SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

சுக்கிரன் பெயர்ச்சி: 5 நாட்களுக்கு பிறகு 4 ராசிகளின் வாழ்க்கையே மாறப்போகுது

Sukran Peyarchi Palangal: செவ்வாய் கிரகத்தின் ஆதிக்கத்திற்கு உட்பட்ட ஒரு நட்சத்திரத்திற்குள் சுக்கிரன் நுழைவதால் அனைத்து ராசிகளிலும் மாற்றங்கள் ஏற்படும். எனினும், இந்த பெயர்ச்சியால் குறிப்பாக ரிஷபம், விருச்சிகம் மற்றும் மகர ராசிக்காரர்களுக்கு அதிக நன்மைகள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Written By Sripriya Sambathkumar
Published: Aug 20, 2026, 01:34 PM IST | Updated: Aug 20, 2026, 01:46 PM IST
Join

Sukran Peyarchi Palangal: அனைத்து கிரகங்களும் ஒரு குறிப்பிட்ட காலத்தில் தங்கள் ராசிகளை மாற்றுகின்றன. இவை கிரக பெயர்ச்சிகள் என அழைக்கப்படுகின்றன. இன்னும் நாட்களில் சுக்கிரன் மேற்கொள்ளவுள்ள பெயர்ச்சியால் அதிக நன்மைகளை அடையவுள்ள ராசிகளை பற்றி இந்த பத்வில் காணலாம்.

ஜோதிட சாஸ்திரத்தில், சுக்கிரன் மிகவும் சக்திவாய்ந்த கிரகங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறார். அவரது அருள் இருந்தால், வாழ்வில் செழிப்பு, பணம், செல்வம், வசீகரம் என அனைத்தும் மிக எளிதாக கிடைத்துவிடும். ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு, சுக்கிரன் தனது ராசி மற்றும் நட்சத்திரம் ஆகிய இரண்டையும் மாற்றிக்கொள்கிறார்.

சுக்கிரன் பெயர்ச்சி

சுக்கிரன் பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். தற்போது, ​​சுக்கிரன் கன்னி ராசியில் அமைந்துள்ளார். அவர் ஆகஸ்ட் 25 அன்று சுக்கிரன் ஹஸ்த நட்சத்திரத்திலிருந்து விலகி சித்திரை நட்சத்திரத்திற்குள் நுழைகிறார்.

நட்சத்திரங்களுக்கு இடையிலான சுக்கிரனின் இந்த நகர்வு 12 ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். செவ்வாய் கிரகத்தின் ஆதிக்கத்திற்கு உட்பட்ட ஒரு நட்சத்திரத்திற்குள் சுக்கிரன் நுழைவதால் அனைத்து ராசிகளிலும் மாற்றங்கள் ஏற்படும்.

எனினும், இந்த பெயர்ச்சியால் குறிப்பாக ரிஷபம், விருச்சிகம் மற்றும் மகர ராசிக்காரர்களுக்கு அதிக நன்மைகள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவர்களுக்கு நிதி ஆதாயங்கள் மற்றும் வேலை அல்லது தொழிலில் வெற்றியுடன், திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சியும் கிடைக்கக்கூடும்.

ஜோதிட கணக்கோடுகளின் படி, சுக்கிரன், 2026 ஆகஸ்ட் 25 செவ்வாய்க்கிழமை மதியம் 12:55 மணிக்கு சித்திரை நட்சத்திரத்திற்குள் நுழைந்து, செப்டம்பர் 11 வரை அங்கேயே இருப்பார். அதன்பிறகு, அவர் சுவாதி நட்சத்திரத்திற்குச் செல்வார். சித்திரை என்பது 27 நட்சத்திரங்களில் 14-வது நட்சத்திரமாகும், மேலும் இது செவ்வாய் கிரகத்தால் ஆளப்படுகிறது. இந்த நட்சத்திரம் கன்னி மற்றும் துலாம் ஆகிய ராசிகளில் பரவியுள்ளது.

சுக்கிரன் பெயர்ச்சி பலன்கள்

சித்திரை நட்சத்திரத்திற்குள் சுக்கிரன் நுழைவது மிகவும் மங்களகரமானதாகக் கருதப்படுகிறது. இது ஆடம்பரம், அன்பு மற்றும் காதல் உணர்வுகளை அதிகரிக்க வழிவகுக்கும். வருமானம் அதிகரிப்பதோடு, பணத்தைச் சேமிப்பதிலும் இந்த காலத்தில் வெற்றி கிடைக்கும். பேச்சிலும் செயலிலும் நிதானம் இருக்கும்.

