• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /தமிழகம்
  • /ADMK-வில் நடிகர் தனுஷ்? அதிமுகவின் ராஜேந்திர பாலாஜி சொன்ன மேட்டர்?

ADMK-வில் நடிகர் தனுஷ்? அதிமுகவின் ராஜேந்திர பாலாஜி சொன்ன மேட்டர்?

நடிகர் தனுஷ் அதிமுகவில் இணைந்தால் அவரை இருகரம் கூப்பி வரவேற்க தயாராக இருப்பதாக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார். கட்சியில் யாரை இணைத்துக்கொள்வது என்பதில் எடப்பாடி பழனிசாமி பாகுபாடு பார்ப்பதில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

Written ByR Balaji
Published: Oct 17, 2026, 06:35 PM IST|Updated: Oct 17, 2026, 06:40 PM IST
joinshare
ADMK-வில் நடிகர் தனுஷ்? அதிமுகவின் ராஜேந்திர பாலாஜி சொன்ன மேட்டர்?

About the Author

R Balaji

R Balaji

நான் ஊடகத் துறையில் 5 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வருகிறேன். தற்போது ஜீ நியூஸ் தமிழில் Content Writer ஆக வேலை பார்க்கும் எனக்கு விளையாட்டு, அரசியல் மற்றும் க்ரைம் சார்ந்த செய்திகளை எழுதுவதில் அதிக ஆர்வம் உண்டு.
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
கொல்கத்தாவில் பயங்கரம்.. துர்கா பூஜை கூட்ட நெரிசலில்  17 பேர் பலி! என்ன நடந்தது?

கொல்கத்தாவில் பயங்கரம்.. துர்கா பூஜை கூட்ட நெரிசலில் 17 பேர் பலி! என்ன நடந்தது?

2

Test Twenty: புதிதாக அறிமுகமாகும் கிரிக்கெட் ஃபார்மெட்.. டெஸ்ட் ட்வென்டி என்றால் என்ன? Explained

3

அஞ்சல் துறை ஊழியர்களுக்கு போனஸ் அறிவிப்பு: எவ்வளவு கிடைக்கும்? கணக்கீடு இதோ

4

ADMK-வில் நடிகர் தனுஷ்? அதிமுகவின் ராஜேந்திர பாலாஜி சொன்ன மேட்டர்?

5

Explained: விழுப்புரத்தில் 7 வயது சிறுமி மாயம்.. 6 நாட்களாக தேடும் போலீஸ்.. என்ன நடக்கிறது?

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

விருதுநகர் மாவட்டம், சிவகாசி மாநகராட்சிக்கு உட்பட்ட திருத்தங்கல் பாலாஜி நகரில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில், கட்சியின் 55வது ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ராஜேந்திர பாலாஜி, கட்சியின் தற்போதைய நிலை, தலைமை மற்றும் நடிகர் தனுஷின் அரசியல் வருகை குறித்து பல்வேறு கருத்துகளை தெரிவித்தார்.

தனுஷுக்கு அதிமுகவில் வரவேற்பு

இளைஞர்கள் மத்தியில் செல்வாக்கு கொண்ட முன்னணி நடிகராக தனுஷ் இருப்பதாக குறிப்பிட்ட ராஜேந்திர பாலாஜி, அவர் அதிமுகவில் இணைந்தால் மகிழ்ச்சியுடன் வரவேற்போம் என்றார். தனுஷ் அரசியலுக்கு வருவது குறித்து பரவி வரும் தகவல்கள் உண்மையா அல்லது வதந்தியா என்பது காலப்போக்கில் தெரியவரும் என்றும் தெரிவித்தார்.

நடிகர்கள் அரசியலுக்கு வருவதில் தவறில்லை என்றும், அரசியலுக்கு வந்த பிறகு அதில் முழுமையாக செயல்பட வேண்டும் என்றும் அவர் கூறினார். திரைப்படங்களிலும் அரசியலிலும் ஒரே நேரத்தில் ஈடுபடுவது குறித்தும் தனது கருத்தை முன்வைத்தார்.

