனம் வேண்டும். உத்யோகத்தில் பாராட்டு கிடைக்கும். அக்கம்பக்கத்தில் இருப்பவர்கள் ஒத்துழைப்பாக இருப்பார்கள். குடும்பத்தினரின் குணமறிந்து செயல்படவும். பிடிவாதப் போக்கை குறைத்து கொள்ளவும். பொது காரியங்களில் ஈடுபாடுகள் உண்டாகும்.

சிம்மம்

குடும்ப வருமானத்தை மேம்படுத்துவீர்கள். அக்கம் பக்கம் இருப்பவர்களுடன் அனுகூலம் உண்டாகும். நீண்ட நாள் பிரார்த்தனைகள் நிறைவேறும். புது விதமான எண்ணங்கள் பிறக்கும். சக ஊழியர்கள் இடத்தில் நிதானம் வேண்டும். இலக்கியப் பணிகளில் ஈடுபாடு ஏற்படும். பூர்வீக சொத்துக்களால் ஆதாயம் அடைவீர்கள்.

கன்னி

நினைத்த காரியத்தை செய்து முடிப்பீர்கள். பூமி விற்பனையால் லாபம் கிடைக்கும். குழந்தைகளின் நலனில் அக்கறை வேண்டும். சேமிப்பை மேம்படுத்தும் எண்ணம் அதிகரிக்கும். சுப காரிய முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். புதிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உத்தியோக ரீதியான பயணங்களில் புதிய அனுபவம் ஏற்படும்.

துலாம்

இணையம் சார்ந்த துறைகளில் திறமைகள் வெளிப்படும். முயற்சிக்கு உண்டான பலன்கள் கிடைக்கும். எண்ணிய சில பணிகள் நிறைவேறும். நண்பர்கள் வழியில் ஒத்துழைப்புகள் மேம்படும். தன்னம்பிக்கையுடன் புதிய முடிவுகளை எடுப்பீர்கள். உங்கள் மீதான விமர்சனங்கள் நீங்கி நம்பிக்கை அதிகரிக்கும். சகோதரர்கள் வழியில் ஆதாயம் கிடைக்கும்.

விருச்சிகம்

உங்கள் பேச்சுக்கு மதிப்புகள் அதிகரிக்கும். சொத்து விற்பனை மற்றும் வாங்குவதில் லாபம் உண்டாகும். முகத்தில் தெளிவும் இளமையும் அதிகரிக்கும். எதிர்பார்த்த சில உதவிகள் சாதகமாகும். வேலையாட்களை தட்டிக் கொடுத்து செயல்படுவது நல்லது. பணி நிமித்தமான சில முடிவுகளை எடுப்பீர்கள். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும்.

தனுசு

புதிய முயற்சிகளில் சிந்தித்து செயல்படவும். தாய்மாமன் வழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். பிள்ளைகளின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். உத்தியோகத்தில் பொறுப்பறிந்து செயல்படவும். தொழில் நிமித்தமான புதிய சிந்தனைகள் உண்டாகும். பொன் பொருள்களை கையாளுவதில் கவனம் வேண்டும்.

மகரம்

செயல்பாடுகளில் சுதந்திர தன்மை வெளிப்படும். தேவையில்லாமல் மற்றவர்களின் விஷயத்தில் தலையிட வேண்டாம். உபரி வருமானம் மேம்படும். எதிர்பாராத பயணம் மூலம் புதிய அனுபவம் உண்டாகும். மற்றவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். ஆரோக்கியத்தில் ஏற்ற இறக்கமான சூழ்நிலை அமையும். மனதளவில் புதுவிதமான சிந்தனைகள் பிறக்கும்.

கும்பம்

மறைமுக எதிர்ப்புகளை வெற்றி கொள்வீர்கள். வியாபாரம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். பலம் மற்றும் பலவீனங்கள் பற்றி புரிந்து கொள்வதற்கான சூழ்நிலைகள் உண்டாகும். உத்தியோகம் சார்ந்த பணிகளில் சாதகமான சூழ்நிலைகள் உண்டாகும். எண்ணிய சில பணிகள் திட்டமிட்ட விதத்தில் நிறைவுபெறும்.

மீனம்

வியாபார ரீதியாக இருந்து வந்த தடைகள் விலகும். உடன் பிறந்தவர்களால் அலைச்சல் ஏற்படும். பாக பிரிவினைகளில் பொறுமையுடன் செயல்படவும். மனை சார்ந்த செயல்களால் ஆதாயம் உண்டாகும். எதிலும் சகிப்பு தன்மையுடன் செயல்படவும். புதிய முயற்சிகளில் எண்ணிய முடிவுகளில் தாமதம் உண்டாகும்.

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

யுவஸ்ரீ, 3 ஆண்டுகளுக்கும் மேல் டிஜிட்டல் மீடியாவில் பணியாற்றி வருகிறேன். சினிமா, வைரல், குற்றம் மற்றும் உள்ளூர் சம்பந்தப்பட்ட செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உள்ளது. கதை மற்றும் கவிதைகளை எழுதுவதும், அவற்றை சில மேடைகளில் பகிர்வதும் எனக்கு பிடித்த விஷயங்கள்.

ZEENEWS TRENDING STORIES