மேலும் படிக்க | சனி ஆட்டம் ஆரம்பம்! இந்த 4 ராசிகளுக்கு ராஜவாழ்க்கை.. தொழில், வேலையில் வெற்றி

ஆகஸ்ட் 25 சுக்கிரன் பெயர்ச்சியால் அதிக நன்மைகளை அடையவுள்ள ராசிகளை பற்றி இங்கே காணலாம்.

ராசிகள்பலன்கள்
ரிஷபம்தீவிர உத்வேகத்தை உணர்வீர்கள்
விருச்சிகம்நிதி நிலை மேம்படும்
மகரம்மதிப்பும், மரியாதையும் கிடைக்கும்

ரிஷபம் (Taurus): தீவிர உத்வேகத்தை உணர்வீர்கள்.

சுக்கிரன் பெயர்ச்சி ரிஷப ராசிக்காரர்களுக்கு அனுகூலமான நன்மைகளை அளிக்கும். உங்கள் படைப்பாற்றலில் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை நீங்கள் காணலாம். இது புதிய கலை வடிவங்களைக் கற்றுக்கொள்ள உதவும். இது உங்கள் தொழில் வாழ்க்கைக்குப் பெரும் ஊக்கத்தை அளிக்கக்கூடும்.

அறிவுசார் திறன்களும் மேம்படலாம். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த பணிகள் நிறைவடையும், உங்கள் நிதி நிலை வலுவடையும், மேலும் எதிர்காலத்திற்காகப் பணத்தைச் சேமிப்பதில் நீங்கள் வெற்றிபெறலாம். தன்னம்பிக்கை அதிகரிப்பதோடு, உங்கள் இலக்குகளை அடைய வேண்டும் என்ற தீவிர உத்வேகத்தையும் நீங்கள் உணர்வீர்கள்.

இருப்பினும், சில சமயங்களில் தவறான முடிவுகளை எடுப்பதற்கான வாய்ப்பும் உள்ளது. ஆகையால், நன்கு யோசித்து முடிவுகளை எடுக்க முயற்சிக்கவும். இக்காலம் மாணவர்களுக்கும் மிகவும் சாதகமாக அமையலாம். படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். கலை, இசை போன்ற துறைகளுடன் தொடர்புடையவர்கள் பயனடையக்கூடும்.

மேலும் படிக்க | வரலட்சுமி விரதம் 2026: இந்த 3 ராசிகளுக்கு பணமழை.. ராஜயோகம் ஆரம்பம்!

விருச்சிகம் (Scorpio): நிதி நிலை மேம்படும்

சுக்கிரன் பெயர்ச்சி விருச்சிக ராசிக்காரர்களுக்கு லாபகரமானதாக இருக்கும். சித்திரை நட்சத்திரத்திற்குள் சுக்கிரன் நுழையும்போது, ​​சுக்கிரன் விருச்சிக ராசிக்கு 11-ம் வீட்டில் அமைந்திருப்பார். இதன் விளைவாக, இவ்விருச்சிக ராசிக்காரர்களின் நீண்ட கால விருப்பங்கள் நிறைவேறலாம். புதிய வருமான வழிகள் திறக்கப்படலாம்.

உங்கள் நிதி நிலை மேம்படும். மேலும் எதிர்காலத்திற்காகப் பணத்தைச் சேமிப்பதில் நீங்கள் வெற்றிபெறலாம். கடன் கொடுத்த பணம் திரும்பக் கிடைக்கலாம், மேலும் செல்வாக்கு மிக்க நபர்களுடன் தொடர்புகளை ஏற்படுத்திக்கொள்ளலாம்.

அலுவலக பணிகளில் உள்ளவர்களுக்கு ஊதிய உயர்வும், பதவி உயர்வும் கிடைக்க வாய்ப்புள்ளது. விரும்பிய இடத்திற்கு மாறுதல் கிடைப்பதற்கான வாய்ப்புகளும் உள்ளன. இருப்பினும் முன்னேற்றம் சற்று மெதுவாக இருக்கலாம். உயர் அதிகாரிகளிடமிருந்து உங்களுக்கு ஆதரவு கிடைக்கலாம். இது பல்வேறு துறைகளில் வெற்றிபெற உதவும்.

