SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

ஆஸி அணியின் மிரட்டல் கம்பேக்! வங்கதேசத்தை வாரி சுருட்டி 2வது டெஸ்டில் அசத்தல் வெற்றி

Cricket News: 10 விக்கெட்டுகளை வீழ்த்தி மிரட்டிய மிட்செல் ஸ்டார்க், பங்களாதேஷை இன்னிங்ஸ் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆஸ்திரேலியா பழிதீர்த்தது.

Written By Karthikeyan Sekar
Published: Aug 24, 2026, 02:09 PM IST | Updated: Aug 24, 2026, 02:13 PM IST
Join

Cricket News : முதல் டெஸ்டில் வங்கதேசத்திடம் 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வரலாற்றுத் தோல்வியைத் தழுவிய ஆஸ்திரேலிய அணி, 2வது டெஸ்டில் மிக ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்தி இன்னிங்ஸ் மற்றும் 51 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய கேப்டன் பாட் கம்மின்ஸ், வங்கதேசத்தை முதலில் பேட்டிங் செய்யப் பணித்தார். வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் தொடக்கத்திலேயே வங்கதேசத்தின் பேட்டிங் வரிசையைத் தகர்த்தார். ஸ்டார்க்கின் அசுர வேகத்திற்கு ஈடுகொடுக்க முடியாமல் வங்கதேசம் முதல் இன்னிங்ஸில் வெறும் 64 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. ஸ்டார்க் வெறும் 12 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுகளை அள்ளினார்; கேப்டன் கம்மின்ஸ் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி துணை நின்றார்.

ஷோரிஃபுல் இஸ்லாமின் பதிலடி

இதையடுத்து முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய ஆஸ்திரேலிய பேட்டர்களுக்கும் வங்கதேச வேகப்பந்து வீச்சாளர் ஷோரிஃபுல் இஸ்லாம் கடும் நெருக்கடி தந்தார். கேமரூன் கிரீன் (67), ஸ்டீவ் ஸ்மித் (42) மற்றும் நேதன் லயன் (32*) ஆகியோரின் பங்களிப்பால் ஆஸ்திரேலியா 210 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. ஷோரிஃபுல் இஸ்லாம் சிறப்பாகப் பந்துவீசி 48 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளைச் சாய்த்தார். இருப்பினும், முதல் இன்னிங்ஸில் வங்கதேசம் குறைவான ரன்கள் எடுத்திருந்ததால், ஆஸ்திரேலியாவுக்கு 146 ரன்கள் வலுவான முன்னிலை கிடைத்தது.

இரண்டாவது இன்னிங்ஸிலும் ஸ்டார்க் ஆதிக்கம்

146 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2வது இன்னிங்ஸைத் தொடங்கிய வங்கதேச பேட்டர்களை மீண்டும் ஆஸ்திரேலிய பந்துவீச்சு கூட்டணி நிலைைகுலையச் செய்தது. நஜ்முல் சாண்டோ அடித்த 31 ரன்களைத் தவிர மற்ற வீரர்கள் ஒற்றை இலக்கத்தில் வெளியேறினர். வங்கதேசம் 2வது இன்னிங்ஸில் 95 ரன்களுக்கு சுருண்டது. மிட்செல் ஸ்டார்க் 4/39, பாட் கம்மின்ஸ் 3/10, நேதன் லயன் 3/25, இப்போட்டியில் இரு இன்னிங்ஸ்களையும் சேர்த்து மொத்தம் 10 விக்கெட்டுகளை (10/51) வீழ்த்திய மிட்செல் ஸ்டார்க், ஆட்டநாயகன் மற்றும் தொடர் நாயகன் விருதுகளை வென்றார்.

சமனில் முடிந்த தொடர்

இந்த வெற்றியின் மூலம் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் 1-1 என சமனில் முடிவடைந்தது. ஆஸ்திரேலிய மண்ணில் ஒரு டெஸ்டில் வெற்றி பெற்று தொடரை சமன் செய்த வங்கதேச அணிக்கு இது வரலாற்றுச் சிறப்புமிக்க சுற்றுப்பயணமாக அமைந்தது. அதே சமயம், ஸ்விங் மற்றும் பவுன்ஸ் உள்ள ஆடுகளங்களில் மிட்செல் ஸ்டார்க்கின் பந்துவீச்சை எதிர்கொள்வது பேட்டர்களுக்கு இன்றளவும் ஒரு சிம்மசொப்பனம் என்பதை இந்த ஆட்டம் மீண்டும் நிரூபித்துள்ளது.

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

I have 10 years of experience in writing content for news, television, and digital media websites. I have extensive experience in government projects, politics, and other fields. I provide quality news with factual information.

ZEENEWS TRENDING STORIES