SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

துலாம் ராசியில் சுக்கிரன் உதயம்: இந்த 4 ராசிகளுக்கு கோடீஸ்வர யோகம்.. ராஜவாழ்க்கை ஆரம்பம்

Shukra Uday 2026: அக்டோபர் 30ஆம் தேதி சுக்கிரன் உதயமாகிறார். தீபாவளி பண்டிகைக்கு முன், சுக்கிரன் உதயமாகுவது சில ராசிக்காரர்களுக்கு நேர்மறையான ஆற்றல் கொடுக்கும். எனவே, அவை என்னென்ன ராசிகள் என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்ப்போம்.

Written By Umabarkavi K
Published: Oct 17, 2026, 09:22 AM IST | Updated: Oct 17, 2026, 10:02 AM IST
Join

Shukra Uday 2026: ஜோதிடத்தில் மிகவும் முக்கியத்தும் வாய்ந்த கிரகமாக சுக்கிரன் அறியப்படுகிறார். சுக்கிரன் பெயர்ச்சி 12 ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும்.  சுக்கிரன் பகவான் 30 நாட்களுக்கு ஒருமுறை ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார். அந்த வகையில், சுக்கிரன் தீபாவளி பண்டிகைக்கு முன்பு, அக்டோபர் 30ஆம் தேதி உதயமாகிறார். சுக்கிரன் துலாம் ராசியில்  அஸ்தமன நிலையிலிருந்து உதயமாகிறது. இதனால், சில ராசிகளுக்கு நேர்மறையான ஆற்றல் உண்டாகும். எனவே, அவை என்னென்ன ராசிகள் என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்ப்போம்.

மேஷம் (Aries Zodiac Sign)

சுக்கிரன் உதயமாகுவதால் மேஷ ராசிக்காரர்களுக்கு நன்மை உண்டாகும. இந்த காலக்கட்டத்தில் நினைத்த காரியங்கள் நிறைவேறும். உடன் பிறந்தவர்களின் ஆதரவு இருக்கும். எல்லாவற்றுக்கும் மேலாக உங்கள் நிதி நிலைமை மேம்படும். பழைய கடன்களை அடையும். நல்ல செய்திகளை கேட்பீர்கள். தொழிலில் எதிர்பாராத முன்னேற்றம் இருக்கும். திருமண தடைகள் நீங்கி, நல்ல வரன் அமைய வாய்ப்புள்ளது. 

இழுபறியான தன வரவுகள் கிடைக்கும். வாழ்க்கைத் துணைவர் வழியில் பொருள் சேர்க்கை உண்டாகும். புதிய நபர்களின் வருகையால் மகிழ்ச்சியான தருணங்கள் ஏற்படும். உங்கள் மீதான நம்பிக்கைகள் அதிகரிக்கும். பார்வை சார்ந்த பிரச்சனைகள் குறையும். மனதில் கற்பனை சார்ந்த சிந்தனைகள் மேம்படும். நண்பர்களின் வருகையால் மாற்றமான சூழ்நிலைகள் உண்டாகும்.

மேலும் படிக்க: புரட்டாசி கடைசி சனி: 12 ராசிகளுக்கான பலன்கள் - இன்று யார் யாருக்கு அனுகூலமான நாள்...?

மிதுனம் (Gemini Zodiac Sign)

மிதுன ராசிக்காரர்களுக்கு சுக்கிரன் உதயத்தால் செல்வம், அதிர்ஷ்டம் பெருகும். நீண்ட காலமாக கிடப்பில் போடப்பட்ட பணிகளை வெற்றிகரமாக முடிப்பீர்கள்.  திடீர் வரவுகள் உண்டாகும். உணவு விஷயத்தில் கட்டுப்பாடு அவசியம். பொருளாதார உயர்வால் வாழ்க்கைத் தரம் உயரும். தந்தை வழியில் வீண்செலவுகள் ஏற்படும். புது பொருள் சேர்க்கை உண்டாகும். எதிர்கால முதலீடுகள் மேம்படும். 

