SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

CSK வீரருக்கு 2 ஆண்டுகள் விளையாட தடை? யார் அவர்? என்ன நடந்தது?

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வீரர் ஒருவருக்கு இரண்டு வருடம் விளையாட தடை விதிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அவர் யார்? என்ன காரணம் என்பது குறித்து இங்கு விரிவாக பார்க்கலாம்.

Reported By R Balaji Written By R Balaji
Published: Aug 15, 2026, 01:38 PM IST | Updated: Aug 15, 2026, 01:42 PM IST
Join

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தான் சந்தித்த கடும் தடுமாற்றத்தில் இருந்து மீண்டெழ இப்போதில் இருந்தே திட்டமிட்டு வருகிறது. கடைசியாக 2023 ஆம் ஆண்டில் ஐபிஎல் கோப்பை வென்ற நிலையில், 2024, 2025, 2026 என அடுத்த மூன்று ஆண்டுகள் பிளே ஆஃப் சுற்றுக்கு கூட முன்னேற முடியாமல் தடுமாறியது. இதனை சரி செய்ய கடந்த 2026 ஐபிஎல்லிலேயே சிஎஸ்கே அணி நிர்வாகம் முயன்றது.

அதாவது சென்னை அணியின் ஓர் முகமாக இருந்த ரவீந்திர ஜடேஜாவை ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு விட்டுக்கொடுத்து சஞ்சு சாம்சனை வாங்கியது. அதேசமயம் ஏலத்தின் மூலம் பிரசாந்த் வீர் மற்றும் கார்த்திக் சர்மாவை ரூ. 28 கோடி செலவு செய்து வாங்கியது. ஆனால் இந்த முயற்சி தோல்வியே அடைந்தது. சஞ்சு சாம்சன் எடுத்ததன் மூலம் டாப் ஆர்டர் பலம் அடைந்திருந்தாலும், ஜடேஜாவின் இடத்திற்கு இன்னும் சரியான ஆள் கிடைக்கவில்லை. அவர்கள் எதிர்பார்த்த பிரசாந்த் வீர் அந்த இடத்திற்கு செட் ஆகவில்லை.

2027ல் கம்பேக் கொடுக்க சிஎஸ்கே திட்டம்

இந்த சூழலில்தான், தற்போது மீண்டும் அணியை கட்டமைக்க திட்டமிட்டு வருகிறது. மூன்று ஆண்டுகளாக கடந்த சரிவை 2027 ஆம் ஆண்டு ஐபிஎல்லில் மீட்டெடுக்க வேண்டும் என நிர்வாகம் நினைக்கிறது. ஏற்கனவே கண்ட சரிவால் சிஎஸ்கே அணியின் பிராண்ட் வேல்யூ கணிசமாக குறைந்துள்ளது. இந்த நிலைமை தொடர்ந்தால், கடும் சரிவை சந்திக்கும் நிலை ஏற்படும். இதனால், சரியாக திட்டமிட்டு தேவைப்படும் வீரர்களை எடுக்க சிஎஸ்கே முடிவு செய்துள்ளது.

சர்பராஸ் கானுக்கு 2 ஆண்டுகள் தடை?

அதன் முதல்படியாகவே 18 ஆண்டுகளாக தலைமை பயிற்சியாளராக பொறுப்பு வகித்த ஸ்டீபன் பிளமிங்கை நீக்கிவிட்டு தற்போது புது பயிற்சியாளரை தேடி வருகிறது. அதேபோல் ஹர்திக் பாண்டியா, குஜராத் டைட்டன்ஸ் அணியில் இருந்து வாஷிங்டன் சுந்தர், சாய் கிஷோர் ஆகியோரை வாங்க முடிவு செய்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இந்த நிலையில், சிஎஸ்கே அணி வீரர் சர்பராஸ் கானை 2 ஆண்டுகளுக்கு விளையாட தடை விதிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

என்ன நடந்தது?

அதாவது, தற்போது கேப்டனாக இருக்கும் ருதுராஜ் கெய்காவாட்டை நீக்கிவிட்டு சஞ்சு சாம்சனை கேப்டனாக நியமிக்க வேண்டும் என குரல்கள் எழும்ப தொடங்கி உள்ளன. அணி நிர்வாகமும் இது குறித்து ஆலோசித்து வருகிறது. இதற்கிடையில், சர்பராஸ் கான் அவரது இன்ஸ்டாகிராம் பதிவில்,  எங்கள் தலைவர் சஞ்சு சாம்சன் என பதிவிட்டுள்ளார். இந்த பதிவு சர்ச்சையான நிலையில், சிறிது நேரத்திலேயே அந்த பதிவை சர்பராஸ் கான் நீக்கிவிட்டார்.

விளக்கத்தை பொறுத்து நடவடிக்கை

பேச்சுவார்த்தை நடத்து வரும் நிலையில், சர்பராஸ் கான் இப்படி வெளிப்படையாக பதிவிட்டது சிஎஸ்கே அணி நிர்வாகத்திற்கு அதிருப்தியை கொடுத்துள்ளது. இது தொடர்பாக சர்பராஸ் கானிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. அவர் விளக்கம் கொடுக்காத பட்சத்தில் சிஎஸ்கே அணி பிசிசிஐ-யிடம் புகார் கொடுக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது. அப்படி பிரச்சனை பெரிதானால் சர்பராஸ் கானை 2 வருடங்கள் வரை ஐபிஎல் விளையாட தடை விதிக்க வாய்ப்புள்ளது. மேலும், சர்பராஸ் கான் விளக்கம் அளிக்கும் நிலையில், இறுதி முடிவை தோனி எடுப்பார் என கூறப்படுகிறது.  
 

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

நான் ஊடகத் துறையில் 5 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வருகிறேன். தற்போது ஜீ நியூஸ் தமிழில் Content Writer ஆக வேலை பார்க்கும் எனக்கு விளையாட்டு, அரசியல் மற்றும் க்ரைம் சார்ந்த செய்திகளை எழுதுவதில் அதிக ஆர்வம் உண்டு.

ZEENEWS TRENDING STORIES