SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

இரவு முழுவதும் தூங்கவே முடியவில்லையா...? இந்த 3 காரணங்கள் இருக்கலாம்

Vidura Neeti : இரவு முழுவதும் தூங்க முடியாமல் ஒருவர் அவதிப்பட்டு வருவது ஏன் என மன்னர் திருதராஷ்டிரர் எழுப்பிய கேள்விக்கு, மகாத்மா விதுரர் அளித்த பதில் காலம் கடந்தும், இன்றளவும் உண்மையாக இருக்கிறது.

Written By Sudharsan G
Published: Aug 09, 2026, 11:46 PM IST | Updated: Aug 10, 2026, 05:51 PM IST
Join

Vidura Neeti In Mahabharatam : தூக்கமின்மை என்பது இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய பிரச்னையாக இளைய தலைமுறையின் முன்னர் இருக்கிறது. ஆனால், தூக்கமின்மை என்பது பல நூற்றாண்டுகளாகவே மனித இனத்தை துரத்தி வருகிறது.

அந்த வகையில் பல நூற்றாண்டுகளுக்கு முன், அதாவது மகாபாரத காலத்தில் விதுரர் தூக்கமின்மை குறித்து தனது ஞானத்தை அப்போதே பகிர்ந்துகொண்டுள்ளார். அவரது வார்த்தை இன்றும் உண்மையாகவே உள்ளன.

விதுரர் சொன்ன காரணங்கள்

மகாபாரத காலத்தில், மன்னர் திருதராஷ்டிரர் மன அமைதியின்மையால் அவதிப்பட்டபோது, ஒருவருக்கு இரவில் தூக்கம் வராமல் இருப்பதற்கு காரணம் என்ன விதுரரிடம் கேட்டார். அதற்கு விதுரர் சொன்ன கருத்துதான் இன்றும் முக்கியமானதாக இருக்கிறது. விதுரர் சொன்ன காரணங்களை இங்கு காணலாம்.

கட்டுப்பாடற்ற காமமும்...

மகாத்மா விதுரரின் கூற்றுப்படி, ஒருவரின் மனம் பாலுணர்வு அல்லது காமத்தால் ஆட்கொள்ளப்பட்டால், அவர்கள் இரவில் தூக்கத்தை இழப்பார்கள்.

அத்தகைய நபர் எப்போதும் பாலுறவு சார்ந்த எண்ணங்களில் மூழ்கியிருக்கிறார். காமத்தால் ஆட்கொள்ளப்பட்ட ஒருவரின் மனம் ஒருபோதும் அமைதியடையவில்லை.

இதனால் சிந்திக்கும் திறன், சூழலை புரிந்துகொள்ளும் திறன் குறைய தொடங்குகிறது. மனதின் இந்த அமைதியின்மையும், தவிப்பும் இரவு முழுவதும் தூங்கவிடாமல் தடுக்கிறது. ஆசைகளை துரத்தியே தூக்கத்தை தொலைக்கிறார்கள்.

சக்திவாய்ந்த நபர்கள் உடனான பகைமை

ஒரு பலவீனமான நபர் தன்னைவிட மிகவும் சக்திவாய்ந்த ஒருவருடன் பகைமை கொண்டால், அவர்கள் தூக்கத்தை இழக்கிறார்கள் என விதுரர் விளக்கினார்.

ஒரு அலுவலகத்தில் மேலதிகாரியுடன் மோதினால், அந்த ஊழியருக்கு இரவு முழுவதும் தூக்கம் வராதது அல்லவா... அதேபோன்றுதான்...

எதிர்பாராத நிகழ்வுகள் குறித்த பயம்

திருட்டு பயம் மற்றும் எதிர்பாராத நிகழ்வுகள் குறித்த பயம் ஒருவரை தொடர்ந்து வாட்டும். இதனால், பயமும் பாதுகாப்பின்மையும் அவரை இரவு முழுவதும் புரண்டு படுக்க வைக்கிறது. பயம் நிறைந்த மனம் ஒருவரை நிம்மதியாக தூங்க ஒருபோதும் அனுமதிப்பதில்லை.

எந்த சத்தம் கேட்டாலும், அது அவர்களின் செல்வத்தை திருடிச் செல்கிறார்களோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. பெரும் செல்வத்தின் மீதான ஆசையும், அதை இழந்துவிடுவோமோ என்ற பயமும் ஒருவரின் அமைதியையும் மகிழ்ச்சியையும் முற்றிலுமாகச் சிதைத்துவிடுகின்றன என விதுரர் கூறுகிறார்.

அதேபோல், தீய நோக்கம், நோய் மற்றும் உடல் வலி ஆகியவையும் ஒருவருக்கு தூக்கமின்மை தருகிறது என விதுரர் கூறுகிறார். எனவே இதுபோன்ற தடைகளை கடந்தால் தூக்கமின்மையை ஒருவர் தடுக்கலாம்.

பொறுப்பு துறப்பு: இது மகாபாரதத்தில் உள்ள விதுர நீதி மற்றும் மத புராண நம்பிக்கைகளை அடிப்படையாக கொண்டது. இது வாழ்க்கை மேலாண்மை மற்றும் வாழ்க்கை முறை சார்ந்த கருத்துகளை வாசகர்கள் தெரிந்துகொள்வதற்கு மட்டுமே எழுதப்பட்டுள்ளது.

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

I’m Sudharsan G, Sub Editor at Zee Tamil News, with over five years of experience in Tamil content writing. I cover Tamil Nadu, national, and international news, along with sports stories that connect with readers. A follower of cricket, cinema, and politics, I bring depth and perspective to every piece. I also have on-screen camera experience, which helps me present news stories in a more engaging and impactful way. Outside work, I enjoy modern Tamil literature and discovering new voices in contemporary writing.

ZEENEWS TRENDING STORIES