• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /விளையாட்டு
  • /11 வீரர்களை கழட்டிவிடும் CSK? சாய் கிஷோரை டிரேட் செய்ய திட்டம்.. மெகா பிளான்!

11 வீரர்களை கழட்டிவிடும் CSK? சாய் கிஷோரை டிரேட் செய்ய திட்டம்.. மெகா பிளான்!

ஐபிஎல் 2027 சீசனை முன்னிட்டு சிஎஸ்கே அணியில் 11 வீரர்களை விடுவிப்பது, சாய் கிஷோரை டிரேடிங் செய்வது உள்ளிட்ட பல்வேறு மாற்றங்கள் குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன.

Written ByR Balaji
Published: Sep 30, 2026, 06:43 PM IST|Updated: Sep 30, 2026, 06:46 PM IST
joinshare
11 வீரர்களை கழட்டிவிடும் CSK? சாய் கிஷோரை டிரேட் செய்ய திட்டம்.. மெகா பிளான்!

About the Author

R Balaji

R Balaji

நான் ஊடகத் துறையில் 5 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வருகிறேன். தற்போது ஜீ நியூஸ் தமிழில் Content Writer ஆக வேலை பார்க்கும் எனக்கு விளையாட்டு, அரசியல் மற்றும் க்ரைம் சார்ந்த செய்திகளை எழுதுவதில் அதிக ஆர்வம் உண்டு.
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
Explained: இந்து மதத்திலிருந்து இஸ்லாமுக்கு மாறினால் BCM இடஒதுக்கீடு கிடைக்குமா? உச்ச நீதிமன்றம் சொல்வது என்ன?

Explained: இந்து மதத்திலிருந்து இஸ்லாமுக்கு மாறினால் BCM இடஒதுக்கீடு கிடைக்குமா? உச்ச நீதிமன்றம் சொல்வது என்ன?

2

ஷேர் மார்க்கெட்டில் லாபம் பார்க்க கைகொடுக்கும் AI... நிறுவனங்களின் ஜாதகத்தையே அலசும் Kwala Intel!

3

வீட்டில் இருந்தே போராட்டம் நடத்தலாம்.. ‘ஜந்தர் மந்தர் சலோ’ வீடியோ கேம் அறிமுகம்!

4

முதல்வர் விஜயின் கோவை விசிட்: ரூ.438.86 கோடி மதிப்பிலான திட்டங்கள் தொடங்கி வைப்பு!

5

16 வயது சிறுமி எழுதிய சாதனை புத்தகம்! PCI தலைவர் தேவேந்திர ஜஜாரியா பாராட்டு…

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

கடந்த மூன்று ஐபிஎல் சீசன்களிலும் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற முடியாத நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 2027 சீசனை முன்னிட்டு பல்வேறு மாற்றங்களை மேற்கொண்டு வருகிறது. அணியின் தலைமை பயிற்சியாளர் பொறுப்பில் நீண்ட காலமாக இருந்த ஸ்டீபன் பிளெமிங்கிற்கு பதிலாக ஜாகீர் கான் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், அணியை மறுசீரமைக்கும் பணிகள் தீவிரமடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

ஜாகீர் கானுக்கு அணியின் நிர்வாகத்தில் பல்வேறு மாற்றங்களை மேற்கொள்ள சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் ஒரு பகுதியாகவே பந்துவீச்சு பயிற்சியாளர் பதவிக்கு மோகித் சர்மா கொண்டுவரப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

11 வீரர்களை விடுவிக்க திட்டம்?

ஐபிஎல் 2027 மினி ஏலத்திற்கு முன்பாக அணியில் உள்ள சில வீரர்களை விடுவிக்க சிஎஸ்கே நிர்வாகம் திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. அந்த பட்டியலில் வெளிநாட்டு வீரர்கள் உட்பட 11 பேர் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

வெளிநாட்டு வீரர்களில் மேத்யூ ஷார்ட், ஜாக் போல்க்ஸ், மேட் ஹென்ட்ரி மற்றும் ஸ்பென்சர் ஜான்சன் ஆகியோர் விடுவிக்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இவர்களுடன் குல்தீப் யாதவ், மேக்னில் நொரோன்ஹா, ராகுல் சஹார், சர்பராஸ் கான், அமன் கான் மற்றும் பிரசாந்த் வீர் ஆகிய இந்திய வீரர்களின் பெயர்களும் வெளியாகி உள்ளன.

