• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /ஆன்மீகம்
  • /சுக்கிரன் வக்ர பெயர்ச்சி: இந்த 4 ராசிகளுக்கு இன்று முதல் கோடீஸ்வர யோகம்.. பொற்காலம் ஆரம்பம்

சுக்கிரன் வக்ர பெயர்ச்சி: இந்த 4 ராசிகளுக்கு இன்று முதல் கோடீஸ்வர யோகம்.. பொற்காலம் ஆரம்பம்

Shukra Peyarchi: சுக்கிரன் பகவான் நவம்பர் 6ஆம் தேதியான இன்று துலாம் ராசியில் இருந்து கன்னி ராசிக்கு வக்ர பெயர்ச்சி அடைகிறார். இதனால், சில ராசிகளுக்கு நேர்மறையான ஆற்றல் கொடுக்கும். எனவே, அவை என்னென்ன ராசிகள் என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்ப்போம்.

Written ByUmabarkavi K
Published: Nov 06, 2026, 08:47 AM IST|Updated: Nov 06, 2026, 09:47 AM IST
joinshare
சுக்கிரன் வக்ர பெயர்ச்சி: இந்த 4 ராசிகளுக்கு இன்று முதல் கோடீஸ்வர யோகம்.. பொற்காலம் ஆரம்பம்

About the Author

Umabarkavi K

Umabarkavi K

I am Uma Barkavi as a journalist with 5 years of experience across various media platforms, including TV and digital media. Since 2021, she has covered Tamil Nadu, lifestyle, national, political, and astrology news. She focuses on delivering engaging digital news content in a reader-friendly and informative format.
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
25 நாட்களை கடந்தது.. செஞ்சி சிறுமி எங்கே? சிக்கும் வில்லுப்பாட்டு குழு?  சிபிசிஐடி விசாரணை

25 நாட்களை கடந்தது.. செஞ்சி சிறுமி எங்கே? சிக்கும் வில்லுப்பாட்டு குழு? சிபிசிஐடி விசாரணை

2

Explainer: டெல்லி நகரை வாட்டும் காற்று மாசுபாடு, திணறும் மக்கள்: 470-ஐத் தாண்டும் AQI

3

வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி.. விடாமல் கொட்டப்போகுது மழை.. தீபாவளிக்கு எப்படி?

4

இசிஎல் பைனான்ஸ் நிறுவனத்திற்கு உச்ச நீதிமன்றம் வைத்த செக்: முழு விவரம்

5

‘சீன்’ ட்விட்டர் ரிவ்யூ! 3வது ப்ளாக் பஸ்டர் ஹிட் கொடுத்தாரா சூர்யா? ரசிகர்களின் விமர்சனம்..

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

Shukra Peyarchi: ஜோதிடத்தில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த கிரகமாக சுக்கிரன் அறியப்படுகிறார். சுக்கிரன் பெயர்ச்சி 12 ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். சுக்கிரன் 30 நாட்களுக்கு ஒரு முறை ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு பெயர்ச்சி அடைவார். அந்த வகையில், சுக்கிரன் பகவானின் பெயர்ச்சி இன்று நடக்கிறது. சுக்கிரன் இன்று நவம்பர் 6ஆம்  தேதி துலாம் ராசியில் இருந்து கன்னி ராசிக்கு வக்ர பெயர்ச்சி அடைகிறார். நவம்பர் 14ஆம் தேதி நேராக கன்னி ராசியில் பெயர்ச்சி அடைகிறார். கன்னி ராசியில் சுக்கிரன் வக்ர பெயர்ச்சி அடைவது சில ராசிகளுக்கு தாக்கத்தை ஏற்படுத்தும். ரிஷபம் மற்றும் விருச்சிகம் உள்ளிட்ட சில ராசிகளுக்கு காதல், திருமணம், நிதி மற்றும் தொழில் ஆகியவற்றில் குறிப்பிடத்தக்க பலன்கள் கிடைக்க வாய்ப்புள்ளது.

ரிஷபம் (Taurus Zodiac Sign)

சுக்கிரன் பெயர்ச்சி ரிஷப ராசிக்காரர்களுக்கு சாதகமான பலன்களை கொடுக்கும். இந்த காலக்கட்டத்தில் உங்கள் நிதி நிலைமை மேம்படும். உங்கள் வீட்டில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். உங்கள் தேவைக்கான பணத்தை நீங்கள் பெறலாம். நினைத்த காரியங்கள் அனைத்தும் நிறைவேறும். உங்கள் வருமானமும் உயரக் கூடும். இந்த காலத்தில் நீங்கள் செய்யும் அனைத்து வேலைகளிலும் சிறந்த பலன்களை பெறுவீர்கள. திட்டமிட்ட பணிகளை முடிப்பீர்கள். பெற்றோரின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். சேமிப்பு தொடர்பான சிந்தனைகள் உருவாகும். கமிஷன் வியாபாரத்தில் லாபம் மேம்படும். கடன் பிரச்சனைகள் கட்டுப்பட்டுகள் வரும். பிற இன மக்களின் ஒத்துழைப்புகள் கிடைக்கும். உத்தியோகத்தில் மதிப்பு உயரும். மனதளவில் புத்துணர்ச்சி பிறக்கும்.

