SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

CSK புதிய பயிற்சியாளர்: EX வீரருக்கே வாய்ப்பு.. நிர்வாகம் அதிரடி முடிவு!

CSK Latest News: ஸ்டீபன் பிளெமிங்கிற்கு மாற்றாக புதிய தலைமை பயிற்சியாளரை தேடி வரும் சிஎஸ்கே, பல முன்னணி பெயர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் மைக்கேல் ஹசிக்கு பொறுப்பு வழங்குவது குறித்து ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

Written By R Balaji
Published: Sep 18, 2026, 12:01 IST | Updated: Sep 18, 2026, 12:04 IST
Join

சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாகம் தனது அணியை மீண்டும் கட்டமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது. அதன் முதல்படியாகவே பயிற்சியாளர் ஸ்டீபன் பிளேமிங்கை நீக்கிவிட்டு புது பயிற்சியாளரை தேடி வருகின்றனர். இதற்காக முன்னணி பயிற்சியாளர்கள் பலருடன் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அவை எதுவுமே சிஎஸ்கே நிர்வாகத்திற்கு கைகொடுக்கவில்லை. இந்த நிலையில், 2027 ஐபிஎல் சீசனுக்காக தற்காலிகமாக வேறு ஒரு திட்டத்தை சிஎஸ்கே வகுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

முதலில் டிராவிட்டை அணுகிய சிஎஸ்கே

புதிய தலைமை பயிற்சியாளர் தேடலில் சிஎஸ்கேவின் முதன்மை தேர்வாக ராகுல் டிராவிட் இருந்ததாக கூறப்பட்டது. அவருடன் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும், தலைமை பயிற்சியாளராக பொறுப்பேற்றால் அணியின் அனைத்து முடிவுகளையும் நானே எடுப்பேன். எனது முடிவில் தோனியின் தலையீடு இருக்கக்கூடாது என டிராட் கண்டிஷ்ன் போட்டதாகவும், இதனால் இந்த பேச்சுவார்த்தை இறுதி கட்டத்தை எட்டவில்லை என்றும் தகவல்கள் வெளியாகின.

பிரண்டன் மெக்கல்லத்துடனும் பேச்சுவார்த்தை தோல்வி?

டிராவிட்டுடன் பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததை அடுத்து, இங்கிலாந்து அணியின் தற்போதைய பயிற்சியாளர் பிரெண்டன் மெக்கல்லத்தை சிஎஸ்கே நிர்வாகம் தொடர்பு கொண்டு பேசியதாம். ஆனால் சிஎஸ்கே அணியுடன் இணைவதில் மெக்கல்லம் ஆர்வம் காட்டவில்லையாம்.

தொடர்ச்சியாக இரண்டு பேரிடம் பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததால், புதிய பயிற்சியாளர் தேர்வில் சிஎஸ்கே நிர்வாகத்திற்கு சிக்கல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இயான் மோர்கனிடம் சென்ற சிஎஸ்கே

இதன் பிறகு இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் இயான் மோர்கனை அணுகும் முயற்சி மேற்கொள்ளப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த ஆலோசனையை முன்வைத்தவர்களில் மகேந்திர சிங் தோனியும் ஒருவர் என கூறப்படுகிறது. மேலும், மோர்கனுடன் நேரடியாக பேசி அவரை சம்மதிக்க வைக்க தோனி இங்கிலாந்து சென்றதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சிஎஸ்கே அணியின் தலைமை பயிற்சியாளர் பொறுப்பை ஏற்க மோர்கன் சம்மதம் தெரிவித்ததாக கூறப்பட்டாலும், ஊதிய விஷயத்தில் இருதரப்புக்கும் இடையே உடன்பாடு ஏற்படவில்லை என தெரிகிறது.

ரூ. 20 கோடியில் தொடங்கி ரூ. 15 கோடியில் நின்ற பேச்சுவார்த்தை

மோர்கன் ஆரம்ப கட்ட பேச்சுவார்த்தையில் ரூ. 20 கோடி வரை சம்பளம் கேட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. தொடர்ந்து நடைபெற்ற பேச்சில் அந்த தொகையை ரூ. 15 கோடி வரை குறைக்க அவர் தயாராக இருந்ததாக கூறப்படுகிறது. இருப்பினும், இந்த தொகைக்கும் சிஎஸ்கே நிர்வாகம் ஒப்புதல் அளிக்கவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஐபிஎல் அணிகளில் தலைமை பயிற்சியாளர்களுக்கு வழங்கப்படும் ஊதியத்தை ஒப்பிடும்போது, இந்த தொகை மிக அதிகமாக இருப்பதாக சிஎஸ்கே கருதியதாக கூறப்படுகிறது. தற்போது பஞ்சாப்கிங்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக உள்ள ரிக்கி பாண்டிங், சுமார் ரூ. 9.5 கோடி ஊதியம் பெறுவதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்த நிலையில், மோர்கனுக்காக ரூ. 9 கோடி வரை வழங்க சிஎஸ்கே நிர்வாகம் தயாராக இருந்ததாக கூறப்படுகிறது. ஆனால், மோர்கன் அந்த தொகையில் சம்மதிக்கவில்லை என தெரிகிறது.

மைக்கேல் ஹசிக்கு புது பொறுப்பு?

புதிய தலைமை பயிற்சியாளர் நியமனத்தில் ஏற்பட்ட இந்த தாமதத்துக்கு மத்தியில், சிஎஸ்கே நிர்வாகம் தற்போதைக்கு அணிக்குள் இருக்கும் ஒருவரை முன்னிலைப்படுத்தும் முடிவுக்கு வந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி, அணியின் பேட்டிங் பயிற்சியாளர் மைக்கேல் ஹசியை ஐபிஎல் 2027சீசனுக்கான பொறுப்பு தலைமை பயிற்சியாளராக நியமிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த பொறுப்புக்காக ஹசிக்கு சுமார் ரூ. 2 கோடி வரை ஊதியம் வழங்க சிஎஸ்கே முடிவு செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. 2027 சீசனில் அவரது செயல்பாட்டை அடிப்படையாக கொண்டு ஆடுத்த கட்ட முடிவை எடுக்க நிர்வாகம் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ஐபிஎல் 2027 சீசனை மைக்கேல் ஹசியின் தலைமையில் எதிர்கொண்டு, அவரது செயல்பாட்டை கண்காணிக்க சிஎஸ்கே திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அணியால் அந்த சீசனிலும் பிளே ஆஃப் சுற்றுக்கு செல்ல முடியவில்லை என்றால், அடுத்த மெகா ஏலத்திற்கு முன்பாகவே புதிய தலைமை பயிற்சியாளரை தேர்வு செய்யும் முடிவை நிர்வாகம் எடுக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனிடையே, தலைமை பயிற்சியாளர் விவகாரத்தை தற்காலிகமாக முடித்த பிறகு வீரர்கள் தொடர்பான டிரேடிங் பேச்சுவார்த்தைகளில் கூடுதல் கவனம் செலுத்தவும் சிஎஸ்கே நிர்வாகம் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

நான் ஊடகத் துறையில் 5 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வருகிறேன். தற்போது ஜீ நியூஸ் தமிழில் Content Writer ஆக வேலை பார்க்கும் எனக்கு விளையாட்டு, அரசியல் மற்றும் க்ரைம் சார்ந்த செய்திகளை எழுதுவதில் அதிக ஆர்வம் உண்டு.
Read More

ZEENEWS TRENDING STORIES