கலைத்துறைகளில் மேன்மை உண்டாகும். குடும்பத்தில் வளைந்து கொடுத்து செல்லவும். உத்தியோக பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். கால்நடை விஷயங்களில் பொறுமை வேண்டும். உடல் ஆரோக்கியத்தில் ஏற்ற இறக்கமான சூழ்நிலை காணப்படும். பயணங்களின் போது ஆவணங்களில் கவனம் வேண்டும். விலை உயர்ந்த பொருட்களைக் கையாள்வதில் கவனம் வேண்டும். பயனற்ற சிந்தனைகளைத் தவிர்ப்பதன் மூலம் மன அமைதி ஏற்படும்.

மேலும் படிக்க: சுக்கிரன் அஸ்தமனம்: அக்., 19 முதல் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 4 ராசிகள்! பணத்தில் நஷ்டம்

கன்னி (Virgo Zodiac Sign)

சுக்கிரன் உதயத்தால் கன்னி ராசிக்காரர்கள் நிதி சிக்கல்களில் இருந்து விடுபடுவீர்கள். உங்கள் கடின உழைப்பிற்கு ஏற்ற பலன்களை பெறுவீர்கள். தொழிலில் சிறந்து விளங்குவார்கள். இந்த காலக்கட்டத்தில் நீங்கள் எடுக்கும் முடிவுகள் வெற்றியில் முடியும். தொழிலதிபர்களுக்கும் இந்த காலம் சிறப்பானதாக இருக்கும். உத்தியோக பணிகளில் உற்சாகத்துடன் செயல்படுவீர்கள். 

வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகள் கைகூடும். குடும்பத்தில் மகிழ்ச்சியான கலகலப்பான சூழல் அமையும். மனதில் எதையும் செய்து முடிக்க முடியும் என்ற தன்னம்பிக்கை அதிகரிக்கும். உடன்பிறந்தவர்கள் ஒத்துழைப்பாக செயல்படுவார்கள். எழுத்து சார்ந்த துறைகளில் முன்னேற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். சந்தேக உணர்வுகள் எதுவும் இன்றி தீரவிசாரித்து முடிவுகளை எடுப்பீர்கள். உறவினர்கள் வழியில் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் குறையும்.

துலாம் (Libra Zodiac Sign)

சுக்கிரன் துலாம் ராசியில் உதயமாகுகிறது. இதனால், இந்த ராசிக்காரர்களுக்கு செல்வம், அதிர்ஷ்டம் உண்டாகும். வருமானத்தை உயரக் கூடும். வாகன பயணங்களில் விவேகம் அவசியமாகும். உடன்பிறப்புகளிடம் சூழ்நிலைக்கு ஏற்ப அனுசரித்து செல்வது நல்லது. வியாபாரம் மூலம் அலைச்சல்கள் ஏற்படும். 

ஆன்மீகப் பணிகளில் விருப்பங்கள் உருவாகும். குழந்தைகளிடமிருந்து வந்த கருத்து வேறுபாடுகள் குறையும். வரவுகளை மேம்படுத்துவது தொடர்பான எண்ணம் மேம்படும். மாணவர்களுக்கு பொழுதுபோக்கு விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். புதுவிதமான பொருட்களின் மீது ஆர்வம் ஏற்படும். சிந்தனை திறனில் மாற்றங்கள் ஏற்படும். உத்தியோகப் பணிகளில் துரிதம் உண்டாகும்.

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை)

மேலும் படிக்க: துலாமில் சூரியன் பெயர்ச்சி: நாளை முதல் ராஜயோகம்... பணம், பதவி, புகழ் கிட்டும்
 

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

I am Uma Barkavi as a journalist with 5 years of experience across various media platforms, including TV and digital media. Since 2021, she has covered Tamil Nadu, lifestyle, national, political, and astrology news. She focuses on delivering engaging digital news content in a reader-friendly and informative format.

ZEENEWS TRENDING STORIES