• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /ஆன்மீகம்
  • /நவம்பர் 17ல் சூரிய பெயர்ச்சி.. இந்த 4 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் தேடி வரும்!

நவம்பர் 17ல் சூரிய பெயர்ச்சி.. இந்த 4 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் தேடி வரும்!

நவம்பர் 17 அன்று சூரிய பகவான் விருச்சிக ராசிக்கு இடம்பெயர்வதால் மேஷம், சிம்மம், மகரம் மற்றும் கும்பம் ஆகிய 4 ராசிக்காரர்களுக்கு தொழில், நிதிநிலை மற்றும் குடும்ப வாழ்க்கையில் அதிர்ஷ்டகரமான முன்னேற்றங்கள் உண்டாகும்.

Written ByR Balaji
Published: Oct 26, 2026, 10:36 AM IST|Updated: Oct 26, 2026, 10:40 AM IST
joinshare
நவம்பர் 17ல் சூரிய பெயர்ச்சி.. இந்த 4 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் தேடி வரும்!

About the Author

R Balaji

R Balaji

நான் ஊடகத் துறையில் 5 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வருகிறேன். தற்போது ஜீ நியூஸ் தமிழில் Content Writer ஆக வேலை பார்க்கும் எனக்கு விளையாட்டு, அரசியல் மற்றும் க்ரைம் சார்ந்த செய்திகளை எழுதுவதில் அதிக ஆர்வம் உண்டு.
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
அர்னாப் புயல் தீவிரம்: 125 கி.மீ. வேக காற்று, 4 மாநிலங்களுக்கு ரெட் அலர்ட் -யாருக்கு பாதிப்பு?

அர்னாப் புயல் தீவிரம்: 125 கி.மீ. வேக காற்று, 4 மாநிலங்களுக்கு ரெட் அலர்ட் -யாருக்கு பாதிப்பு?

2

செர்பியாவில் மாணவர் ஆட்சி! 14 ஆண்டு கால கொடுங்கோலாட்சிக்கு முடிவு.. Students இயக்கம் வெற்றி பெற்றது எப்படி?

3

ராகுல் காந்தியின் வாகன அணியில் திடீர் விபத்து... பலர் காயம் -என்ன நடந்தது?

4

வரலாற்று சாதனை படத்தை ஜெயிலர் 2! ரூ.1000 கோடியை கடந்துடுமோ? மாஸ் காட்டும் ரஜினி..

5

நவம்பர் 17ல் சூரிய பெயர்ச்சி.. இந்த 4 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் தேடி வரும்!

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

சூரிய பகவான் அதிகாரம், தன்னம்பிக்கை, புகழ் மற்றும் தலைமை பண்புகளின் அடையாளமாக கருதப்படுகிறார். சூரியன் ஒவ்வொரு ராசியிலும் சுமார் ஒரு மாத காலம் சஞ்சரித்து, அடுத்த ராசிக்கு இடம்பெயர்கிறார். அந்த வகையில், தற்போது துலாம் ராசியில் பயணிக்கும் சூரியன் நவம்பர் 17 ஆம் தேதி விருச்சிக ராசிக்குள் நுழைய உள்ளார்.

செவ்வாய் பகவானின் ஆதிக்கம் கொண்ட விருச்சிக ராசிக்கு சூரியன் இடம்பெயர்வது முக்கியமான நிகழ்வாக பார்க்கப்படுகிறது. இந்த பெயர்ச்சி அனைத்து ராசிகளிலும் சில மாற்றங்களை ஏற்படுத்தினாலும், குறிப்பிட்ட 4 ராசிகளுக்கு தொழில், பணவரவு மற்றும் குடும்ப வாழ்க்கையில் சாதகமான சூழல் உருவாகலாம். அந்த ராசிகள் எவை என்பதை பார்க்கலாம்.

மேஷம்

மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த பெயர்ச்சி இலக்குகளை நோக்கி வேகமாக முன்னேறுவதற்கான உத்வேகத்தை அளிக்கக்கூடும். வேலை தொடர்பான விஷயங்களில் தன்னம்பிக்கை அதிகரிப்பதுடன், சக ஊழியர்கள் மற்றும் மேலதிகாரிகளிடம் நற்பெயரை பெறுவதற்கான வாய்ப்புகளும் உருவாகலாம். நீண்ட நாட்களாக முடிக்க முடியாமல் இருந்த பணிகளை திட்டமிட்டு நிறைவு செய்யலாம். வியாபாரத்தில் ஈடுபட்டிருப்பவர்கள் புதிய முயற்சிகளை தொடங்கவும், ஏற்கனவே உள்ள தொழிலை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்லவும் வாய்ப்புகள் கிடைக்கலாம். இதன் மூலம் வருமானத்தில் முன்னேற்றம் ஏற்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் தேவையற்ற செலவுகளை தவிர்த்து சேமிப்பில் கவனம் செலுத்துவது முக்கியம்.

சிம்மம்

சூரிய பகவான் சிம்ம ராசியின் அதிபதி என்பதால், இந்த பெயர்ச்சி சிம்ம ராசிக்காரர்களுக்கு கூடுதல் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. தங்களுடைய திறமைகளையும் தலைமை பண்புகளையும் வெளிப்படுத்துவதற்ஆன சந்தர்ப்பங்கள் கிடைக்கலாம். பணியிடத்தில் கூடுதல் கவனம் செலுத்துவதன் மூலம் செயல்திறனை மேம்படுத்தவும், புதிய பொறுப்புகளை ஏற்கவும் வாய்ப்புகள் உருவாகலாம். மாணவர்கள் கல்வியில் கூடுதல் ஆர்வத்துடன் செயல்படகூடும் தேர்வுகள் மற்றும் போட்டிகளில் சிறப்பாக செயல்பட திட்டமிட்டு படிப்பது உஅதவியாக இருக்கும். வியாபாரத்தில் இருப்பவர்கள் புதிய வாடிக்கையாளர்களை பெறவும், எதிர்கால வளர்ச்சிக்கு உஅதவும் ஒப்பந்தங்களை மேற்கொள்ளவும் வாய்ப்புகள் கிடைக்கலாம். சிலருக்கு எதிர்பாராத பணவரவு ஏற்படலாம்.

மகரம்

மகர ராசிக்காரர்களுக்கு சூரியப் பெயர்ச்சி நிதி மற்றும் குடும்ப வாழ்க்கையில் சாதகமான மாற்றங்களைக் கொண்டுவரும். நீண்ட காலமாகத் தீர்வு காணப்படாமல் இருந்த சில பிரச்சினைகளுக்கு முடிவு கிடைக்கலாம். எதிர்பாராத வருமான வாய்ப்புகள் உருவாகலாம் என்பதுடன், ஏற்கெனவே மேற்கொண்ட முயற்சிகளிலிருந்தும் பலன்கள் கிடைக்கக்கூடும். முதலீடுகள் மற்றும் வணிக ஒப்பந்தங்கள் தொடர்பாகச் செயல்படும்போது முழுமையான ஆய்வுக்கு பிறகே முடிவெடுப்பது நல்லது. குடும்பத்தினருடன் நேரத்தை செலவிடவும், வீட்டில் சுப நிகழ்ச்சிகளை திட்டமிடவும் ஏற்ற சூழல் அமையலாம். திருமணத்திற்காக காத்திருப்பவர்களுக்கு பொருத்தமான வரன் அமையும் வாய்ப்பு இருப்பதாகவும், திருமணமானவர்களின் உறவில் புரிதல் அதிகரிக்கலாம்.

கும்பம்

கும்ப ராசிக்காரர்களுக்கு இந்த சூரியப் பெயர்ச்சி தொழில் சார்ந்த முன்னேற்றத்திற்கான வாய்ப்புகளை உருவாக்கலாம். பணியிடத்தில் நீண்ட நாட்களாக எதிர்பார்த்துக் கொண்டிருந்த மாற்றங்கள் நிகழக்கூடும். புதிய வேலை தேடுபவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கலாம். ஏற்கெனவே பணியில் இருப்பவர்களுக்கு கூடுதல் பொறுப்புகள் அல்லது பதவி உயர்வு கிடைப்பதற்கான சூழல் அமையலாம். சொந்தமாக தொழில் நடத்துபவர்கள் தங்களுடைய செயல்பாடுகளை விரிவுபடுத்துவதற்கான திட்டங்களை மேற்கொள்ளலாம். இருப்பினும், முதலீடுகள் தொடர்பான முடிவுகளை அவசரமாக எடுக்காமல், நிதி நிலையை மதிப்பீடு செய்து செயல்படுவது அவசியம். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை வழக்கமான பழக்கவழக்கங்களைத் தொடர்ந்து கடைப்பிடிப்பது நன்மை தரும்.

பொறுப்பு துறப்பு: இதில் இடம்பெற்றுள்ள தகவல்கள் பொதுவானவை ஆகும். பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், நம்பிக்கைகளின் அடிப்படையில் எழுதப்பட்டவை. இதற்கு ஜீ நியூஸ் (Zee Tamil News) பொறுப்பேற்காது.
 

Add Zee News as a Preferred Source
TAGS:
Rasipalan