SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

சூரியன் பெயர்ச்சி: ஆக்ஸ்ட் 17 முதல் 4 ராசிகளுக்கு பொற்காலம் ஆரம்பம், ஜாக்பாட் அடிக்கும்

Sun Transit Effects: 2026-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 17-ஆம் தேதி காலை சுமார் 8:00 மணியளவில், சூரியன் கடக ராசியிலிருந்து தனது சொந்த ராசியான சிம்ம ராசிக்கு இடம்பெயர்கிறார். சூரியன் தனது சொந்த ராசியான சிம்மத்தில் நுழைவது மிகவும் மங்களகரமானதாகவும், அதிக தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியதாகவும் கருதப்படுகிறது.

Written By Sripriya Sambathkumar
Published: Aug 12, 2026, 01:45 PM IST | Updated: Aug 12, 2026, 01:51 PM IST
Join

Suriyan Peyarchi Palangal: ஜோதிட சாஸ்திரத்தின் படி, சூரியன் கிரகங்களின் அரசனாகக் கருதப்படுகிறார். அவர் ஒவ்வொரு மாதமும் தனது ராசியை மாற்றுகிறார். சூரியன் பெயர்ச்சி 'சூரிய சங்கராந்தி' என்று அழைக்கப்படுகிறது. சூரியன் பெயர்ச்சி முக்கிய ஜோதிட நிகழ்வாக பார்க்கப்படுகின்றது.

சூரியன் பெயர்ச்சி

சூரியன் பெயர்ச்சி பலன்கள்

சிம்மத்தில் சூரியன் பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும். எனினும், சில ராசிகளில் இந்த பெயர்ச்சி ஒரு பொற்காலத்தின் தொடக்கமாக இருக்கும். இந்த ராசிக்காரர்கள் பணியிடத்தில் உயர்ந்த நிலையை அடையக்கூடும். இவர்களது நிதி நிலையை வலுப்பெறும். சூரியன் அருளால் அதிகப்படியான நன்மைகளை அடையவுள்ள ராசிகளை பற்றி இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம்.

சூரியன் பெயர்ச்சியால் நன்மை அடையப்போகும் ராசிகள்

ராசிகள்பலன்கள்
சிம்மம்புதிய பொறுப்புகள் வழங்கப்படலாம்
துலாம்குழந்தைகளால் மகிழ்ச்சி கிடைக்கும்
விருச்சிகம்நண்பர்கள் மற்றும் உறவினர்களின் வலுவான ஆதரவு கிடைக்கும்
மிதுனம்புதிய வேலைவாய்ப்புகள் அதிகரிக்கும்

மிதுனம் (Gemini): புதிய வேலைவாய்ப்புகள் அதிகரிக்கும்

சூரியன் பெயர்ச்சி மிதுன ராசிக்காரர்களுக்கு சாதகமான பலன்களைத் தரும். புதிய வேலைவாய்ப்புகள் அதிகரிக்கும். வருமானத்திற்கான புதிய வழிகளும் உருவாகலாம். நிதி நிலை மேன்மையடையும்.

தொழில் செய்பவர்கள் புதிய ஒப்பந்தங்கள் மற்றும் திட்டங்கள் மூலம் பயனடையக்கூடும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். மாணவர்களுக்கும் சூரியனின் இந்தப் பெயர்ச்சி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமையும். படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். எதிர்பாராத நல்ல செய்திகள் வந்து சேரும்.

சிம்மம் (Leo): புதிய பொறுப்புகள் வழங்கப்படலாம்

ஆகஸ்ட் 17 அன்று சூரியன் தனது சொந்த ராசியான சிம்மத்தில் நுழைகிறார். இது சிம்ம ராசிக்காரர்களின் ஆளுமை, ஈர்ப்புத் திறன் மற்றும் தன்னம்பிக்கையை அதிகரிக்கும். இக்காலத்தில், அலுவலக பணிகளில் உள்ளவர்களுக்கு புதிய பொறுப்புகள் வழங்கப்படலாம். 

பதவி உயர்வு மற்றும் வருமான உயர்வுக்கான வலுவான வாய்ப்புகள் உள்ளன. தொழில் செய்பவர்கள் புதிய முயற்சிகளில் ஈடுபடுவதற்கான வாய்ப்புகளைப் பெறக்கூடும். நீங்கள் சமூகத்தில் நற்பெயரைப் பெறுவதோடு, உங்கள் நிதி நிலையிலும் முன்னேற்றத்தைக் காண்பீர்கள்.

