SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

2027 சனி பெயர்ச்சி: இந்த 4 ராசிக்காரர்களுக்கு ராஜயோகம்.. பணவரவு, தொழில் வளர்ச்சி அமோகம்!

2027 சனி பெயர்ச்சியால் ரிஷபம், கடகம் உள்ளிட்ட 4 ராசிகளுக்கு பணவரவு, தொழில் வளர்ச்சி மற்றும் அதிர்ஷ்டம் அதிகரிக்கும் என நம்பப்படுகிறது.

Reported By R Balaji Written By R Balaji
Published: Aug 11, 2026, 04:51 PM IST | Updated: Aug 11, 2026, 04:59 PM IST
Join

நவக்கிரகங்களில் மிகவும் மெதுவாக நகரும் கிரகமான சனி பகவான், ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு நகர சுமார் இரண்டரை ஆண்டுகள் எடுத்து கொள்கிறார். இதனால், ஜோதிட ரீதியாக சனியின் பெயர்ச்சி மற்றும் வக்ர இயக்கம் மிகப்பெரிய மாற்றங்களை ஏற்படுத்தும் நிகழ்வாக பார்க்கப்படுகிறது.

தற்போது மீன ராசியில் சஞ்சரிக்கும் சனி பகவான், 2027 ஆம் ஆண்டு ஜூன் 3 அன்று மேஷ ராசிக்கு நுழைகிறார். பின்னர் வக்ர கதியின் காரணமாக, 2027 அக்டோபர் 20 அன்று மீண்டும் மீன ராசிக்கு திரும்புகிறார். இந்த முக்கிய கிரக நகர்வினால் அளப்பரிய நன்மைகளையும், அதிர்ஷ்டத்தையும் பெறப்போகும் 4 ராசிகளை பற்றி இங்கு பார்ப்போம்.

ரிஷபம் (Taurus Zodiac Signs)

ரிஷப ராசியின் அதிபதியான சுக்கிரனும், சனி பகவானும் நட்பு கிரகங்கள் என்பதால், இந்த பெயர்ச்சி ரிஷப ராசியினருக்கு பல சாதகமான சூழ்நிலைகளை உருவாக்கும். புதிய வருமான வழிகள் திறக்கும். பூர்வீக சொத்துக்கள் கைக்கு வந்து சேரும் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. சிந்தனை திறனும் முடிவெடுக்கும் ஆற்றலும் கூடும். வேலையில் கூடுதல் பொறுப்புகள் கிடைத்தாலும், அதை திறம்பட செய்து முடித்து உயர் அதிகாரிகளின் பாராட்டை பெறுவீர்கள். நீண்ட நாட்களாக முடங்கிக் கிடந்த சிக்கல்களுக்கு தீர்வு கிடைக்கும்.

கடகம் (Cancer Zodiac Signs)

கடக ராசியினருக்கு இந்த சனி பெயர்ச்சி காலம் நிதி நிலைமையை உயர்த்தும் பொற்காலமாக அமையப் போகிறது. தொழிலில் புதிய வணிக கூட்டணிகள் அமையும். நீங்கள் செய்யும் முதலீடுகள் இரட்டிப்பு லாபத்தை தரும். சமூகப் பணிகளில் ஆர்வம் அதிகரிக்கும். இதனால் உங்களின் நற்பெயரும் மரியாதையும் உயரும். புதிய வாகனம் அல்லது வீடு வாங்கும் யோகம் உண்டாகும். உழைப்புக்கேற்ற பலன் கிடைத்து, மன அமைதியும் ஆரோக்கியமும் சீராக இருக்கும்.

துலாம் (Libra Zodiac Signs)

சனி பகவான் உச்சம் பெறும் ராசியான துலாத்திற்கு, இக்காலகட்டம் மிகுந்த நன்மைகளை அள்ளித் தரும். கடந்த கால நிதி இழப்புகள் ஈடுகட்டப்படும். நீண்ட நாளாக ஆட்டிப்படைத்த கடன் பிரச்சனைகள் முற்றிலும் முடிவுக்கு வரும். குடும்பத்தில் சுபகாரியங்கள் கைகூடும். பணியிடத்தில் சக ஊழியர்கள் மற்றும் மேலதிகாரிகளின் முழு ஒத்துழைப்புடன் புதிய பொறுப்புகளை துல்லியமாக செய்து முடிப்பீர்கள். வர்த்தகம் மற்றும் தொழில் செய்பவர்களுக்கு எதிர்பாராத நல்ல லாபம் கிடைக்கும்.

விருச்சிகம் (Scorpio Zodiac Signs)

சனியின் நேரடி பார்வையால் விருச்சிக ராசியினருக்கு தடைபட்ட காரியங்கள் அனைத்தும் தடாலடியாக நடக்கும். நீண்டகாலமாக உங்களை அலைக்கழித்த நோய் நொடிகள் தீர்ந்து, உடல் ஆரோக்கியம் மேம்படும். பிரிந்திருந்த பழைய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மீண்டும் ஒன்று சேர்வார்கள். இது உங்களின் மன அழுத்தத்தை குறைத்து மகிழ்ச்சியை தரும். புதிய தொழில் தொடங்கும் முயற்சி வெற்றி பெறும். வர்த்தகத்தில் சிறப்பான வளர்ச்சி கண்டு பொற்காலத்தை காண்பீர்கள்.

சனியின் அருளைப் பெற எளிய பரிகாரங்கள்

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
 

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

நான் ஊடகத் துறையில் 5 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வருகிறேன். தற்போது ஜீ நியூஸ் தமிழில் Content Writer ஆக வேலை பார்க்கும் எனக்கு விளையாட்டு, அரசியல் மற்றும் க்ரைம் சார்ந்த செய்திகளை எழுதுவதில் அதிக ஆர்வம் உண்டு.

ZEENEWS TRENDING STORIES