விருச்சிகம் (Scorpio Zodiac Sign)

சுக்கிரன் பெயர்ச்சியால் விருச்சிக ராசிக்காரர்களுக்கு செல்வம், அதிர்ஷடம் பெருகும். சுக்கிரன் பெயர்ச்சியால் வருமானம் பெருகும். இரண்டு வாரங்களுக்கு உங்கள் நிதி நிலைமை வலுப்பெற வாய்ப்புள்ளது. நீங்கள் செலுத்த வேண்டிய கடன்களைத் திருப்பிச் செலுத்தக்கூடும். நெருக்கமானவர்கள் பற்றிய புரிதல் அதிகரிக்கும். புதிய முயற்சிகளில் அனுபவம் ஏற்படும். உடன் பிறந்தவர்களிடம் அனுசரித்து செல்லவும். எதிர்காலம் குறித்த சிந்தனைகள் மனதில் மேம்படும். வழக்கு விஷயங்களில் சாதகமான முடிவுகள் கிடைக்கும். உத்தியோகத்தில் பொறுப்புகள் மேம்படும். எதிர்பாராத சில வரவுகள் உண்டாகும். சுப காரியங்களில் கலந்து கொள்வீர்கள். அரசு காரியங்களில் ஆதாயம் ஏற்படும். நண்பர்களின் வட்டம் விரிவடையும். வியாபாரத்தில் மேன்மை ஏற்படும்.

மகரம் (Capricorn Zodiac Sign)

சுக்கிரன் ஒன்பதாம் வீட்டிலிருந்து மகர ராசியிலிருந்து கன்னி ராசிக்கு பெயர்ச்சி அடைவார். இந்த நேரத்தில், நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வேலையை விரைவுபடுத்த முயற்சிப்பீர்கள். ஒரு முக்கியமான முயற்சியில் வெற்றி பெற வாய்ப்புள்ளது. இது உங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தரும். உங்கள் கடின உழைப்பிற்கு விரும்பிய பலன் கிடைக்கலாம். ஊழியர்களுக்கு அலுவலகத்தில் நல்ல அங்கீகாரம் கிடைக்கலாம். வணிகத் துறையில் உள்ளவர்களுக்கு புதிய தொடர்புகளும் வாடிக்கையாளர்களும் கிடைக்கலாம். இந்த நேரம் மாணவர்களுக்கு மங்களகரமானதாக இருக்கும். போட்டித் தேர்வுகளில் பங்கேற்பவர்கள் நல்ல முடிவுகளைப் பெற வாய்ப்புள்ளது.

கும்பம் (Aquarius Zodiac Sign)

சுக்கிரன் பெயர்ச்சியால் கும்ப ராசிக்காரர்கள் சிறந்த பலன்களை பெறுவார்கள். இந்தக் காலகட்டத்தில் உங்கள் வருமானம் அதிகரிக்க வாய்ப்புள்ளது. வேலை முயற்சிகளில் இருப்பவர்கள் நல்ல செய்திகளைக் கேட்கலாம். நீங்கள் செய்யும் ஒவ்வொரு முயற்சியிலும் நல்ல செய்திகள் வரக்கூடும். உங்கள் குடும்ப வாழ்க்கையில் சூழல் மகிழ்ச்சியாக இருக்கும். சமூகத்தில் உங்களுக்கு அங்கீகாரம் கிடைக்க வாய்ப்புள்ளது. வீட்டிலும் வெளிநாட்டிலும் மகிழ்ச்சியான சூழல் நிலவும். தேவைக்கான பணம் கிடைக்க வாய்ப்புள்ளது. உங்கள் வருமானம் தொடர்ந்து அதிகரிக்கும். நீங்கள் செய்யும் ஒவ்வொரு செயலிலும் நல்ல வெற்றியை அடையலாம்.

(பொறுப்பு துறப்பு: இதில் இடம்பெற்றுள்ள தகவல்கள் பொதுவானவை ஆகும். பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், நம்பிக்கைகளின் அடிப்படையில் எழுதப்பட்டவை. இதற்கு ஜீ நியூஸ் (Zee Tamil News) பொறுப்பேற்காது)

Add Zee News as a Preferred Source
TAGS:
Peyarchi