சிஎஸ்கேவின் பிளேயிங் லெவன் தொடர்பான ஒரு கட்டமைப்பு ஓரளவுக்கு உறுதி செய்யப்பட்டுள்ளதால், அணிக்கு தேவையில்லாத வீரர்களை விடுவித்து ஏலத்தில் புதிய வீரர்களை தேர்வு செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக இங்கிலாந்து வீரர்களான ஹாரி புரூக் மற்றும் ஜோஷ் டங் ஆகியோரை ஏலத்தில் வாங்குவதற்கான முயற்சியில் சிஎஸ்கே நிர்வாகம் ஈடுபடாலம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்காக அணியின் பர்ஸில் கூடுதல் தொகையை உருவாக்கும் வகையில் சில வீரர்களை முன்கூட்டியே விடுவிக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படலாம் எனவும் கூறப்படுகிறது.

சாய் கிஷோருக்கு குறி?

இதனிடையே குஜராத் டைட்டன்ஸ் அணியில் உள்ள சாய் கிஷோரை டிரேடிங் முறையில் அணிக்குள் கொண்டுவர சிஎஸ்கே ஆர்வம் காட்டுவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. குஜராத் அணியில் ரஷித் கான், வாஷிங்டன் சுந்தர், சாய் கிஷோர், மனவ் சுதார் உள்ளிட்ட சுழற்பந்து வீச்சு ஆல்-ரவுண்டர்கள் உள்ளனர். இதில் சில வீரர்களுக்கு மட்டுமே தொடர்ச்சியான வாய்ப்புகள் கிடைப்பதால், சாய் கிஷோரை டிரேடிங் மூலம் பெறும் முயற்சியை சிஎஸ்கே மேற்கொள்ளலாம் என கூறப்படுகிறது.

சாய் கிஷோருக்கான டிரேடில் சர்பராஸ் கானை மாற்று வீரராக வழங்குவது அல்லது பணப் பரிமாற்றத்தின் மூலம் ஒப்பந்தத்தை மேற்கொளவது குறித்து ஆலோசனை நடைபெறுவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

பிரசாந்த் வீருக்கு மீண்டும் வாய்ப்பு?

பிரசாந்த் வீரையும் அணியில் இருந்து விடுவிக்கும் முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும், மினி ஏலத்தில் அவரை எந்த அணியும் தேர்வு செய்யாத பட்சத்தில் குறைந்த தொகைக்கு மீண்டும் அணிக்குள் அழைத்து வர சிஎஸ்கே திட்டமிடலாம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அவரால் எதிர்பார்த்த அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்த முடியவில்லை என்ற கருத்து ஒருபுறம் இருந்தாலும், விக்கெட் கீப்பிங் செய்யும் திறன் இருப்பது கூடுதல் வாய்ப்பாக பார்க்கப்படுவதாக கூறப்படுகிறது.

பேட்டிங் பயிற்சியாளர் மாற்றமா?

பந்துவீச்சு பயிற்சியாளர் பதவிக்கு மோகித் சர்மா நியமிக்கப்பட்டுள்ள நிலையில், பேட்டிங் பயிற்சியாளர் குழுவிலும் மாற்றம் செய்யப்படலாம் என்ற தகவல் வெளியாகி உள்ளது. சிஎஸ்கே அணிக்காக விளையாடிய முன்னாள் வீரர்களான சுரேஷ் ரெய்னா அல்லது அம்பத்தி ராயுடு ஆகியோரில் ஒருவருக்கு அந்த பொறுப்பு வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. அணியின் பயிற்சியாளர் குழுவில் சிஎஸ்கேவுக்காக ஏற்கனவே விளையாடிய முன்னாள் வீரர்களுக்கு முக்கியத்துவம் அளிக்க நிர்வாகம் திட்டமிட்டு வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 
 

Add Zee News as a Preferred Source
TAGS:
Chennai Super Kings