துலாம் (Libra): குழந்தைகளால் மகிழ்ச்சி கிடைக்கும்

சூரியன் சிம்ம ராசிக்கு மாறுவது துலாம் ராசிக்காரர்களுக்குச் சாதகமான பலன்களைத் தரும். வருமானம் மற்றும் லாபத்திற்கான புதிய வழிகள் உங்களுக்குக் கிடைக்கும். இது நீண்டகாலமாகத் தீர்க்கப்படாமல் இருந்த பல சிக்கல்களைத் தீர்க்க உதவும். தடைபட்டிருந்த பணிகள் இக்காலத்தில் எவ்வித இடையூறுமின்றி நிறைவடையக்கூடும். குழந்தைகளால் மகிழ்ச்சி கிடைக்கும்.

அலுவலக பணியில் இருப்பவர்களுக்குப் பதவி உயர்வும், மரியாதைக்குரிய பதவிகளும் கிடைக்கலாம். முதலீடுகளுக்கு வரவிருக்கும் நாட்கள் மங்களகரமானதாகவும் லாபகரமானதாகவும் அமையும். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவுடன், உங்கள் முதலீடுகள் பல மடங்கு வருவாயை ஈட்டித் தரக்கூடும்.

விருச்சிகம் (Scorpio): நண்பர்கள் மற்றும் உறவினர்களின் வலுவான ஆதரவு கிடைக்கும்

விருச்சிக ராசிக்காரர்களுக்கு, சிம்மத்தில் சூரியன் பெயர்ச்சி ஒரு வரப்பிரசாதமாக அமையும். உங்களுக்கு மங்களகரமான செய்திகள் கிடைக்கலாம். தொழில் மற்றும் வணிக முயற்சிகளில் புதிய மைல்கற்களை நீங்கள் எட்டுவீர்கள். வருமானம் அதிகரிக்கும். கணிசமான லாபத்தைத் தரக்கூடிய முயற்சிகளில் நீங்கள் ஈடுபடலாம்.

பணியிடத்தில் ஒரு முக்கிய மைல்கல்லை நீங்கள் அடையக்கூடும். இதனால் மேல் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். தொழில் செய்பவர்களுக்குச் சாதகமான வாய்ப்புகள் கிடைக்கலாம். அதேவேளையில் வேலை தேடுபவர்களுக்குச் சிறந்த வேலைவாய்ப்புகள் அமையும். அரசுத் துறையில் பணிபுரிபவர்களுக்கு ஒரே நேரத்தில் பல சிறந்த வாய்ப்புகள் கிடைக்கக்கூடும். நண்பர்கள் மற்றும் உறவினர்களின் வலுவான ஆதரவு கிடைக்கும்.

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

ஸ்ரீப்ரியா சம்பத், 6 ஆண்டுகளுக்கும் மேல் மீடியாவில் பணியாற்றி வருகிறார். இவர், வணிகம் மற்றும் தனிநபர் நிதி (Personal Finance) சார்ந்த கட்டுரைகளை எழுதுவதில் நிபுணத்துவம் பெற்றவர். மத்திய பட்ஜெட்டுகள், வங்கித் துறை, வருமான வரி, பங்குச் சந்தைகள் மற்றும் நாட்டின் ஒட்டுமொத்தப் பொருளாதாரம், மத்திய அரசு ஊழியர்கள், ஊதியக் குழுக்கள் (Pay Commissions), ஓய்வூதியத் திட்டங்கள், ஓய்வூதியதாரர்கள், அரசின் முக்கியக் கொள்கைகள் மற்றும் சர்வதேச விவகாரங்களில் பல கட்டுரைகளை எழுதியுள்ளார்.எழுத்தை வாசகர்களோடு இணைவதற்கான ஒரு சிறந்த பாலமாகக் கருதும் இவர், அவர்களின் தேவைகளுக்கும் ஆர்வங்களுக்கும் முன்னுரிமை அளிக்கிறார். வாசகர்களுடன் இயல்பான, உண்மையான மற்றும் நேர்மையான தொடர்பைக் கொண்டிருப்பதே இவரின் முதன்மை இலக்காகும். பணி நேரத்தைத் தாண்டி, புத்தகங்கள் வாசிப்பது, புதிய இடங்களுக்குப் பயணம் செய்வது மற்றும் அறிவுசார் விவாதங்களில் பங்கேற்பது இவருக்கு மிகவும் பிடித்தமானவை.

ZEENEWS TRENDING STORIES