SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

சுக்கிரன் பெயர்ச்சி: தீபாவளி முதல் இந்த 3 ராசிகளுக்கு ராஜயோகம்.. செல்வம் பெருகும்

Shukra Peyarchi: சுக்கிரன் பகவான் நவம்பர் 6ஆம் தேதி பெயர்ச்சி அடைகிறார். அக்டோபர் 3ஆம் தேதி துலாம் ராசியில் வக்ர நிலையில் பயணித்து வருகிறார். நவம்பர் 6ஆம் தேதி வக்ர நிலையில் கன்னி ராசியை அடைய உள்ளார். இதனால், சில ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம், செல்வம் பெருகும்.

Written By Umabarkavi K
Published: Nov 02, 2026, 09:40 AM IST | Updated: Nov 02, 2026, 09:47 AM IST
Join

Shukra Peyarchi: ஜோதிடத்தில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த கிரகமாக சுக்கிரன் இருக்கிறார். சுக்கிரன்  30 நாட்களுக்கு ஒருமுறை ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார். சுக்கிரனின் பெயர்ச்சி 12 ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. சுக்கிரன் தனது சொந்த ராசியான துலாம் ராசியில் பயணணித்து வருகிறார். அக்டோபர் 3ஆம் தேதி துலாம் ராசியில் வக்ர நிலையில் பெயர்ச்சி அடைந்து வருகிறார். 

தொடர்ந்து, நவம்பர் 6ஆம் தேதி  வக்ர நிலையில் கன்னி ராசியை அடைய உள்ளார். அதிகாலை 12.45 மணி வக்ர நிலையில் கன்னி ராசியில் பெயர்ச்சி அடைவார். கன்னி ராசியின் அதிபதி புதன் ஆவார். கன்னி ராசியில் வக்ர நிலையில் 17 நாட்கள் வரை  இருப்பார். இதன்பிறகு, நவம்பர் 14ஆம் தேதி கன்னி ராசியில் நேராக பெயர்ச்சி அடையும்.  நவம்பர் 22ஆம் தேதி வரை கன்னி ராசியில் இருந்து, பின்னர் துலாம் ராசிக்கு சுக்கின் பெயர்ச்சி அடைவார். இந்த பெயர்ச்சி சில ராசிகளுக்கு நேர்மறையான ஆற்றல் உண்டாகும். அவை என்னென்ன ராசிகள் என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்ப்போம்.

மேஷம் (Aries Zodiac Sign)

மேஷ ராசியில் சுக்கிரன் ஆறாம் வீட்டில் பெயர்ச்சி அடைகிறார். இந்த வீடு வேலைவாய்ப்பு, போட்டி, வெற்றிக்கு தொடர்புடையதாக கருதப்படுகிறது. இந்த நேரம் மேஷ ராசிக்காரர்களுக்கு நன்மைகளை கொண்டு வரும். உறவுகள் இடத்தில் மனம் விட்டு பேசி மகிழ்வீர்கள். எதிர்பார்த்த சில காரியங்கள் கைக்கூடிவரும். 

மற்றவர்களின் தேவைகளை அறிந்து நிறைவேற்றுவீர்கள். பழைய வாடிக்கையாளர்களின் ஒத்துழைப்புகள் கிடைக்கும். உத்தியோக பணிகளில் முக்கியத்துவம் மேம்படும். வெளிவட்டத்தில் மதிப்புகள் உயரும். நண்பர்களின் வட்டம் விரிவடையும். உறவுகள் இடத்தில் பொறுமை வேண்டும். போட்டிதேர்வுகளில் சாதகமான முடிவுகள் கிடைக்கும். அதிஷ்டகரமான சில வாய்ப்புகள் மூலம் மாற்றம் பிறக்கும்.

மேலும் படிக்க: சிம்மத்திற்கு செல்லும் செவ்வாய்.. நவம்பர் 12 முதல் 3 ராசிகளுக்கு தொட்டதெல்லாம் துலங்கும்!

விருச்சிகம் (Scorpio Zodiac Sign)

விருச்சிக ராசிக்காரர்களுக்கு சுக்கிரன் 11ஆம் வீட்டில் பெயர்ச்சி அடைகிறார். இந்த வீடு வருமானம், லாபம், ஆசைகள், அதிர்ஷ்டத்தை குறிக்கிறார். சுக்கிரன் பெயர்ச்சியால் சில ராசிக்காரர்களுக்கு நேர்மறையான ஆற்றல் உண்டாகும். உங்களுக்கு  இருந்து வந்த சிறு சிறு பிரச்னைகள் தீரும். 

கூட்டாளிகளுடன் இணைவது பற்றிய எண்ணங்கள் உண்டாகும். சமூகப் பணிகளில் ஆதரவுகள் கிடைக்கும். தனிப்பட்ட விஷயங்களில் கவனம் வேண்டும். வெளிப்படையான குணத்தினால் மதிப்புகள் உயரும். நண்பர்களுடன் தூர பயணங்கள் சென்று வருவீர்கள். பழக்கவழக்கங்களால் நன்மைகள் ஏற்படும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். மனதில் இருந்த குழப்பம் நீங்கி தெளிவு உண்டாகும். நினைத்த காரியம் நினைத்தபடி நிறைவேறும்.

மகரம் (Capricorn Zodiac Sign)

சுக்கிரன் பெயர்ச்சி மகர ராசியின் 9வது வீட்டில் பெயர்ச்சி அடைகிறார். மகர ராசிக்காரர்களுக்கு பணியிடத்தில் புதிய பொறுப்புகள் கிடைக்கும்.  உயர் அதிகாரிகளிடம் பாராட்டுகளை பெறுவீர்கள். பொழுதுபோக்கான செயல்பாடுகளால் விரயம் ஏற்படும். எதிலும் சிக்கனமாக செயல்படுவீர்கள். 

புதுமையான செயல்களில் ஆர்வத்துடன் ஈடுபடுவீர்கள். பிறமொழி மக்களிடம் கனிவுடன் செயல்படவும். வாடிக்கையாளர்களின் ரசனையைப் புரிந்துக் கொள்வீர்கள். சேமிப்பு தொடர்பான சிந்தனைகள் மேம்படும். உத்தியோக பணிகளில் கவனம் வேண்டும். முதலீட்டு விஷயங்களில் கவனம் வேண்டும். நினைத்த காரியங்கள் எண்ணிய விதத்தில் நிறைவேறும். வியாபாரப் பணிகளில் இருந்து வந்த போட்டிகள் குறையும். வாக்குறுதிகள் அளிக்கும் போது சிந்தித்து செயல்படவும்.

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை)

மேலும் படிக்க: தீபாவளியில் உருவாகும் மங்களகரமான யோகம்.. இந்த 4 ராசிகளுக்கு ஜாக்பாட்.. பொற்காலம் ஆரம்பம்
 

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

I am Uma Barkavi as a journalist with 5 years of experience across various media platforms, including TV and digital media. Since 2021, she has covered Tamil Nadu, lifestyle, national, political, and astrology news. She focuses on delivering engaging digital news content in a reader-friendly and informative format.

ZEENEWS TRENDING STORIES