Shani Nakshatra Peyarchi: ஜோதிடத்தில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த கிரகமாக சனி பகவான் அறியப்படுகிறார். நீதியின் கடவுளாகவும் சனி பகவான் கருதப்படுகிறார். சனி பகவானின் நிலை 12 ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. சனி பகவான் இரண்டரை ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார். இதற்கிடையில், நட்சத்திர பெயர்ச்சியும் சனி பகவான் அடைகிறார். தற்போது சனி பகவான் மீன ராசியில் இருக்கிறார். இதற்கிடையில், இன்று சனி நட்சத்திர பெயர்ச்சி நடந்துள்ளது. சனி பகவான் உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பெயர்ச்சி அடைகிறார். உத்திரட்டாதி நட்சத்திரத்தில் சனி பகவான் 107 நாட்களுக்கு நிலைத்திருப்பார். சனியின் நட்சத்திர பெயர்ச்சியால் இந்த 4 ராசிகளுக்கு செல்வம், அதிர்ஷ்டம் பெருகும். எனவே, அவை என்னென்ன ராசிகள் என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்ப்போம்.
சனியின் நட்சத்திர பெயர்ச்சியால் மிதுன ராசிக்காரர்களுக்கு செல்வம், அதிர்ஷ்டம் பெருகும். உங்களுக்கு இருந்து வந்த சிறுசிறு பிரச்னைகள் தீரும். உடன் பிறந்தவர்களின் ஆதரவு இருக்கும். உங்கள் நிதிநிலைமை மேம்படும். நீங்கள் எதிர்பாராத சில பணிகளால் உங்களுக்கு நன்மைகள் உண்டாகும். நினைத்த காரியங்கள் நிறைவேறும். எதிர்மறையான ஆற்றல் வருவது குறையக்கூடும். உங்களுக்கு இருந்து வந்த பிரச்னைகள் தீரும். கடன் தொல்லைகள் தீரும். உடன் பிறந்தவர்களின் மூலம் நல்ல செய்திகள கேட்பீர்கள்.
நகை, வாகனம், வீடு வாங்கும் யோகம் உங்களுக்கு இருக்கும். தந்தை வழியில் ஒத்துழைப்பு ஏற்படும். திருப்பணிகளில் ஆர்வம் ஏற்படும். புதிய நபர்களால் சில மாற்றங்கள் உண்டாகும். கணவன் மனைவி இடையே அனுசரித்து செல்லவும். சமூகப் பணிகளில் இருப்பவர்களுக்கு மதிப்புகள் அதிகரிக்கும். மனதை உறுத்திய கவலைகள் குறையும். வியாபாரத்தில் புதிய வாய்ப்புகள் ஏற்படும்.
சனி நட்சத்திர பெயர்ச்சியால் துலாம் ராசிக்காரர்களுக்கு அடுத்த 107 நாட்கள் மங்களகரமானதாக இருக்கும். புதிய வாகனம் வாங்குவது தொடர்பான எண்ணம் கைகூடும். மாணவர்களுக்கு நினைவாற்றல் மேம்படும். உறவினர்கள் வழியில் ஒத்துழைப்பான சூழல் உண்டாகும். நீர்நிலை தொடர்பான பணிகளில் சற்று கவனம் வேண்டும். அதிரடியான செயல்கள் மூலம் போட்டிகளை சமாளிப்பீர்கள்.
புதிய உணவுகளில் கவனம் வேண்டும். விவசாய பொருட்கள் மூலம் ஆதாயம் உண்டாகும். எதிலும் பதற்றம் இன்றி செயல்படவும். குடும்பத்தில் சிறு சிறு விவாதங்கள் தோன்றி மறையும். நண்பர்களைப் பற்றிய புரிதல்கள் அதிகரிக்கும். திடீர் பயணங்களால் மாற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். பிடித்த உணவுகளை உண்டு மகிழ்வீர்கள். புதிய பணி நிமித்தமான சிந்தனைகள் மேம்படும். வியாபாரத்தில் அனுசரித்து நடந்து கொள்ளவும்.
சனியின் நட்சத்திர பெயர்ச்சியால் கன்னி ராசிக்காரர்களுக்கு செல்வம், அதிர்ஷ்டம் உண்டாகும். உறவுகள் வழியில் ஒத்துழைப்புகள் கிடைக்கும். செய்யும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். நெருக்கமானவர்கள் மூலம் புதுவிதவிதமான அனுபவங்கள் ஏற்படும். இழுபறியில் இருந்த காரியங்கள் முடிவுக்கு வரும். மறைமுக எதிர்ப்புகள் நீங்கும். குடும்பத்தினரின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள்.
எதிர்பாராத சில உதவிகள் கிடைக்கும். மனதில் இருந்த குழப்பங்கள் நீங்கி தெளிவு பிறக்கும். புதிய வேலை நிமித்தமான முயற்சிகள் ஈடேறும். போட்டிகளில் பங்குபெற்று திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். தவறிய சில வாய்ப்புகள் மீண்டும் கிடைக்கும். வியாபாரத்தில் வேலையாட்களுடன் அனுசரித்து நடந்துகொள்ளவும். எதிர்பாராத சில உதவிகள் மூலம் மாற்றங்கள் பிறக்கும்.