அக்டோபர் 28ல் சுக்கிரன் உதயம்: இந்த 3 ராசிகளுக்கு ஜாக்பாட்!
2026 அக்டோபர் 28ஆம் தேதி துலாம் ராசியில் சுக்கிரன் உதயமாவதை தொடர்ந்து, மேஷம், துலாம், கும்ப ராசிக்காரர்களுக்கு நிதி, தொழில் மற்றும் குடும்ப வாழ்க்கையில் சாதகமான மாற்றங்கள் ஏற்படலாம்.
ஜோதிடத்தில் சுக்கிர பகவான் செல்வம், பொருளாதார வளர்ச்சி, காதல், திருமண வாழ்க்கை மற்றும் ஆடம்பரத்தை குறிக்கும் கிரகமாக கருதப்படுகிறது. அந்த வகையில், 2026 அக்டோபர் 28 ஆம் தேதி சுக்கிரன் துலாம் ராசியில் உதயமாகிறது. இந்த நிகழ்வு சில ராசிக்காரர்களின் நிதி நிலை, வேலைவாய்ப்பு மற்றும் குடும்ப உறவுகளில் சாதகமான மாற்றங்களை கொண்டு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
குறிப்பாக மேஷம், துலாம் மற்றும் கும்ப ராசிகளில் பிறந்தவர்களுக்கு இந்த கிரக நிகழ்வு பல்வேறு நன்மைகளை வழங்கக்கூடும். இந்த மூன்று ராசிகளுக்கான பலன்களை விரிவாக பார்க்கலாம்.
மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு தொழில் மற்றும் பொருளாதார ரீதியாக முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் உருவாகலாம். நீண்ட நாட்களாக எதிர்கொண்டு ந்த தடைகள் குறைந்து, புதிய முயற்சிகளை தொடங்குவத்ற்கான சூழல் அமையக்கூடும். குறிப்பாக சொந்தமாக தொழில் செய்பவர்களுக்கு வியாபாரத்தை விரிவுப்படுத்தவும் வருமானத்தை அதிகரிக்கவும் புதிய வாய்ப்புகள் கிடைக்கலாம். பணியில் இருப்பவர்கள் தங்களின் திறமையையும் உழைப்பையும் வெளிப்படுத்துவதன் மூலம் அலுவலகட்த்தில் பாராட்டுகளை பெற வாய்ப்புள்:ளது. வெளிநாட்டு வேலைக்காக முயற்சி செய்து வருபவர்களுக்கும் சாதகமான செய்திகள் கிடைக்கலாம்.
குடும்பத்தை பொறுத்தவரை கருத்து வேறுபாடுகள் மற்றும் சிறுசிறு பிரச்சினைகள் குறைந்து உறவுகளில் இணக்கம் அதிகரிக்கக்கூடும். இதனால் குடும்பத்தினருடன் மகிழ்ச்சியான நேரத்தை செலவிடுவதற்கான சூழல் உருவாகலாம்.
துலாம்
சுக்கிரன் துலாம் ராசியின் அதிபதி என்பதால், இந்த ராசிக்காரர்களுக்கு அதன் உதயம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இந்த காலகட்டத்தில் பொருளாதார முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் அதிகரிக்கலாம். குறிப்பாக, ஒப்பந்தங்கள் மற்றும் தொழில் சார்ந்த நடவடிக்கைகள் மூலம் வருமானம் ஈட்டுவதற்கான சூழல் அமையக்கூடும்.
நீண்ட காலமாக தாமதமாகி வந்த பணிகள் மீண்டும் வேகமெடுக்கலாம். முதலீடுகள் தொடர்பான திட்டங்களை வகுப்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கலாம். அதே நேரத்தில், எந்தவொரு முதலீட்டையும் மேற்கொள்வதற்கு முன்பு அதன் அபாயங்களை ஆராய்வது அவசியம். தனிப்பட்ட வாழ்க்கையில் தன்னம்பிக்கையும் மனவலிமையும் அதிகரிக்கக்கூடும். இதுவரை தள்ளிப்போன முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படலாம். வெளிநாட்டு நிறுவனங்களுடனான தொழில் தொடர்புகள் அல்லது ஒப்பந்தங்கள் மூலமாகவும் சாதகமான பலன்கள் கிடைக்க வாய்ப்புள்ளது. உடல்நலத்தில் கவனம் செலுத்தி திட்டமிட்ட செயல்களை சீராக மேற்கொண்டால் அன்றாட பணிகளை சிறப்பாக நிர்வகிக்க முடியும்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு சுக்கிரனின் உதயம் புதிய வாய்ப்புகளுக்கான காலமாக அமையக்கூடும். ஏற்கெனவே தொழில் செய்து வருபவர்கள் தங்களின் வணிகத்தை விரிவுபடுத்துவதற்கான திட்டங்களை செயல்படுத்தலாம். புதிய தொழிலை தொடங்க நினைப்பவர்களுக்கும் அதற்கான வாய்ப்புகளை ஆராய்வதற்கு ஏற்ற சூழல் உருவாகலாம்.
பொருளாதாரத்தைப் பொறுத்தவரை, வருமானத்தை அதிகரிப்பதற்கான புதிய வழிகள் கிடைக்கலாம். முதலீடுகள் மூலம் பலன் கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டாலும், நிதி முடிவுகளை அவசரமாக எடுக்காமல் முறையாகத் திட்டமிடுவது நல்லது. வேலைக்காக வெளிநாடு செல்ல முயற்சி செய்பவர்களுக்கும் சாதகமான வாய்ப்புகள் அமையலாம்.
பணியிடத்தில் கடின உழைப்புக்கான அங்கீகாரம் கிடைக்கலாம். மேலதிகாரிகளின் பாராட்டுகளை பெறுவதுடன், புதிய பொறுப்புகளையும் ஏற்கும் சூழல் உருவாகக்கூடும். குடும்ப வாழ்க்கையில் நீடித்து வந்த கருத்து வேறுபாடுகள் பேச்சுவார்த்தை மூலம் சீராகலாம். வாழ்க்கை துணையுடன் புரிதல் அதிகரித்து, உறவில் மகிழ்ச்சியும் நெருக்கமும் மேம்பட வாய்ப்புள்ளது.
(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை)