SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

சுக்கிரன் அஸ்தமனம்: அக்., 19 முதல் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 4 ராசிகள்! பணத்தில் நஷ்டம்

அக்டோபர் 19 முதல் 29 வரை சுக்கிரன் அஸ்தமனமடைவதால் ரிஷபம், மிதுனம், துலாம், மகரம் ஆகிய 4 ராசிக்காரர்கள் வேலை, பணம் மற்றும் உடல்நல விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும்.

Written By R Balaji
Published: Oct 15, 2026, 04:58 PM IST | Updated: Oct 15, 2026, 05:02 PM IST
Join

செல்வம், பொருளாதார வளர்ச்சி, காதல், அழகு மற்றும் ஆடம்பர வாழ்க்கை ஆகியவற்றுடன் தொடர்புடைய கிரகமாக சுக்கிரன் கருதப்படுகிறார். ரிஷபம், துலாம் ஆகிய ராசிகளுக்கு அதிபதியாக விளங்கும் சுக்கிரனின் சஞ்சாரத்தில் ஏற்படும் மாற்றங்கள், 12 ராசிகளிலும் வெவ்வேறு விதமான தாக்கங்களை ஏற்படுத்தும்.

தற்போது துலாம் ராசியில் சஞ்சரித்து வரும் சுக்கிரன், அக்டோபர் 19ஆம் தேதி அஸ்தமன நிலையை அடையவுள்ளதாக கூறப்படுகிறது. சூரியனுக்கு மிக அருகில் சுக்கிரன் பயணிக்கும்போது, ஜோதிடத்தில் அது அஸ்தமனம் என குறிப்பிடப்படுகிறது. இந்த நிலை அக்டோபர் 29ஆம் தேதி வரை நீடித்து, அதன் பிறகு சுக்கிரன் மீண்டும் உதயமாகும்.

இந்த காலகட்டத்தில் சில ராசிக்காரர்கள் பணம், வேலை, உடல்நலம் மற்றும் மனநிலை தொடர்பான விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும். அந்த வகையில், சுக்கிரன் அஸ்தமனத்தால் சவால்களை சந்திக்கும் 4 ராசிகள் குறித்து இங்கு பார்க்கலாம்.

ரிஷபம் (Taurus Zodiac Signs)

ரிஷப ராசிக்கான 6ம் வீட்டில் சுக்கிரன் அஸ்தமனயடைகிறது. இதனால் உடல்நலத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டிய சூழல் ஏற்படலாம். உடல்சோர்வு அல்லது உடல்நலக் குறைபாடுகள் காரணமாக பணிகளில் கவனம் செலுத்துவதில் சிரமம் ஏற்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. வேலை தொடர்பான பொறுப்புகள் அதிகரிப்பதுடன், எதிர்பார்த்த ஆதரவு கிடைப்பதிலும் தாமதம் ஏற்படலாம். இதனால் மனதில் கவலைகள் அதிகரிக்கக்கூடும். எனவே, உடல்நலத்தை அலட்சியப்படுத்தாமல், அன்றாட பணிகளையும் திட்டமிட்டு செய்வது நல்லது.

மிதுனம் (Gemini Zodiac Signs)

மிதுன ராசிக்கு 5ம் வீட்டில் சுக்கிரன் அஸ்தமனமடைவதால், தொழில் மற்றும் பொருளாதாரம் சார்ந்த விஷயங்களில் சில தடைகள் ஏற்படலாம். அலுவலகத்தில் சக ஊழியர்களுடன் கருத்து வேறுபாடுகள் உருவாகலாம். இதனால் பணிகளை முடிப்பதில் சிரமங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. தொழில் செய்து வருபவர்கள் புதிய முயற்சிகளை மேற்கொள்ளும்போது கூடுதல் கவனம் தேவைப்படலாம். எதிர்பார்த்த லாபம் கிடைக்காத நிலை அல்லது திடீர் செலவுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளது. எனவே, முக்கியமான முடிவுகளை அவசரமாக எடுக்காமல், வரவு செலவுகளை முறையாகத் திட்டமிடுவது உதவியாக இருக்கும்.

துலாம் (Libra Zodiac Signs)

சுக்கிரன் துலாம் ராசியின் முதல் வீட்டில் அஸ்தமனமடைவதால், இந்த ராசிக்காரர்கள் மனதளவில் சில ஏற்ற இறக்கங்களை சந்திக்கலாம். தன்னம்பிக்கை குறைவது போன்ற உணர்வு ஏற்படலாம் என்றும், வழக்கமாக கிடைக்கும் வசதிகளில் சில மாற்றங்கள் ஏற்படலாம். பண விஷயங்களில் அவசர முடிவுகளை தவிர்ப்பது அவசியம். குறிப்பாக, புதிய முதலீடுகளை மேற்கொள்வதற்கு முன்பு அதன் சாதக பாதகங்களை ஆராய வேண்டும். தனிப்பட்ட வாழ்க்கையில் ஏற்படும் சிறிய பிரச்சனைகளையும் பெரிதாக்காமல், நிதானமாக செயல்படுவது நல்லது.

மகரம் (Capricorn Zodiac Signs)

மகர ராசியின் பத்தாம் வீட்டில் சுக்கிரன் அஸ்தமனமடைவதால், தொழில் மற்றும் வேலை தொடர்பான விஷயங்களில் சில சவால்கள் ஏற்படலாம். பணியிடத்தில் கூடுதல் பொறுப்புகள் வரலாம். இதனால் வேலைகளை முடிப்பதில் தாமதம் ஏற்படுவதுடன், மன அழுத்தமும் அதிகரிக்கக்கூடும். வருமானம் எதிர்பார்த்த அளவில் இல்லாத நிலை அல்லது செலவுகள் அதிகரிப்பதால் நிதி நெருக்கடி ஏற்படும் சூழலும் உருவாகலாம். மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்துவதில் சிரமங்களை சந்திக்கலாம். தேர்வு முடிவுகளுக்காகக் காத்திருப்பவர்கள் தேவையற்ற கவலையை தவிர்த்து, அடுத்தகட்ட முயற்சிகளில் கவனம் செலுத்துவது நல்லது.

பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.
 

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

நான் ஊடகத் துறையில் 5 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வருகிறேன். தற்போது ஜீ நியூஸ் தமிழில் Content Writer ஆக வேலை பார்க்கும் எனக்கு விளையாட்டு, அரசியல் மற்றும் க்ரைம் சார்ந்த செய்திகளை எழுதுவதில் அதிக ஆர்வம் உண்டு.

ZEENEWS TRENDING STORIES