சசிகலா, ஓபிஎஸ் இணைப்பு குறித்து கருத்து

சசிகலா, டிடிவி தினகரன் மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரை மீண்டும் அதிமுகவில் இணைக்க வேண்டும் என விரும்பும் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, தனது கருத்தை நேரடியாக எடப்பாடி பழனிசாமியிடம் தெரிவிக்கலாம் என ராஜேந்திர பாலாஜி கூறினார்.

கட்சியின் வளர்ச்சிக்கு உதவுவார்கள் எனக் கருதப்படும் நபர்களை இணைத்துக்கொள்ளும் மனப்பக்குவம் எடப்பாடி பழனிசாமிக்கு இருப்பதாகவும், கட்சியில் யார் இணைய வேண்டும் என்பதில் அவர் தேவையற்ற வேறுபாடுகளை பார்ப்பதில்லை என்றும் தெரிவித்தார்.

இடைத்தேர்தல் தோல்வியால் அதிமுக பலவீனமடையவில்லை

மதுராந்தகம், தாராபுரம் ஆகிய தொகுதிகளில் நடைபெற்ற இடைத்தேர்தல்களில் அதிமுக தோல்வியடைந்ததை வைத்து கட்சி பலவீனமடைந்துவிட்டதாக கருதக்கூடாது என ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார். எடப்பாடி பழனிசாமியின் தலைமையில் அதிமுக எழுச்சி பெற்றுள்ளதாகவும், அவரது தலைமைக்கு வாக்காளர்கள் அங்கீகாரம் அளித்துள்ளதாகவும் அவர் கூறினார்.

மேலும், அதிமுகவில் உள்ள ஒன்றரை கோடி உறுப்பினர்களும் எடப்பாடி பழனிசாமியை தலைவராக ஏற்றுக்கொண்டுள்ளதாக குறிப்பிட்ட அவர், கட்சிக்குள் வேறு குழுக்களுக்கு இடமில்லை என்றார்.

பொதுக்குழுவை கூட்ட வலுயுறுத்துவது ஏன்?

இடைத்தேர்தல் தோல்விக்கான காரணங்களை ஆராய அதிமுக பொதுக்குழுவை கூட்ட வேண்டும் என சி.வி. சண்முகம், எஸ்.பி. வேலுமணி உள்ளிட்டோர் வலியுறுத்தி வருவது குறித்தும் ராஜேந்திர பாலாஜியிடம் கேள்வி எழுப்பப்பட்டது. கட்சிக்கு வெளியே இருந்து கொண்டு பொதுக்குழுவை கூட்டுமாறு யாரும் கட்டளையிட முடியாது என்ற அவர், கட்சியை கைப்பற்ற முயற்சிப்பவர்களின் எண்ணம் நிறைவேறாது எனத் தெரிவித்தார்.

அதிமுகவை யாராலும் கலைக்க முடியாது என்றும், மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜியின் கட்சிக்கு ஏற்பட்ட நிலை அதிமுகவுக்கு ஏற்படாது என்றும் அவர் கூறினார்.

அதிமுக - திமுக குறித்து பேசிய ராஜேந்திர பாலாஜி

அதிமுகவும் திமுகவும் திராவிட இயக்கத்தின் வழிவந்த கட்சிகள் எனக் குறிப்பிட்ட ராஜேந்திர பாலாஜி, ஓர் ஆற்றின் ஒரு கரைகளை போல இந்த இரு கட்சிகளும் இருப்பதாக கூறினார். இந்த அரசியல் களத்தில் மற்றவர்கள் இடம்பிடிப்பது குறித்தும் தனது கருத்தை வெளிப்படுத்தினார்.

கொளத்தூரில் ஸ்டாலினை தோற்கடித்ததாக பெருமை பேசியவர்கள், இடைத்தேர்தல்களில் நீண்ட நேரம் தொகுதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பிரச்சாரம் செய்த பின்னரே வெற்றி பெற்றதாக அவர் விமர்சித்தார். மேலும், தமிழக வெற்றிக் கழகம் ரசிகர்களை அடிப்படையாக கொண்டு செயல்படும் இயக்கம் என்றும் தனது கருத்தை தெரிவித்தார். 
 

Add Zee News as a Preferred Source
TAGS:
Tamil Nadu