SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

கண் ரொம்ப துடிக்குதா? அப்போ ‘இது’ நடக்கப்போகுதுன்னு அர்த்தம்! பெண்களே கவனீங்க..

நம்மில் பல பேருக்கு திடீரென கண் துடிக்கும். இதற்கான காரணம் என்னவென்று பலருக்கு தெரியாது. இதுகுறித்து பழங்காலத்தில் என்னென்ன நம்பிக்கைகள் இருந்துள்ளது என்று இங்கு பார்ப்போம்.

Written By Yuvashree M
Published: Aug 12, 2026, 07:07 PM IST | Updated: Aug 12, 2026, 07:14 PM IST
Join

“விக்கல் வருதா? அப்ப யாரோ உன்னை நினைக்கிறாங்கன்னு அர்த்தம். காகம் கத்துதா? அப்போ இன்னைக்கு வீட்டுக்கு சொந்தக்காரங்க வரப்போறாங்க” என்று நம்மை அறியாமல் நம் வாழ்நாளில் பல்வேறு விஷயங்களை தினசரி ஏதேனும் ஒரு நம்பிக்கையுடன் தொடர்பு கொண்டு நம்பிக் கொண்டே இருப்போம். இப்படி கண் துடிப்பதற்கும் ஒரு சில நம்பிக்கைகள் அதற்கு பின்னால் இருக்கின்றன.

இடது கண் துடிப்பு.. பெண்களுக்கு நல்லதா?

கண் துடிப்பை எதிர்காலத்தில் நடைபெறும் சில நிகழ்வுகளின் அறிகுறியாக பார்ப்பார்கள் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? சமுத்ரிகா சாஸ்திரம் மற்றும் சில நாட்டுப்புற நம்பிக்கைகளில் கண் துடிப்பையும் எதிர்காலத்தையும் இணைத்துள்ளனர். ஆனால் இதில் ஒரு சில வேறுபாடுகள் மட்டும் இருக்கின்றன. ஆண்களுக்கு கண் துடிப்பதும் பெண்களுக்கு கண் துடிப்பதும் வெவ்வேறு விஷயங்களுக்கான அறிகுறியாக இருக்கலாம் எனக்கு கருதப்படுகிறது.

ஒரு சில பாரம்பரியங்களில், பெண்களுக்கு எடுத்துக் கண்டுபிடிப்பது சாதகமான அறிகுறியாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. அவர்களுக்கு எதிர்பாராத விதமாக ஏதேனும் நல்ல செய்தி அல்லது மகிழ்ச்சியான விஷயங்கள் நடக்க இருந்தாலும் குடும்பத்தில் சுப நிகழ்வுகள் நடக்க இருந்தாலும், நீண்ட காலமாக எதிர்பார்த்த விஷயம் தொடர்பாக நல்ல தகவல் கிடைக்க இருந்தாலும் இடது கண் துடிக்கும் என கூறப்படுகிறது.

திருமண விசேஷங்கள்..

திருமண வயதில் இருக்கும் இளம் பெண்களுக்கு இடத்துக்கு மட்டும் கொடுத்தால் அது தொடர்பாக வாழ்க்கையின் நல்ல மாற்றங்கள் ஏற்படலாம் எனக் கூறப்படுகிறது. அதேபோல திருமணத்திற்காக நீண்ட காலமாக காத்திருக்கும் பெண்களுக்கும் நல்லவரன் அமையலாம் என்று சாஸ்திரங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஏற்கனவே காதல் உறவில் இருக்கும் பெண்களுக்கு அவர்களின் உறவு அடுத்த கட்டத்தை நோக்கி நகரம் என்று சில பாரம்பரிய நம்பிக்கைகள் தெரிவிக்கின்றன. இருப்பினும் இவை பாரம்பரிய நம்பிக்கைகளாக மட்டுமே எடுத்துக் கொள்ளப்படுகின்றனவே அன்றி ஜோதிட கணிப்புகளாக எடுத்துக் கொள்ளப்படுவதில்லை.

வரவு வருமா?

இடது கண் துடிப்பது என்பது எதிர்பாராத பண வரவுக்கும் பொருளாதார ரீதியான முன்னேற்றத்தை குறிக்கும் அறிகுறியாக இருக்கலாம் என்றும் சிலர் கூறுகின்றனர். எப்போது கொடுத்த பணம் நீண்ட காலம் ஆக வராமல் இருந்த பணம் கைக்கு கிடைப்பது, எதிர்பாராத வாய்ப்பு ஒன்று கிட்டுவது, தொழில் தொடர்பாக நல்ல செய்தி வருவது போன்ற நிகழ்வுகள் இத்துடன் தொடர்புடையதாக இருப்பதாக கூறப்படுகிறது.

அதேபோல பெண்களுக்கு இடது கண் துடிப்பது குடும்பத்தில் ஒரு நல்ல செய்தி வருவதற்கான அறிகுறியாகவும் இருக்கலாம் என்று பார்க்கப்படுகிறது. வீட்டில் சுப நிகழ்ச்சிகள் தொடர்பான பேச்சு தொடங்குவதற்கு அது அறிகுறியாக இருக்கலாம்.

அறிவியல் சொல்வதென்ன?

கண் துடிப்பை அறிவியல் ரீதியாகவும் அணுக வேண்டியது அவசியம் ஆகும். இதனை மருத்துவ ரீதியாக அணுகினால் கண் இமை தன்னிச்சையாக துடிப்பதற்கு அளவித சாதாரண காரணங்கள் இருப்பது தெரியவரும்.

மன அழுத்தம், தூக்கமின்மை, உடல் சோர்வு, நீண்ட நேரம் போன் அல்லது லேப்டாப்பை பார்ப்பது போன்ற பல காரணங்கள் கண் இமை துடிப்பதற்கு காரணமாக இருக்கலாம்.

சாதாரணமாக எப்போதாவது ஏற்படும் கண் துடிப்பு பாதகம் இல்லாதது. ஆனால் இதுவே நீடித்தால், அத்துடன் சேர்ந்து கண்சிவத்தல், வீக்கம், வலி போன்ற அறிகுறிகள் தென்பட்டால் உடனே மருத்துவரை அணுக வேண்டியது அவசியம் ஆகும். 

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

யுவஸ்ரீ, 3 ஆண்டுகளுக்கும் மேல் டிஜிட்டல் மீடியாவில் பணியாற்றி வருகிறேன். சினிமா, வைரல், குற்றம் மற்றும் உள்ளூர் சம்பந்தப்பட்ட செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உள்ளது. கதை மற்றும் கவிதைகளை எழுதுவதும், அவற்றை சில மேடைகளில் பகிர்வதும் எனக்கு பிடித்த விஷயங்கள்.

ZEENEWS TRENDING STORIES