SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

சனி - குருவால் உருவாகும் நவபஞ்சம ராஜயோகம்.. 3 ராசிகளுக்கு ஜாக்பாட்! தொழிலில் அதிர்ஷ்டம்

Shani - Guru Serkai Palangal: சனி மற்றும் குருவின் சேர்க்கையால் நவபஞ்சம ராஜயோகம் உருவாகிறது. இந்த யோகம் மூன்று ராசிகளுக்கு அதிர்ஷ்டம், தொழில் வளர்ச்சி, நிதி ஆதாயம் உள்ளிட்ட பலன்களை நற்பலன்களை கொடுக்க இருக்கிறது.

Reported By R Balaji Written By R Balaji
Published: Aug 15, 2026, 04:08 PM IST | Updated: Aug 15, 2026, 04:13 PM IST
Join

Navpanchama Rajyoga: ஜோதிட சாஸ்திரத்தில், சனி மற்றும் குரு பகவான் மிகவும் முக்கியமானவர்கள். இந்த இருவர்களின் ஒவ்வொரு அசைவும் மனிதர்களின் வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியது. குறிப்பாக கர்மா மற்றும் நீதியின் அரசராக கருதப்படும் சனி பகவான் மிகவும் மொதுவாக நகரக்கூடியவர். இவர் ஒரு ராசியில் பெயர்ச்சியானால், கிட்டத்தட்ட இரண்டரை ஆண்டுகள் இருப்பார்.

சனி பகவான் தற்போது மீன ராசியில் வக்ர கதியில் இருக்கிறார். வரும் டிசம்பர் மாதம் 11 ஆம் தேதி நேரடி இயக்கத்திற்கு திரும்புகிறார். இந்த இடைப்பட்ட காலத்தில் சனி பகவான் பல முக்கிய கிரக சேர்க்கைகளை உருவாக்குவார். அந்த வகையில், செப்டம்பர் மாதத்தில் சனி மற்றும் குரு பகவான் இணைந்து நவபஞ்சம யோகத்தை உருவாக்குகின்றனர். இந்த சக்தி வாய்ந்த யோகத்தால் குறிப்பிட்ட சில ராசிக்காரர்கள் தொழில், நிதி ரீதியான முன்னேற்றங்களை பெற இருக்கின்றனர். அவர்கள் யார் யார்? எந்த மாதிரியான பலன்களை பெறுகின்றனர் என்பதை இங்கே பார்க்கலாம்.

கடகம் (Cancer Zodiac Signs)

கடக ராசிக்காரர்கள் நவபஞ்சம ராஜயோகத்தால், தொழில் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையில் அபிரிமிதமான முன்னேற்றங்களை அடைய இருக்கின்றனர். இதுவரை தடைப்பட்டிருந்த காரியங்கள் நிறைவேறும். நிதி ரீதியான முன்னேற்றம் இருக்கும். தொழில் செய்து வருபவர்கள் அதனை விரிவுபடுத்த முடியும். வேலை இடத்தில் கடின உழைப்பு தகுந்த மரியாதையும் அங்கீகாரமும் கிடைக்கும். நீதிமன்ற வழக்குகள் இருந்தால், அது வெற்றிகரமாக முடிவடையும். மேலும், புதிதாக தொழில் தொடங்க நினைப்பவர்கள் இந்த காலகட்டத்தில் முதலீடு செய்யலாம்.

துலாம் (Libra Zodiac Signs)

சனி மற்றும் குரு பகவானால் உருவாகும் நவபஞ்சம யோகத்தால், துலாம் ராசிக்காரர்களின் குடும்ப வாழ்க்கையில் சாதகமான தாக்கம் ஏற்படும். அதேசமயம் தொழில், நிதி நிலை ஆகியவற்றில் முன்னேற்றம் இருக்கும். இந்த காலகட்டத்தில் வேலை இடத்தில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். தொழிலில் போட்டிகள் குறையும். பழைய முதலீடுகள் லாபம் தரும். ஆரோக்கியத்தை பொறுத்தவரையில் சிறப்பாக இருக்கும். வேலை தொடர்பாக வெளி மாநிலம் அல்லது வெளிநாட்டிற்கு பயணம் செய்யும் வாய்ப்பு உள்ளது. மேலும், குடும்பத்தின் ஆதரவின் மூலம் தொழில் மற்றும் நிதி நிலைமையில் பெரிய அளவில் முன்னேற்றம் ஏற்படும்.

மீனம் (Pisces Zodiac Signs)

மீன ராசிக்காரர்களுக்கு சனி மற்றும் குருவின் சேர்க்கை நற்பலன்களை தர உள்ளது. லக்னத்தில் சனியும் நிலையும் மீன ராசியின் 5ம் வீட்டில் குருவின் அமைப்பும் உயர்கல்வி, தொழில், நிதி ஆகியவற்றில் சாதகமான பலனகளை கொடுக்க உள்ளது. இந்த காலகட்டத்தில் தொட்டதெல்லாம் வெற்றியடையும். திருமணம் ஆகாதவர்களுக்கு நல்ல வரன் அமையும். பயணங்கள் வாழ்க்கையில் முன்னேறுவதற்கான நற்பலன்களை தரும். மேலும், ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

நவபஞ்சம யோகம் என்றால் என்ன?

இரண்டு சுப கிரகங்கள் ஒன்றுக்கொன்று 5 மற்றும் 9 ஆகிய திரிகோண ஸ்தானங்களில் அமையும் போது, இந்த 'நவபஞ்சம யோகம்' உருவாகிறது. குரு மற்றும் சனியின் பார்வை மற்றும் சேர்க்கை தர்ம-கர்மாதிபதி யோகத்திற்கு இணையான அதிர்ஷ்டத்தையும், நிலையான வெற்றியையும் தரும் அமைப்பாக கருதப்படுகிறது.

வழிபாடு & பரிகாரங்கள்

சனிக்கிழமைகளில் சனி பகவானுக்கு எள் தீபம் ஏற்றி வழிபடலாம். அதேபோல், ஆதரவற்றவர்களுக்கு அன்னதானம் செய்யலாம். இதன் மூலம் சனியின் வக்ர தோஷத்தை குறைக்க முடியும்.

வியாழக்கிழமைகளில் தட்சிணாமூர்த்திக்கு மஞ்சள் நிற மலர்கள் சாற்றி வழிபடுவதன் மூலம் குருவின் சுப பலன்களை அதிகரிக்க செய்யலாம்.

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
 

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

நான் ஊடகத் துறையில் 5 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வருகிறேன். தற்போது ஜீ நியூஸ் தமிழில் Content Writer ஆக வேலை பார்க்கும் எனக்கு விளையாட்டு, அரசியல் மற்றும் க்ரைம் சார்ந்த செய்திகளை எழுதுவதில் அதிக ஆர்வம் உண்டு.

ZEENEWS TRENDING STORIES