திருமண வாழ்க்கை மற்றும் கூட்டாண்மை சார்ந்த முயற்சிகளில் மன அழுத்தம் அல்லது இழப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது. இருப்பினும், பொறுமையுடனும் நிதானத்துடனும் செயல்படுவது வெற்றியைத் தரும். குழந்தைகளால் மகிழ்ச்சி கிடைக்கும்.

மகரம் (Capricorn): மதிப்பும், மரியாதையும் கிடைக்கும்

சுக்கிரன் பெயர்ச்சி மகர ராசிக்காரர்களுக்கு மகத்தான நன்மைகளை அளிக்கும். சுக்கிரன் சித்திரை நட்சத்திரத்திற்குள் நுழைந்த பிறகு 9-ம் வீட்டில் சஞ்சரிப்பார். சுக்கிர பெயர்ச்சியின் தாக்கத்தால் விருச்சிக ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தின் மூலம் பெரும் ஆதரவு கிடைக்கலாம்.

சுக்கிரன் அருளால் வாழ்க்கையில் தொடர்ந்து வந்த சிக்கல்கள் முடிவுக்கு வரலாம். மேலும் கௌரவம் மற்றும் நற்பெயர் விரைவாக உயர்வதற்கான அறிகுறிகள் உள்ளன. கூடுதலாக, நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த பணிகள் நிறைவடையும், மேலும் நீண்ட காலமாக நீங்கள் கடினமாக உழைத்து வந்த முயற்சிகளில் இறுதியாக வெற்றியை அடையலாம்.

சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் கிடைக்கும். நீங்கள் உங்கள் வேலையில் முழு கவனத்தைச் செலுத்த முடியும். இது வெற்றிக்கு வழிவகுக்கலாம். அத்துடன், வணிகத்தில் ஈடுபட்டுள்ளவர்களும் பயனடையக்கூடும். நீங்கள் உங்கள் வாழ்க்கைத் துணையுடன் பயணம் மேற்கொள்ள நேரிடலாம். இக்காலம் மாணவர்களுக்கும் சாதகமாக அமையக்கூடும். படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும்.

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | குரு பெயர்ச்சி: இன்று முதல் 4 ராசிகளுக்கு அட்டகாசமான நேரம்.. அள்ளிக்கொடுப்பார் குரு!!

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

ஸ்ரீப்ரியா சம்பத், 6 ஆண்டுகளுக்கும் மேல் மீடியாவில் பணியாற்றி வருகிறார். இவர், வணிகம் மற்றும் தனிநபர் நிதி (Personal Finance) சார்ந்த கட்டுரைகளை எழுதுவதில் நிபுணத்துவம் பெற்றவர். மத்திய பட்ஜெட்டுகள், வங்கித் துறை, வருமான வரி, பங்குச் சந்தைகள் மற்றும் நாட்டின் ஒட்டுமொத்தப் பொருளாதாரம், மத்திய அரசு ஊழியர்கள், ஊதியக் குழுக்கள் (Pay Commissions), ஓய்வூதியத் திட்டங்கள், ஓய்வூதியதாரர்கள், அரசின் முக்கியக் கொள்கைகள் மற்றும் சர்வதேச விவகாரங்களில் பல கட்டுரைகளை எழுதியுள்ளார்.எழுத்தை வாசகர்களோடு இணைவதற்கான ஒரு சிறந்த பாலமாகக் கருதும் இவர், அவர்களின் தேவைகளுக்கும் ஆர்வங்களுக்கும் முன்னுரிமை அளிக்கிறார். வாசகர்களுடன் இயல்பான, உண்மையான மற்றும் நேர்மையான தொடர்பைக் கொண்டிருப்பதே இவரின் முதன்மை இலக்காகும். பணி நேரத்தைத் தாண்டி, புத்தகங்கள் வாசிப்பது, புதிய இடங்களுக்குப் பயணம் செய்வது மற்றும் அறிவுசார் விவாதங்களில் பங்கேற்பது இவருக்கு மிகவும் பிடித்தமானவை.

ZEENEWS TRENDING STORIES